இடஒதுக்கீடு வெறும் பிச்சையல்ல - நமது உரிமை!
நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்!
வடக்கேயும் தந்தை பெரியார் தொண்டெனும் வான்மழை!
புதுக் கணக்கு, புது வெள்ளம் மடை திறந்த காட்சி!
தமிழர் தலைவரின் நேரடி வருணனை
வாரணாசியில் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் அமைப்புகள் சங்கமித்த சமூகநீதி விழாவின் நேர்த் தியையும், மாட்சியையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேரிடை வருணனையாகத் தரும் தகவல்கள் இதோ!
உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாரணாசி மாநகரத்தில் ஒரு (முன்னாள் காசி என்ற பெயர் பெற்ற நகரம்) மாபெரும் சமூக நீதித் திருவிழா 7.8.2011 ஞாயிறு மாலை 6 மணியளவில், பிரபல நட்சத்திர ஓட்டலான கிளார்க்ஸ் மாநாட்டு அரங்கத்தில் உ.பி. மாநில பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலக் கூட்டமைப்பின் (Federation of other Backward Classes (OBC) Employees Welfare Association) சார்பில் மிகச் சிறப்பாக மாலை 6 மணிக்குத் துவங்கி இரவு 10.30 மணி வரை நடை பெற்றது; அதற்குப் பிறகு வந்து பங்கேற்ற குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்த சுமார் 1000 (ஆயிரம்) பேர் களுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரவு விருந்தும் அளிக்கப்பட்டு (இரவு 11.30 மணிக்கு) விழா நேர்த்தியாக நிறைவுற்றது.
பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் சங்கமம்!
மத்திய அரசு, மாநில அரசு, பொதுத் துறை அமைப் புகள், வருமானவரி, யூனியன் வங்கி, வணிக அமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இப்படி பல அமைப்புகளும் இணைந்து இந்த சமூக நீதி - மாநாடு - அய்.ஏ.எஸ்.; அய்.ஆர்.எஸ்.; அய்.பி.எஸ். தேர்வுகளில் உ.பி. பீகார் மாநிலங்களில் இவ்வாண்டு தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய வெற்றியாளர்களுக்குப் பாராட்டும் இதில் இணைந்து நடத்தப்பட்டது.
ஏற்பாடுகளை மிகவும் முறையாகவும் பாராட்டத் தக்கனவாகவும் ஏற்பாட்டாளர்களான, அமைப்பாளர்கள் குறிப்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர். ரவிந்திரராம். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமிர்த்தான்ஷு, அதன் தலைவரான மத்திய அரசின் பல்கலைக் கழகமான காசி வித்தியாபீடத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எஸ். குஷ்வாகா அவர்களும், அசோக் குமார் கூட்டமைப்பின் உ.பி. செயலாளர், அசோக் ஆனந்த் (Voice of the OBC இந்தி பதிப்பு ஆசிரியர் கல்வியாளர்) ஆகியோரும் அவருடன் ஒத்துழைத்த பல நண்பர்களும் ஆர்வம் கரை புரண்டோட சமூகநீதித் திருவிழாவை நடத்தி வரலாறு படைத்தனர்.
பங்கேற்ற பிரமுகர்கள்
வாரணாசியின் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் கலெக்ட ருமான திரு ரவீந்திரா அய்.ஏ.எஸ். பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, யூனியன் வங்கி பொதுமேலாளர் திரு பி.கே. பன்சால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், காசி பல்கலைக் கழக மேனாள் இந்திப் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர் சவுத்திராம்யாதவ், பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவிக் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவரான டாக்டர் பாபுராம் நிஷாத், ஆகியோர் சிறப்பு பேச்சாளராக, விழாத் தலைவராக, துவக்குபவர்களாக, பரிசளிப்பவர்களாகக் கலந்து கொண்டனர். தலைமை விருந்தினராக என்னை அழைத்து உரையாற்றிடச் செய்தனர்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளரான ஆற்றல்மிகு நண்பர் கோ. கருணாநிதி அவர்களை முக்கிய சிறப்புப் பேச்சாளராக அழைத்து பெருமைப்படுத்தினார்கள்.
வான் மழையாய் வந்த பெரியார் தொண்டு!
பேசியவர்கள் மாவட்டக் கலெக்டரிலிருந்து ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக உணர்ச்சிப் பிழம்பாக பேசினர். சுமார் 10,12 பேர்கள் அய்.எஸ்.அய்.பி.எஸ். தேர்வு பெற்ற மணிமணியான இளைஞர்கள், பிரகாசிக்கும் முகங்களோடு உற்சாகம் பொங்க அமர்ந்திருந்து பாராட்டும் பரிசும் - பெரியார் நூல்களும் - பெற்றனர்!
