Friday, October 7, 2011

நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல் நெய்வேலியில் திராவிடர் கழகம் நடத்திய பேரணி? (5)

மனுவைக் கொடுத்துவிட்டோம் என்று சும்மா இருந்து விடவில்லை தமிழர் தலைவர். 30.9.1989 அன்று நெய்வேபலியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்:

தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது; பொருளாதாரத் துறையிலே, திட்டங் களிலே, சமுதாயத் துறையிலே தமிழ கம் வஞ்சிக்கப்படுகிறது என்றவர் இங்கே இவ்வளவு பிரச்சினை இருக்கின்றது; இதை எல்லாம் பிரதமரிடத்திலே எடுத்துச் சொல்லி காபினெட்  அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்பொழுது வாதாடக் கூடிய திறமை தமிழகத்திலே இருந்து போன டில்லி அமைச்சர்களுக்கு உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.

தேசியம், தேசியம் என்று பேசு கின்ற திருவாளர் தேசியம், கதர்ச் சட்டைக் கனவான்களைப் பார்த்துச் சொன்னார்: இந்த நாட்டிலே தேசியம் என்று சொன்னால் தமிழனுடைய உரிமையை அடகு வைப்பதுதானே தேசியம் என்கின்ற தவறான கணக்கு இருக்கின்றதே. மற்றவர்களுக்கு எல்லாம் உணர்ச்சி வருகின்ற நிலை யிலே, காங்கிரஸ் நண்பர்களுக்கு உணர்ச்சி வராதா? இங்கேஇருக்கிற எங்களுடைய பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்று கேட் கிறோம்; இன்ன கட்சிக்காரருடைய பிள்ளைகளுக்குக் கொடுங்கள் என்றா கேட்கிறோம்? அல்ல, அல் லவே அல்ல.

ஏன் கேட்கிறோம் ராயல்டி, என்ப தற்கு விளக்கமும் அளித்தார்.

எந்தக் கட்சிக்காரராக இருந்தா லும் பயப்படுவார்கள்; எந்த ஆட்சியாள ரும் இந்தக் கொள்கையை ஒப்புக் கொண்டால் அதற்குப் பயன் உண்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதை எடுத்து அவர்களே கேட்கக் கூடிய நிலையிலே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நாம் போராடிக் கொண்டு, சத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தால் ஒழிய வழி கிடையாது. எனவே நரிமணத்திற்கு, நெய்வேலிக்கு என்று ராயல்டி தொகை கேட்கின்றோம். ஈட்டுத் தொகை என்று சொன்ன உடனே நல்ல வாய்ப்பாகக் கடந்த தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தது.

தி.மு.க. வெற்றி பெற்று உலகத்தினுடைய ஒப்பற்ற முதல்வர் களிலே ஒருவர் ; செயல் திறன் மிக்க முதல்வர், எதையும் விரைந்து முடிவெடுக்கக்கூடிய முதல்வர் என்று எதிரிகளால் கூட ஒப்புக் கொள்ளப் பட்டு, புகழப்படக்கூடியகலைஞர் அவர்களாலே உள்ளஆட்சி வந்த காரணத்தால், அவர் முதல் முதலாக டில்லி போனபோது அவர் முதலாவது எடுத்து வைத்த கோரிக்கையிலே ஒன்று டில்லியில் பேசிய பேச்சு இந்த ராயல்டியைப் பற்றிய பிரச்சினை. எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சி.

பெருத்த வருவாய் வருவதெல் லாம் மத்திய அரசுக்கு! உங்களுக்குத் தெரியும்; படித்தவர்கள் விவரம் தெரிந் தவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் மாறிய அரசு டில்லியைப் பார்த்துப் பிச்சை எடுத்துத் தான் ஆகவேண்டும். இன்றைய அரசியல் அமைப்பிலே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  எவ்வளவு பெரிய புரட்சியான கட்சி ஆட்சிக்கு வந்தா லும் கூட டில்லியைப் பார்த்து பிச்சை போடுங்கள்; பிச்சை போடுங்கள் என்று டில்லியிடத்திலே போய்க் கேட்க வேண்டிய நிலையிலேதான் இந்த அமைப்பையே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில்தான் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற அளவிலே அவர்கள் உரிமைக் குரல் கொடுத்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அதிலே சில கொள்கை அளவிலே ஒப்புக் கொள்ளப்பட்டிருக் கிறது; இதைச் சொன்னால் மட்டும் போதாது. இது நடைமுறைக்கு வந்தாக வேண்டும். அவசர அவசரமாக வந்தாக வேண்டும். இதிலே காலதாமதம் செய்வ திலே பொருள் இருக்க முடியாது.

எப்படி இருந்தாலும் ஒரு கணிசமான தொகை; ஒரு நியாயமான தொகை ராயல் டியாக, ஈட்டுத் தொகையாகக் கொடுக் கப்பட வேண்டும்; இது கொள்கையள விலே ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் ஆர்ப்பாட்டம்.

என்.எல்.சி.யில் 1975,1976 இல் இருந்து கிடைத்திருக்கின்ற லாபம் 351 கோடி ரூபாய். அது மட்டுமல்ல. என்.எல்.சி.; சொந்தக் காலிலே நிற்கக் கூடிய அளவிற்குவந்திருக்கின்றது. வெளிநாட் டிலுள்ள தொழில் நுணுக் கங்களை எதிர்பார்த்து அது இயங்க வேண்டிய நிலை மாறி சொந்தக் காலிலே நிற்கக் கூடிய அளவிற்கு வளர்ந்தோங்கி நிற்கின் றது. நாங்கள் கேட்பதெல்லாம் 351 கோடி ரூபாய் இலாபம் வந்திருக்கிறது என்று சொல்லும் போது குறைந்த பட்சம் 10 சத விகிதம் என்று பார்த்தாலும் கூட, தமிழக அரசுக்கு ராயல்டி 36 கோடி ரூபாய் வர வேண்டும் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

நாங்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குச் சொல்லுகின்றோம். இது ஏதோ காவிரி எண்ணெய்க்காக  என்று மட்டும் நீங்கள் தயவு செய்து நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளா தீர்கள். ராஜஸ்தானுக்கு நீங்கள் கொண்டு போக இருக்கக்கூடிய திட்டமிருக்கிறதே, அந்த நெய்வேலி நிலக்கரிக்கும் சேர்ந் தேதான் இந்தத் திட்டம் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் 60 கோடி ரூபாய் நட்ட மானாலும்கூட, 700 கோடி ரூபாய் அங்கு கொண்டு போய்க் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? இல்லை; எங்களுக்கு நிலக்கரி அங்கு கிடைக்கிறது; உங் களுக்கு அனல் மின்சாரத்தை உருவாக் குவோம் என்று நீங்கள் சொல்லமுடியுமா? பக்கத்திலே இருக்கிறது கங்கை கொண்ட சோழபுரம். அங்கு ஏராளமான நிலக்கரிப் படிவங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. 

அங்கு போய் அதை எடுத்து விட்டோமா? அங்கே சுரங்கம் தோண்டி விட்டோமா? இந்தப் பணத்தைத் தமிழகத் திட்டங்களுக்குச் செலவிட்டால் வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு அதிகம் ஏற்படும். நான் ஏதோ அரசியல் கண் ணோட்டத்தோடு பேசவில்லை.

சாதி சமயக் கண்ணோட்டத்திற்கெல் லாம் அப்பாற்பட்டுத் தமிழ் நாட்டு மக் களுடைய நலன்; தமிழ்நாட்டினுடைய எதிர்காலம், தமிழ்நாட்டின் பொருளாதார வளம் என்பதை வைத்து நாங்கள் பேசக் கடமைப்பட்டிருக்கிறோம். மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்வதற்கே கொஞ்சம் நாட்களாகும். ஆனால் ஈரோட்டுக் கண் ணாடி இருக்கிறதே! இது மைக்ராஸ் கோப்பு ஆகையினால் எங்கே திரும்பி அப்படி இப்படி நெளிந்தாலும் கூட இந்த ஈரோட்டுக் கண்ணாடிக்கு எதுவுமே தப்பாதே!

நரிமணத்திலும் ஆர்ப்பாட்டம்


நரிமணத்தில் உள்ள எண்ணெய், எரிவாயுக் கழக அலுவலகம் முன்பு ராயல்டி தருமாறு டில்லி அரசை வலியுறுத்தி 29.9.1989 அன்று திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் பெட் ரோலுக்கு அசாம் மாநிலத்திற்கு வழங்கப் படுவதுபோல் ராயல்டி தர வலியுறுத்தியும், உள்ளூர்க்காரர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரக் கோரியும் கழகத் தலைவர் உரையாற்றிய போது, பெட்ரோல் தொடர்புடைய சிறு தொழிற் சாலைகள் அமைக்கும் முன்னுரிமை தமிழர்களுக்கே தரப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அப்போதைய கழகத் தலைமை நிலை யச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னதாக ஏன் இந்தப் போராட்டம் என விளக்கிக் கூறியது, தமிழர் தலைவரின் பேச்சுக்குச் சரியான முன்னோட்டமாக அமைந்தது.  கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி, பிரச்சாரச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி, கீழ்த்தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம், மேல் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் ஆர். பி.சாரங்கனும் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ராயல்டி கோரிக்கை உள்ளிட்ட ஏராளமான முழக்கங்களும், ஓர வஞ்சக டில்லிக்கு எதிரான கண்டன முழக்கங்களும் விண்ணை அதிரடித்தன. அய்யாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட உரிமைப்போர் இது.

தமிழர் தலைவர் பெற்ற வெற்றி


நெய்வேலியில் எடுக்கும் நிலக்கரிக்கு (ராயல்டி) ஈட்டுத் தொகை கேட்டுத் தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் அய்யாவின் பிறந்த மாதத்தில் மக்கள் மன்றத்தில் முதன் முதலாக வைத்துப் போராடிய திராவிடர் கழகம் - குறிப்பாகத் தமிழர் தலைவர் ஒரே மாதத்தில் தம் கோரிக்கை வெற்றி பெற்ற இனிப்புச் செய்தி கேட்டார். அதன் பின்னர்தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதே கருத்தை மய்ய அரசிடம் வலியுறுத்தினார்.

நெய்வேலி லிக்னைட் நிறுவனத் தலைவர் திருச்சியில் பேசுகையில் ராயல்டி பாக்கித் தொகையாக 40 கோடி ரூபாய் வரை தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். நெய்வேலி சுரங்கத் திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரிக் காகத் தமிழக அரசுக்கு 1976-ஆம் ஆண்டு முதல் மெட்ரிக் டன்னுக்கு 2.50 ரூபாய் வீதம் ராயல்டி வழங்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒப்புக் கொண்டு விட்டது. திராவிடர் கழகம் நிகழ்த்திய அமைதிப் புரட்சிக்குக் கிடைத்த பரிசு இது.   தலைவர் கலைஞரைச் சந்தித்தார் தமிழர் தலைவர்

தமிழர் தலைவர் தமிழக முதல்வர் கலை ஞரைச் சந்தித்து, மய்ய அரசு வழங்குவதாக அறிவித்த ராயல்டி வருகிறதா என்று வினவியபோது, கலைஞர் அவர்கள் குறிப் பிட்டாராம். நீங்கதான் தமிழ்நாட்டிலே ஒரு சுவர் விடாமல் நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி வேண்டும் என்று திரும்பிய திசையெல்லாம் எழுதி வைத்திருக்கிறீர்களே. அதைப் பார்க்காமல், கவனிக்காமல் விட்டுவிட முடியுமா? மய்ய அரசை வலியுறுத்த அது உதவிற்று என்று கூறினாராம்.

தமிழர் தலைவர் கூறிய மற்றொரு தகவல் அது. தமிழக அரசு நிதி நெருக்கடி ஏற்படுகின்ற காலங்களில் எல்லாம் முன்னதாகவே அதாவது அட்வான் சாகவே கூட ராயல்டியை என்.எல்.சி. நிறுவனத்திட மிருந்து பெற்றுக் கொண் டுள்ளது எனும் கூடுதல் தகவலையும் அளித்தார்.

இத்தோடு நெய்வேலிப் பிரச்சினை முடிந்ததா? தொடர்ந்தது. கழகம் அவ்வப் போது போராடி வந்துள்ளது.

திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டம்


தமிழகத்தில் உள்ள மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் டில்லியிலேயே உள்ளன. சுரங்கங்களின் தலைமை அலுவலகம் தன்பாத்தில் (பீகார்) உள்ளது. நெய்வேலி நிறுவனத் தின் தலைமை அலுவலகம் மட்டுமே நெய்வேலியில் இருந்து வந்தது. அதனைச் சென்னைக்கு மாற்றவும் 2.6.1997 இல் கூடிய பங்குதாரர் கூட்டம் ஏற்பாடு செய்தது.