அவர்களது பெற்றோர்கள், வாழ்விணையர்கள் உடன் வந்து அவர்களும் பாராட்டுப் பெற்றபோது கண்ணீர் விட்டு உவகை பொங்க மகிழ்ந்த காட்சி, தந்தை பெரியார் தம் தொண்டு எப்படியெல்லாம் வடக்கேயும் இன்று வாடிய பயிர்களுக்கு வான்மழையாய் வந்தடைந்தது என்று பூரித்தோம் நாம்!
வெற்றி பெற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்பது உறுதி; ஆனால் உங்களுக்குள்ள முக்கிய கடமை உங்கள் பெற்றோர் அளவில் துவங்கி உங்களை வளரச் செய்த நண்பர்கள் ஆசிரியர்கள், (கண்ணுக்குத் தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள் உட்பட) அனை வருக்கும் நன்றி காட்டி நடந்துகொள்ளுங்கள்; சமூகத்தினால் தான் சமூகத்திற்கு நீங்கள் பட்ட கடனை எப்படித் திருப்பித் தர முடியும் என்பதை நன்கு சிந்தித்து அதற்கேற்ற தொண்டறத்தை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை உருவாக்க ஒத்துழைப்பதே மிக மிக முக்கியமாகும் என்று நானும் தோழர்களும் குறிப்பிட்டபோது அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது!
சமூகநீதி என்பது வெறும் பிச்சையல்ல!
சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல; நம் உரிமை. யாரிடமும் நாம் கையேந்தவில்லை. தட்டிக் கேட்டுப் பெறுவதற்கு நமக்கு உரிமையும் நியாயமும் உண்டு; அரசியல் சட்டப்படி தான் நாம் அதைக் கேட்கிறோம்.
முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் போராட்டத்தால்தான் வந்தது. அதன் வரலாறு தான் இன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டம் ஏன்? என்ற நூல் என்பதை விளக்கி, மண்டல் கமிஷன் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கும் அமல்படுத்துவதற்கும் திராவிடர் கழகம், 42 மாநாடுகளை 16 போராட்டங்களை உ.பி. உட்பட பல மாநிலங்கள், சந்திரஜித் யாதவ் போன்றவர்கள் துணையோடு கர்ப்பூரிதாக்கர், போன்றவர்களோடு நடத்தியுள்ள வரலாற்றை புதிய தலைமுறைக்கு எடுத்துக் கூறினேன்.
90 ஆண்டுகளுக்குமுன் காசியில் பெரியார்!
தோழர்கள் காட்டிய ஆர்வம், விமான தளத்தில் வழியனுப்பி வைக்கும்போதுகூட இங்கே நாங்கள் அடிக்கடி வர வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினைத் துவக்க வேண்டும் என்று ஆர்வம் கொப்பளிக்கக் கூறியது கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம் நாங்கள்.
சுமார் 90 ஆண்டுகளுக்குமுன் எனது தலைவர் ஆசான் தந்தை பெரியார் சந்நியாசியாகிட காசி வந்து வெறுத்துத் திரும்பி பிறகு சுயமரியாதை இயக்கம் துவக்கி, சமூகப் புரட்சிக்கு வித்திட்டார்; இன்று அவரது தொண்டன் நான் இங்கே உங்களால் தலைமை விருந்தினராக அழைத்துச் சிறப்பிக்கப்படுகிறேன் என்றால் பெரியார் வாழ்கிறார். பெரியாரால் நாம் வாழுகிறோம் என்றும் வாழ்வோம் என்று ஒப்பிட்டுக் காட்டினேன்.
30 நிமிட ஆங்கில உரை
ஜோதிபா பூலே, சாகுமகராஜ், நாராயண குரு போன்ற சமுதாய போராளிகளில் தந்தை பெரியார் மிகவும் மதித்த அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் கூறிய கருத்துகள், ஜாதிபேத அடக்குமுறைகள், அதைத் தாண்ட சமூகநீதிக் களத்தில் கல்வி, உத்தியோகம், பகுத்தறிவு, பெண்கள் சமூக அதிகாரம் பெறும் நிலை எல்லாம் நமது அஜண்டாக்களாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் 30 நிமிடங்கள் பேசியதற்கு நல்ல வரவேற்பு, ஆமோதிப்பு இருந்ததோடு, அதன்பின் பேசிய உ.பி. பிரமுகர்கள் பெரியார் வந்தபோது நாங்கள் இளைஞர்கள் இப்போது முதியவர்கள். நீங்கள் இப்பகுதிக்கு எல்லாம் வந்து விழிப்புணர்வை உருவாக்க தலைமை தாங்கி, வழிகாட்டுங்கள் என்றெல்லாம் நாம் வியக்கத்தக்க முறையில் இந்தியில், ஆங்கிலத்தில் பேசினர்!