சென்னைக்கு மாற்றுவது பின்னா ளில் டில்லிக்கு மாற்றப்படாது என்ப தற்கு என்ன உத்திரவாதம்; பெருவாரி யான பங்குகள் வடநாட்டுத் தொழில் அதிபர்களின் கையில் உள்ளது. எனவே தமிழக நலன் கருதி நெய்வேலியின் கட்டுக்கோப்பான வளர்ச்சி தொழி லாளர் நலன் ஆகியவை கருதித் தலைமை அலுவலகம் நெய்வேலி யிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று குரல் கொடுத்தது. இருப்பினும் தலைமை அலுவலகப் பணிகள்எல்லாம் நெய்வேலியில் நடை பெற, பதிவு அலுவலகம் மட்டும் தந்தை பெரியார் சாலையில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் நலனில் தமிழ் மக்கள் வளர்ச்சியில் தந்தை  பெரியர் காலம்; தொட்டு அக்கறை கொண்டு ஆர்ப் பாட்டம் இல்லாது செயல் ஆற்றுவது திராவிடர் கழகம். அப்படித் திராவிடர் கழகம் எடுத்துச் செயல்படும் போது அல்லது போராடும்போது அதைக் கிண்டல் செய்பவர்கள், ஏகடியம் பேசுபவர்கள், எக்கலிப்பவர்கள் அதனை எதிர்ப்பவர்கள் பின்னர் தங்கள் அறி யாமைக்கு வெட்கி நாணுவதும் திரா விடர் கழகத்தின் முயற்சியைப் பாராட் டுவதும் போற்றுவதும் திராவிடர் கழகத் தின் வரலாற்றில் ஒரு வழமையான நிகழ்ச்சியே. இப்படிப் பாராட்டுக்கள் பலமுறை - ஒருமுறை இரு முறையல்ல - பல நூறுமுறை பதிவு செய்யப்பட்டுள் ளன.

நெய்வேலி தொடர்பான சிக்கல் களில் திராவிடர் கழகம் தலையிட்டுத் தீர்வு காண முயன்றே  வந்துள்ளது. 750 கோடி ரூபாயைக் கொட்டிய ராஜஸ் தான் சுரங்கத்தை மூட 2.6.1997 அன்று குரோம்பேட்டை எம்.அய்.டி. வளாகத் தில் பங்குதாரர் கூட்டம் கூட்டப்பட்டது. பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் நெய்வேலி  பழுப்பு நிலக்கரி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் தகவல் வெளி வந்தது. நல்ல லாபம் தரும் பொதுத் துறை நிறுவனம் என்.எல்.சி. நிறுவனத் தின் 51 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய பொதுத்துறைப் பங்குகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. தலைமை அமைச்சர் வாஜ்பாயி பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கமாட்டோம் என அறிவித்த சில நாட்களில் என்.எல்.சி. நிறுவன பங்குகள் 51 விழுக்காடு விற்கப் பரிந்துரை என்ற தகவல் கேட்டதும், நெய்வேலி நகர் திராவிடர் கழகம், இளைஞர்அணி, தொழிலாளர் அணி விழித்துக் கொண்டது.

ஏனென்றால், இதனால் புதிய டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் உருவாக்கப்படு வார்கள். இவர்களின் வரவால் பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இன்றி ஆகி விடுமே. மீண்டும் வர்ணா சிரமம் புதுப்பிக் கப்படும் எனும் நியாய மான அச்சம் தலை தூக்கியது. அது மட்டுமல்லாது, என்.எல். சி.யில் நேரடியாகப் பணிபுரியும் 19 ஆயிரம் பணியாளர் வேலை கேள்விக்குறியாகும்.

என்.எல்.சி. நிறுவனத்தை நம்பியுள்ள பிற தொழிலாளர்களின் 5000 குடும்பங்கள் வறுமைக் குழியில் தள்ளப்பட்டுப் பட்டினிச் சாவு, தற்கொலை போன்றவை அன்றாட நிகழ்வுகளாகும். படித்துப் பட்டம் பெற்று வரும் திராவிட இனத்துப் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கானல் நீராகி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு தலைமுறை யோடு அரசு வேலை முடிந்துவிடும். தமிழகத்தின் ஒட்டு மொத்த முன்னேற்ற மும் தடைப்படுவதோடு, நெய்வேலி மீண்டும் பூணூல் வேலியாகும் எனும் நியாயமான அச்சத்தில் ஆழ்ந்தனர்.

எனவே இப்போதும் திராவிடர் நலன் காக்கும் தமிழர் தலைவர் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்துக் கண்டனப்பேரணி நடத்த ஆணையிட்டார்.

தமிழர் தலைவர் ஆணைக்கேற்பத் துணைப் பொதுச் செயலாளர் துரை.சக்கர வர்த்தி தலைமையில் மாநிலத் தொழிற் சங்கச் செயலாளர் வெ.செயராமன், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலையில் நெய் வேலி நகர் வட்டம் 17 இல் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து 14.4.2002 இல் கண்டனப் பேரணி தொடங்கியது. ஒன்றியப் பொறுப் பாளர்கள், நகரப் பொறுப்பாளர்கள், மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்கள், திராவிடர் தொழிலாளர்கள் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், தோழியர்கள், பெரியார் பிஞ்சுகள், பெரியார் பெரும் தொண்டர்கள் உள்ளிட்ட பெரியாரின் இனமானப்படையினர் அனைவரும் கழகக் கொடியுடன்,

விற்காதே!  விற்காதே!
என்.எல்.சியைத் தனியாருக்கு விற்காதே!
ஆயிரம் கோடி லாபம் தரும் என்.எல். சி.யை விற்காதே!
மத்திய அரசே! பி.ஜே.பி. அரசே!
தொழிலாளர் நலச் சட்டத்தைத் திருத்தாதே!

எனும் அட்டைகளுடனும் பேரணியில் சென்றனர். ஆட்டோக்களில் ஒலி பெருக்கி அமைத்துக் கண்டன ஒலி முழக்கக்ஙகள் ஒலித்தன.

மாநில திராவிடர் தொழிற்சங்கச் செயலாளர் கண்டனப் பேரணியைத் துவக்கி வைக்க துரை சந்திர சேகரன், ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் கண் டனப் பேரணியின் நோக்கத்தை எடுத்து ரைத்தனர். மதியம் ஒன்றரை  மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

இதன் விளைவு நெய்வேலி தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது தடுக்கப்பட்டது எனப் பெருமை பொங்கக் கூறுகிறார், நெய்வேலி நகரத் திராவிடர் கழகத் தலைவராய் விளங்கிக் கண்டன ஆர்ப் பாட்டத்தை வெற்றிகரமாய் நடத்திக் காட் டிய செயல்வீரர் நெய்வேலி ஞானசேகரன் அவர்கள்.

நெய்வேலியில் திராவிடர் கழகம், கோட்டையாக விளங்கித் தொழிலாளர் நலன், என்.எல்.சி.நலன், தமிழ் நாட்டு நலனைக் காப்பதில் முனைப்புடன் செயல்படுவதை மனச்சான்று உள்ள எவரும் மனம் திறந்து பாராட்டாமல் இருக்க முடியாது.

இன்றைய காங்கிரசு அரசும் கூட இரண்டு முறை பங்குகளைத் தனியாருக் குத் தாரை வார்க்க முயன்றும் திராவிடர் கழகம் முயன்று அதைத் தடுத்துள்ளது. நெய்வேலி நிதியை 1500 கோடி ரூபாயை எடுத்து வடநாட்டில் ராஜஸ்தானில் கொட்ட முயலும் முயற்சியை முன் நின்று தடுத்துத் தமிழ்நாட்டு நலன் காத்து வருகிறது.

திராவிடர் கழகம் - ஏதோ எதிர்மறை யான - கடவுள் இல்லை - பார்ப்பனீயம் ஒழியவேண்டும் என்று குரல் கொடுக்கும்  கட்சி மட்டுமல்ல - உயரிய பொருளாதாரச் சிந்தனை, தமிழ்நாட்டு நலன், தமிழர் நலம் பேணும் இயக்கம் - மாபெரும் இயக்கம்.
- நிறைவு

Thursday, October 6, 2011


அதையெல்லாம் மீறித் தி.க.வின் மாபெரும் பேரணியைச் சாலையின் இரு மருங்கிலும் கூடி நெய்வேலி வாழ் மக்கள் வாழ்த்தி அனுப்பியதும், பேரணித் தலைவர் - தமிழர் தலைவர் அவர்களுக்குப் பேரளவில் துண்டு களும் நிதியும் அளித்து வாழ்த்திய வாழ்த்தொலிகள், உற்சாகப் பூங் கொத்துகள் என்றும் மணப்பவை.

பேரணி நிறைவுற்ற மதியம் 1-15 மணிக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர் கள், துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கழக இளைஞரணிச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மாநிலத் தொழிலாளர் அணிச் செயலாளர் இரா. கனகசபா பதி, மாவட்ட தி.தொ.க. செயலாளரும், நெய்வேலி திராவிடர் கழகத் தலைவருமான வி.செயராமன், நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் வெ.குழந்தைவேலு, ச.இராமதாசு, இளைஞரணித் தலைவர் வி.ஞான சேகரன் ஆகியோர் அலுவலகக் கட்டடத்தை அடைந்தனர்.

என்.எல்.சி. தலைவர் திரு மகிப்சிங் நிறுவன அதிகாரிகள், தமிழர் தலை வரை வாயிலிலேயே நின்று வரவேற்ற பெருமைமிகு செயல் நடைபெற்றது. அது மட்டுமா? மகிப்சிங் தமிழர் தலைவரைப் பார்த்து,

“First let me congratulate you sir, you are the first person to generate the public opinion against this issue and convey me to the appropriate authorities”

என்று கூறியதை மறந்துவிடாமல் இன்றும் நினைவு கூர்கிறார் நெய் வேலி செயராமன். உங்களை முதலில் நான் பாராட்டி மகிழ்கிறேன். தமிழ கத்தில் நீங்கள் மட்டுமே மக்களின் எண்ணத்தையும், இந்தப் பிரச் னையையும் பேரணி ஒன்றின் வாயி லாகவும், உங்களுடைய கோரிக்கை மனுவின் வாயிலாகவும் என்வாயி லாகவும், மய்ய அரசுக்கு அனுப்பு கிறீர்கள் என்று குறிப்பிட்டது எவ் வளவு யதார்த்தமான, உண்மையான வார்த்தைகள். கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் அனைத்தையும், தான் உணருவதாகக் குறிப்பிட்டார்.

கழகத் தலைவர் அளித்த மனு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தலைவர் திரு.மகிப் சிங்கிடம் கழகப் பொதுச் செயலாளர் தமிழர் தலை வரால் மனு ஒன்று தரப்பட்டது.

மத்திய அரசில் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் விசைத் துறை அமைச்சராயிருந்த வசந்த் சாத்தே விற்கு முகவரியிடப்பட்ட மனுவில் குறிப்பிட் டிருந்தவை இவை. (கடந்த வாரம் வசந்த் சாத்தே மறைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.)

பொதுத்துறையில் லாபகரமாக இயங்கும் பத்து நிறுவனங்களில் ஒன் றாகத் திகழ்கிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம். இந்த நிறுவனம் ஆறாவது சுரங்கம் வெட்டவிருக்கிறது; அனல் மின்னகத்தையும் நிறுவ உள்ளது. இந்தச் செயல்பாடுகளுக்கு எமது பாராட்டுகள்.

இந்தச் சூழலில் தமிழர்களின் நலன் கருதியும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன முன்னேற்றத்தில் தடங்கலைத் தவிர்க்கக் கருதியும் சில குறிப்புகளைத் தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.

1. அசாம் மாநிலம் பெறுவது போல், தமிழ்நாடு அரசும் நெய்வேலி நிலக் கரிக்காக ராயல்டி மூலம் உரிய பங்குத் தொகையைப் பெறவேண்டும்; நீண்ட காலமாகத் தமிழர்கள் விடுத்துவரும் கோரிக்கை இது?

2. ராஜஸ்தான் மாநிலத் திட்டம் ஒன்றிற்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஏறத்தாழ ரூ. 700 கோடிகளை ஒதுக்கீடு செய்து அதில் ஏற்கனவே ரூ. 11 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும் அறிகிறோம். இது விந்தையாக இருக் கிறது. ஏனெனில், நெய்வேலியில் மூன்றாம் அனல் மின்னகம், மற்றும் சுரங்கச் செயல் பாடுகளின் திட்ட மதிப்பீடு ஆறாயிரம் கோடி ரூபாய்கள். ஆனால் இவற்றிற்காக இது வரை நிறுவனம் ஒதுக்கியிருக்கும் தொகையோ வெறும் 11 கோடி ரூபாய்கள் தான். இந்த நடவடிக்கைகள், தாம் வஞ் சிக்கப்படும் எண்ணத்தை தமிழாகள் மனதில் ஊன்றியுள்ளது.