இளைஞர்களான அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். வெற்றியாளர்களும் உணர்ச்சியுடன் பதில் அளித்தனர்.
இரவு 10.30 மணி வரை விழா
இரவு 10.30மணிக்கும் அவர்கள் கலையவும் இல்லை; களைப்படையவும் இல்லை! என்னே அதிசயம்! தமிழ்நாட்டில்கூட அப்படி ஒரு கூட்டம் அவ்வளவு நீண்ட நேரம் நடைபெறுமா என்பது அய்யமே!
1958-இல் அய்யா தந்தைபெரியார், அன்னை மணியம் மையாருடன் காசிக்குப் பார்வையாளராக சென்றபிறகு, அய்யாவின் கொள்கையைப் பரப்பும் வாய்ப்பு இப்போது! தோழர் கோ. கருணாநிதியின் அயராத உழைப்பும், திட்டமிட்ட செயலாக்கமும் வடமாநிலங்களிலும் (உ.பி. பீகார்) நாடாளுமன்றத்திலும் நல்ல பயனைத் தந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, 27 சதவிகித இடஒதுக் கீட்டினை (OBC) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவித்து ஆணை பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் ஆகஸ்டு 7 (1990). 1958-இல் வாரணாசி, பாட்னா, டில்லி போன்ற பலவிடங்களிலும் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பும் ஏனைய சமூகநீதி அமைப்புகளும் இணைந்து தந்தை பெரியாரை அழைத்து இதுபோன்ற சமூகநீதித் திருவிழாவைக் கொண்டாடின.
நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!
வாரணாசி விழாவில் எனது உரையின் இறுதியில் குறிப்பிட்டேன். நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்; அடைய வேண்டிய இலக்குகள் ஏராளம். சில சிறு சண்டைகளில் வெற்றி பெற்றுள்ளோம். யுத்தத்தில் வெற்றி பெற்றால் தான் அது உண்மை யான நிலைத்த நீடித்த வெற்றியாகும் என்று குறிப் பிட்டேன். உ.பி. மாநிலம் 7ஆம் தேதி திருவிழா வழிகாட்டு கிறது; புதுகணக்கைத் திறந்து, புதுவெள்ளத்திற்கான மடை திறந்து விடப்பட்டுள்ளது. பெரியார் இப்போது வடபுலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்!

- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
வாரணாசி மாவட்ட ஆட்சியர் ரவீந்திரா (அய்.ஏ.எஸ்.) உரை
அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற நீங்கள் திறமை படைத்தவர்கள்; நாளை பணியை சிறப்பாக செய்திட உள்ளீர்கள். ஆனால் நீங்கள் நூறு விழுக்காடு உங்கள் உழைப்பை தந்தாலும், உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆகவே, நீங்கள் இருநூறு விழுக்காடு அதிகம் உழைத்திட வேண்டும்; நேர்மையாகவும், துணிவாகவும் உங்கள் பணியை செய்திடுங்கள்; அதில் நீங்கள் பின்வாங்க வேண்டாம்.
நீங்கள் சிறப்பாக பணியாற்றினால் கிடைக்கும் பாராட்டைவிட, சிறு தவறு செய்தாலும், உங்களைக் கடுமையாக தண்டித்திட தயாராகும் சமுதாயத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதையும், அது உங்களை மட்டும் அல்லாமல், உங்கள் சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொண்டு, சிறப்பாகப் பணியாற்றுங்கள்.
நீங்கள் இடஒதுக்கீட்டின் பயனால் இப்பணி கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள். இதை எதிர்க்கும் சிலர் கடந்த 21 ஆண்டுகளாக தாங்கள் பழிவாங்கப்பட்டதாக கருதுகிறார்கள். ஆனால் நாம் அவர்களால், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக பழி வாங்கப்பட்டோம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. ஆனால் நாம் மறந்து விடாமல், இடஒதுக்கீடு கிடைத்திட அரும்பணி ஆற்றிய மாமனிதர்களை நன்றியோடு நினைவில் கொள்ளுங்கள்.