ராஜஸ்தானில் துவக்கவுள்ள நெய்வேலி நிறுவனத் திட்டம் லாபகரமானதோ, நீடித்து நிலைக்கக் கூடியதோ அல்ல என்றும் நாங்கள் அறிகிறோம். நாங்கள் அறிந்த வரை இந்த ராஜஸ்தான் திட்டத்தால் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் நட்டமேற்படும் என்பதுதான்! அங்குத் தயாரிக்கத் திட்ட மிடப்படும் மின் உற்பத்திக்கான செலவும் அதிகம்.

இன்றைய சூழலில் இவைதீர ஆராயப்பட வேண்டியவை. இத்தகையதோர் விரிவாக் கத்தால் உற்பத்தி எவ்வாறு பெருகும் என எமக்குப் புரியவில்லை.

இவ்வாறு ராஜஸ்தான் திட்டத்திற்குப் பணத்தைப் பாழடிப்பதற்குப் பதில் இதே பணத்தை நெய்வேலியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவு கூட இல்லாத ஜெயங் கொண்ட சோழபுரம், புதுவை மாநிலத்தில் உள்ள பாகூர் ஆகிய இடங்களில் புதைந்து கிடக்கும் நிலக்கரிப் படிவங்களை அகழ்வ தற்குப் பயன்படுத்தலாம். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் வளமடையும். இந்த இரு ஊர்களில் நிலக்கரி அகழ்ந் தெடுக்கப் பட்டால் ராஜஸ்தான் திட்டத்தைக் காட்டிலும் அதிக லாபமும் கிடைக்கும்.

எனவே அவசரக் கோலமான ராஜஸ் தான் திட்டச் செயல்பாட்டை அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தென் ஆர்க்காடு மாவட்டத்தில் 28-9-1989 அன்று நடந்த தொழில் துறை நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல் வர் மாண்புமிகு கலைஞர் பேசுகையில், காவிரிப் படுகையில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்ற மாநிலத் திட்டங் களுக்காகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சமும், சில வதந்திகளும் எழுந்துள்ளன. இவை வதந்திகளாகவே இருக்குமாறு மத்திய அரசினர் நடந்து கொள்ள வேண் டும். வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது. இந்த விவகாரத்திலும் தி.மு.கழக அரசு தமிழர்கள் உரிமைக்காக டில்லியிடம் உரிமைக் குரல் கொடுக்கும் என்றார்.

(இண்டியன் எக்ஸ்பிரஸ் 29-9-1989)

3. தற்போதைய நிலக்கரி நிறுவனத் தலைவர் அவர்கள் நிலக்கரி நிறுவன விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கி யோரின்வேலை இல்லாத் திண் டாட்டத்தைத் தீர்த்து வைத்தமை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்; நன்றி தெரிவிக்கிறோம்.

அரசுக்கு அளித்த பட்டா நிலத்த வர்கள் பயனடையவும் உதவ வேண்டு கிறோம். இதற்கான சட்டப்படியான உரிமையும் அவர்களுக்குண்டு. இத் தகைய சிக்கல்களால் மக்கள் கொதித் துக் கிடக்கிறார்கள். தங்கள் ஆற்றலின் மூலம் இந்தச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கக் கோருகிறோம்.அதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்ப வர்கள் மேற்பட வாய்ப்பு உண்டு. நன்றி.

http://viduthalai.in/new/page-2/19038.html
(இன்னும் வளரும்)

நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல் சுவர் எழுத்து முழக்கத்தின் சாதனை! (3)

அய்யா பிறந்த நாளில் அறிவித்தார்
அய்யா பெரியார் பிறந்த நாள் 112 ஆம் ஆண்டு திராவிடர் போற்றி மகிழும் நாள். ஈரோட்டில் அந்நாளில் அய்யா பிறந்த நாளில் பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டத்தில் ஆசிரியர் இரண்டு அறிவிப்புகளை வெளி யிட்டார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அய்யா பிறந்த ஈரோடு மாநகரில் எழுச்சியோடு நடைபெற்றது. காலையில் ஈரோடு பெரியார் மன்றத்தில் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று அய்யா, அண்ணா உருவச் சிலைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்தனர்.
இன்றைய பொதுச் செயலாளர் - அன்றைய தலைமை கழகச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன்  தந்தை பெரியார் சிலைக்கும், தோழர் சீனு அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர். இத்தகு விழாத் தொடர்ச்சியாக இரவு 7 மணிக்குத் திரு.வி.க. சாலை நகராட்சிக் குடியிருப்பில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டிருந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில்தான் பிறந்தநாள் விழா உரையில் செப்டம்பர்29 இல் நரிமணத்திலும், செப்டம்பர் 30 இல் நெய்வேலியிலும் பெட்ரோல், நிலக்கரி ராயல்டி கேட்டுக் கழக ஆர்ப்பாட் டங்கள் நடைபெறும் எனும் அறிவிப் பினைப் பலத்த கைதட்டல்களுக் கிடையே அறிவித்தார்.
வரலாறு மறக்காத உரிமைக் கிளர்ச்சி
திட்டமிட்டவாறு எதையும் கச்சித மாகச் செய்து முடிக்கும், ஆர்ப்பாட்டம், ஆரவாரம் அலட்டல் ஏதுமில்லா எளிமைப்  பண்புடைய தலைமையில் நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி தர வலியுறுத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது. எனவே,
நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி கோரி நடக்க விருந்த ஆர்ப்பாட்டத் திற்குத் தலைமையேற்பதற்காக  30-9-89 முற்பகல் 11 மணி 40 நிமிடங் களுக்கு ஆசிரியர் அவர்கள் நெய்வேலி விருந்தினர் மாளிகையி லிருந்து நகரின் 17ஆம் வட்டம் அண்ணாசிலை நோக்கிப் புறப்பட்ட போது, தமிழர் தலைவர் முன் கழகக்கொடியுடன் கூடியமோட்டர் சைக்கிள்களில் கழகத்தோழர்கள் அணி வகுத்துச் சென்றதுடன் அவருடைய காருக்கு முன்னும் பின்னும் வெளியூர்களி லிருந்து வருகை புரிந்த கழகத் தோழர் களின் வாகனங்கள்அணிவகுத்துச் சென் றதுடன் திறந்த ஜீப் ஒன்றும் சென்றது.
தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்தும், கள்ளக்குறிச்சியிலிருந் தும் கழகத் தோழர்கள் ஏராளமாகப் பங்கேற்ற போராட்டக் களம் அது. நெய் வேலியிலிருந்து அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா  சிலைக்கு ஆர்ப் பாட்டத் திடலை அடையும் வழியில் தமிழினக் காவலர் மாலையணிவிக்க எல்லா இடங்களிலும் பெரியார் வாழ்க!  பேரறிஞர் அண்ணா வாழ்க!  கழகப் பொதுச் செயலாளர் வாழ்க!  என முழக்கங்கள் விண்ணதிர்ந்தன.
மதியம் 12-03-க்கு அண்ணா சிலை அருகில், இன்றைய கழகப் பொருளாளர் - அன்றையக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை உரை நிகழ்த்திப் பேரணியைத் துவக்கி வைத்தார்.
கோ.சாமிதுரை அவர்கள் தொடங்கி வைத்த பேரணி இருக்கிறதே அது சாதாரணப் பேரணி அல்ல. நெய்வேலி என்னும் ஒரு சிறிய ஊரைக் கலக்கிய கருஞ் சட்டைப் பேரணி. ஒரு மைல் நீளம் தொடர்ந்த உரிமை முழக்கப் பேரணி.
ஊர்வலத்தில் கையிலேந்திச் சென்ற வாசகங்கள் இன்றும் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய வாசகங்கள்.
* நெய்வேலி சிறக்க நிலம் கொடுத்த வர்கட்கு வேலை கொடு!
* நிலம் கொடுத்தவன் வெளியே!  வடநாட்டான் நெய்வேலியிலே!
* உரிமைப் போரில் தோற்கமாட்டோம்!  அடிமை வாழ்வில் சாகமாட்டோம்!
* நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி வேண்டும்!
* மின்சார உற்பத்தி இங்கே!  மின்சார விநியோகம் வெளி மாநிலங்களுக்கா?
* நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடு!
17 ஆவது பகுதியிலிருக்கும் அண்ணா சிலையிலிருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, நெய்வேலி நகரியத்தின் 10, 9, 2,3 ஆகிய பகுதிகளின் நெடுஞ்சாலைகள், பேரறிஞர் அண்ணா சாலை, தந்தை பெரியார் சாலை, ஜோதி ராமலிங்கம் சாலை, உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் பலவற்றைக் கடக்கவே ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது என்றால் எவ்வளவு பெரிய பேரணி என்பது சொல்லாமல் விளங்கும். 1-15 மணிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களின் தலைமை நிர்வாக அலுவல கக் கட்டடத்தை அடைந்த பேரணியில் பங்கேற்ற கழகத் தோழர்கள், அலுவலகத் தலைமை அதிகாரிகளை ஆசிரியர் சந்தித்துக்கோரிக்கை மனு கொடுத்துத் திரும்பும் வரையில் பேரணியில் ஒலித்த, * வருகிறது பார் !  வருகிறது பார்! கருஞ்சட்டைப் பட்டாளம்!
* மத்திய அரசே!  மத்திய அரசே! ராயல்டியை உடனே கொடு.
* அசாமுக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா?
* நெய்வேலி சிறக்க நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடு!
* வஞ்சிக்காதே!  வஞ்சிக்காதே!  தமிழ் நாட்டை வஞ்சிக்காதே!
* விடமாட்டோம், விடமாட்டோம்! வஞ்சகம் தொடர விடமாட்டோம்!
* நெய்வேலி லாபத்தில் இராஜஸ் தானில் தொழிற்சாலையா?
* வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சாயத் ராஜ்ய கொண்டாட்டம்/
* மாறுவோம்  மாறுவோம் விடுதலைப் புலிகளாய் மாறுவோம்!
* ஊழலோ  ஊழல்!  பீரங்கிபேர ஊழல் - எனும்
இந்த முழக்கங்களை அவர்கள் திரும்பும் வரை வாயிலின்முன் நின்று ஒலித்தனர்.
ஊர்வலம் என்றால் இதுவல்லவோ ஊர்வலம் என்னும்படியாக இருந்தது.
கட்டுப்பாடு மிக்க, கழகத் தலைமைக்கு என்றும் கட்டுப்பட்ட கழகத் தோழர்கள் இருவர் இருவராக அணி வகுத்து, வாசகத் தட்டிகள், கழகக் கொடிகள் ஏந்தி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி.
அது மட்டுமா?
நெய்வேலிப் பகுதியிலும் ஊர்வலம் சென்ற பாதைகளிலும் சுவரெழுத்து வாசகங்கள் எங்குத் திரும்பினாலும் எழிற் கோலம் காட்டி வரவேற்புப் பதாகையாக வண்ண வாசகங்களாக மின்னின.
இந்தப் போராட்டம் பல்லாண்டு களாகத் திராவிடர் கழகத்தில் சுவரெழுத்துப் பிரச்சாரம், கழக மாநாடு, பொதுக்கூட்டங்கள் ஆகியவை வாயிலாக எடுத்து வைத்த பிரச்சாரத் தின் முதிர்ச்சியாக விளங்கியது.
இந்தப் போராட்டம் பதிவு செய்யப்பட வேண்டிய, தமிழகப் பொருளாதார வரலாற்றில் இடம் பெற வேண்டிய சாதனை முத்து; ஆசிரியர் அவர்களின் சாதனை மகுடத்தில் இடம் பெறவேண்டியவைரக்கல்.
ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமே - கவனிக்க வேண்டும். கருஞ்சட்டைத் தோழர்கள் மட்டுமே, கழகக் கொடி பறக்க, பதாகைகளை உயர்த்திக் கலந்து கொண்ட பேரணிக்குத் தளராது தலைவர் தலைமை வகித்து 5 கி.மீ. ஊர்வலமாகச் சென்ற பேரணி இது.
அன்று நெய்வேலியில் 1. ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 2. தி.மு.க.வின் பணியாளர் சங்கம். 3. அதிமுக தொழிலாளர் சங்கம். 4. இந்து மஸ்தூர் சபா.5. அய்.என். டி.யூ.சி. 6. சனதா தளம் அதன் தொழிற் சங்கம் என்.எல்.ஓ. 7. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதன் தொழிற் சங்கம். 8. சி.அய்.டி.யு. இவைகள் அனைத்திற்கும் நகர திராவிடர் கழகத்தின் சார்பாகப் பேரணி, அதன் நோக்கம் குறித்து விளக்கமாகத் தெரிவித்துப் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத் திருந்தும் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து கலந்து கொள்ளவில்லை என்பதற்கே கட்டியம் கூறுகிறார் நகர திராவிடர் கழகத் தலைவர் நெய்வேலி செயராமன்.
இந்த ஒன்று மட்டும் போதும். அந்நாளில் திராவிடர் கழகம் நடத்திய பேரணி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதற்கு. இன்னும் ஒன்றை இந்த வேளையில் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
பேரணி நடைபெறவிருந்த 30-9-1989 அன்று மேலே குறிப்பிட்ட அனைத்துக் கட்சிச் சங்கங்களின் நிருவாகிகள் அன்றாட சில்லரைப் பிரச்னைகளை மய்யமாக வைத்தும், தி.க.நடத்தும் பேரணியை வலிமை குன்றச் செய்யவும், திரு மணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்த பைத்தியக்காரி போல், நகரின் மய்யப் பகுதியில் உண்ணா நிலை மேற் கொண்டனர். (வளரும்)
http://viduthalai.in/new/page-2/18967-2011-10-05-09-50-46.html

Tuesday, October 4, 2011

மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம் (2)

நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல்
மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம் (2)

- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்


தமிழகத்தில் எடுக்கப்படும் பெட்ரோல், நிலக்கரிக்கு மத்திய அரசு ராயல்டி வழங்கவேண்டும் எனும் கோரிக்கையைத் தமிழகத்தில் முதன் முதலாக எழுப்பியது திராவிடர் கழகம். சுவர்களில் எல்லாம் எழுதி வைத்தது. தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. அசாம் மாநிலத் தில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு மய்ய அரசு ராயல்டி தரும்போது தமிழகத்தை மட்டும் வஞ்சிப்பது என்ன நியாயம் என்று கேட்ட ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.

1989 இல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தலைவர் கலைஞர், முதல்வர் கலைஞர் தமிழகத்தின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். அதற்கு முன்னர் உறவுக்குக்கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் எனும் தத்துவத்தின் அடிப்படையில் மாநில சுயாட்சித் தத்துவத்தை வழங்கிய மாமனிதன் அண்ணாவின் பெயரிலே கட்சி, அண்ணாவின் படம் போட்ட கொடி கொண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் அரசு திராவிடர் கழகத்தின் இந்த உரிமைக் கோரிக்கையை கவனிக்கவில்லை. காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதும் வரலாற்று உண்மை.

பொறுத்துப் பார்த்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் - கோரிக்கை விடுத்துப் பார்த்த ஆசிரி யர் அவர்கள் - சமூக சீர்திருத்த இயக்கமாம் திராவிடர் கழகம் பொரு ளாதார உரிமைக்கும் குரல் கொடுப் பதோடு நிறுத்திக் கொள்ளாமல் போராட்டக் களத்திலும் இறங்கும் என முதல் அறிவிப்பினை 3-9-1989 அன்று ராமநாதபுரம் பொதுக்கூட்டத் தில் அன்றைய கழகப் பொதுச் செய லாளர் என்ற நிலையில் அறிவித்தார்.

தமிழகம் எப்படி எல்லாம் வஞ்சிக் கப்படுகின்றது என்பதை ராமேசு வரத்தில் சுற்றுப்பயணம் ஆரம்பித்துத் திருத்தணி வரையிலே சொன்னோம். அசாமிலே மாணவர்கள்தான் ஆட்சி செலுத்துகின்றார்கள். அசாமிலே எடுக்கப்படுகின்ற எண்ணெய்க்கு ஈட்டுத் தொகை (ராயல்டி) வேண்டு மென்று அசாமியர்கள் கேட்டார்கள்.

மத்திய அரசு அவர்களுக்கு ஈட்டுத் தொகையையும் வழங்கியது. தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நரிமணத்திலே உலகிலேயே உயர்ந்த ரகப் பெட்ரோல் கிடைக்கின்றது. அதே போல் நாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் கோயில் களப்பால் என்ற இடத்திலே பெட்ரோல் கிடைக்கின்றது. மத்திய அரசேஅசாமுக்குக் கொடுக் கும் ராயல்டி தொகையைப் போலத் தமிழ்நாட்டு அரசுக்கும் கொடு என்று முதலில் போராடிக் கேட்டஇயக்கம் திராவி டர் கழகம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். அதை நாங்கள்தான் எடுத் துச் சொன்னோம்.

கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே மத்தியஅரசைப் பார்த்து முதலில் இதைத்தான் கேட்டார் . . . திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே இந்த மாத இறுதிக்குள் எங்களுடைய கழக இளைஞர்கள், கழகத் தோழர்கள், தாய்மார்களைக் கொண்டு இரண்டு இடங்களிலே ஆர்ப்பாட்டத்தை இதற்காக நடத்த விருக்கிறோம்.

ஒன்று நரிமணத்திற்குப் பக்கத்திலே ஆர்ப்பாட்டம்! இன்னொற்று நெய்வேலிச் சுரங்கத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! ராயல்டி தொகையை உடனடியாக மத்திய அரசே! தமிழக அரசுக்கு வழங்கு என்பதை வற்புறுத்துவோம்.

(விடுதலை 5-9-89)

பெரியார் வழிவந்த கழகப் பொதுச் செயலாளர் - வன்முறையற்ற - அமைதிப் போராட்டம் நடத்தப் பெறும் - ஆர்ப்பாட்டம் என்று அறிவித்துவிட்டார். நாளை அறிவிக்கவில்லை. போர் முழக்கத்தை ஊதுகுழல் எடுத்து ஊதிவிட்டார். செவி டர் காதில் கேட்கும்படியாகப் போராட்டச் சங்கு முழக்கத்தை முழங்கினார்.

மேடை முழக்கம் மட்டுமில்லை. விடுதலை (11-9-89 இல்) தலையங்கமும் தீட்டித் தனது இயக்கத்தின் அறிவாயு தத்தைத் தீட்டியது. பிரச்சினையின் ஆழத்தை, மய்ய அரசின் துரோகத்தை - மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிச்சம் போட்டுத் தமிழ் இன உணர்வுடன் - தமிழ்நாடு என்னும் உயர்ந்த நாட்டுணர் வுடன் தீட்டப்பட்ட தலையங்கத்தின் கூர்வாள் வாசகங்கள் இவை;

நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக் கரியின் விற்பனை மதிப்பில், ஒரு டன்னுக்கு 10 சதவிகிதம் ராயல்டியாகத் தரவேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுப்பதோடு நிலக்கரிக்கு ராயல்டி வழங்கப்பட்டால் தமிழகத்துக்குத் தரப்படும் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்து வோம் என்கிறது. நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப் படுவதில்லை. பல்வேறு ரசாயனப் பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டு அவை தொழில் நிறுவனங்களுக்கு விற்கப்படு கின்றன.

அந்த ரசாயனப் பொருள்களுக்கு எல்லாம் விலையை ஏற்றாமல் மின்சாரத் துக்கு மட்டும் கட்டணத்தை ஏற்றுவோம் என்பது என்ன நியாயம்? அதுமட்டு மல்லாமல் நெய்வேலியில் எடுக்கப்படும் மின்சாரம் தமிழகம் உட்பட வேறு பல மாநிலங்களுக்கும் விற்கப்படுகிறது. இதில் தமிழகத்துக்கு மட்டும் மின்சாரக் கட் டணத்தை உயர்த்தப் போவதாக மத்திய அரசு கூறுவது அதன் பழி வாங்கும் உணர் வைத்தான் வெளிப் படுத்துகிறது.

லாபத்தில் பங்கு கொடுப்பது என்பது வேறு; ராயல்டி என்பது வேறு; இரண்டை யும் ஒன்றாகச் சேர்த்து ஏன்குழப்ப வேண் டும்? தமிழகத்திலிருந்து எடுக்கப்படுகிற கனிமவளத்துக்குத்தான் நாம் ராயல்டி கேட்கிறோம். எனவே,பெட்ரோலும், நிலக் கரியும் எப்போது எடுக்க ஆரம்பித்தார் களோ, அது முதல் கணக்கிட்டு, ராயல்டி தொகையை மத்திய அரசு வழங்குவதுதான் நியாயம். அதைச் செய்யாமல் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங் கிய காலத்துக்குப் பிறகுதான் ராயல்டி தருவோம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்று வதாகும்.

இந்த ராயல்டி தொகை பற்றி இறுதி முடிவு எடுக்கக் கூடியது பிரதமர் அமைச் சகம்தான். பிரதமர் அமைச்சகத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. முழுதும் பார்ப்பனஆதிக்கம் அங்கே புழுத்து நெளிந்து கொண்டிருக்கிறது. இவர்கள் தமிழ்நாட்டின் இந்த உரிமைக் குரலுக்கு முட்டுக்கட்டைபோட்டு, பிரச்சினையைக் கிடப்பில் போடத்தான் திட்டங்களைத் தீட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது நெய்வேலி நிலக்கரி வாரியம் என்ற பெயரையும் மாற்றிவிடப் பார்ப்பன அதிகார வர்க்கம் தந்திரமாகத் திட்டமிட்டிருக்கிறது. நெய்வேலி என்ற பெயர் இருப்பதால் அதில் தமிழ்நாடும் பிரிக்க முடியாத அங்கமாகிவிடுகிறது என்பதால் அதில் இந்தியஅளவில் நிலக்கரி வாரியம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள்! அகில இந்தியா என்பது தானேஅவாளின் பாதுகாப்புக் குகை! அனைத்தையும் அகில இந்தியாவாக்கி விட்டால் பார்ப்பன மயமாக்குவது எளிதாகிவிடுகிறது! காரணம், இந்த நாட்டில் அகில இந்தியா என்பதன் பொருள் சர்வம் பார்ப்பன மயம் என்பதுதான்!

(விடுதலை தலையங்கம் 11-9-89)

விடுதலை உரிமைப் போராட்டத்தில் பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிகளை அம்பலப் படுத்தி, தமிழர்களிடையே உரிமை உணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் உரிமைக் கிளர்ச்சியில் இறங்க அறிவிப்பு விடுத்தது.

ஆதரவு திரட்டுதல்

தமிழர்தலைவர் போராட்ட அறிவிப்பு விட்டுவிட்டுப் பின்வாங்கும் வெத்து வேட்டு வீரர் அல்லவே. 5-9-11 இல் போராட்ட அறிவிப்பு விட்ட கையோடு நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி கோரி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் திற்குத் தென் ஆர்க்காடு மாவட் டத்தைத் திரட்டினார்.

தென் ஆர்க்காடு வடக்கு மாவட்டத் திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் 7-9-89 இல் விக்கிரவாண்டி தண்டபாணி இல்லத்தில் கூடியபோது, ஆசிரியர் அவர்கள் தலைமை வகிக்க, தென் ஆர்க்காடு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பி. ஞானம் வரவேற்க, கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் புலவர் ஜானகி ராமன், வைத்தியலிங்கம், பண்ருட்டி அரங்கநாதன், திண்டிவனம் தாஸ், மைம் ராவணன், விக்கிரவாண்டி குளிர் நீரான், முத்தமிழ் தாசன், ரவிச்சந்தி ரன், கார்வண்ணன், திருக்கோயிலூர் ஆறுமுகனார், சுப்பிரமணி, திண்டிவனம் சம்பந்தம், கெடார் நடராசன், ஆ. வந்தியத்தேவன், இன்றைய தி.க. பொதுச் செயலாளர் அன்றைய தி.க. இளைஞரணி செயலாளர் வீ. ஞானம், இரா.கஜேந்திரன், அய்யா சாமிதுரை ஆகியோர் உரையாற்றியபின் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றியுள்ளார்.

இக்கூட்டத்தில் நிறைவேறிய நெய்வேலி தொடர்பான தீர்மானம் இது:

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் திற்கு முன்பு நடைபெறுகின்ற ஆர்ப்பாட் டத்திற்கு இம்மாநாட்டி லிருந்து பெருந் திரளாகக் கலந்து கொள்வதென்று கமிட்டியில் ஏகமன தாக முடிவெடுக்கப் பட்டது.

மதியம் 12 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் மாலை 4 மணிவரை நடை பெற்ற போது நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுக்க இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்திருந்து கருத்துகளை எடுத்துரைத்த மக்களாட்சிப் பாங்கும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

(வளரும்)

மறைக்கப்பட்ட தமிழர் தலைவரின் சாதனைக் களம் (1)

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்து அவரின் தமிழ்ச் சமுதாயத் தொண்டு, சமூக நீதிப் போராட்டங்களை ஊட கங்கள் மறைத்து இருட்டடிப்புச் செய்து வந்தன.

அதே திருப்பணியைத்தான் ஆதிக்க சக்திகளின் கைப்பாவையான ஊடகங்கள் அன்னை மணியம்மை யார் காலத்தும் செய்தன.

இன்றும் அதே கேவலமான செயலைத்தான் ஆசிரியர் தமிழர் தலைவர் இடத்தும் செய்கின்றன. இன்னும் ஊடகங்களில் பார்ப்பனீயச் செல்வாக்கு அற்றுப் போய்விட வில்லை; இற்றுப் போய்விடவில்லை. அது மட்டுமல்ல. பத்திரிகைகள் எந்தச் செய்திக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றன எனத் தமிழர் தலைவர் 30-9-1989 இல் நெய் வேலியில் பேசியது இது:

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது. இந்தச் செய்திகளுக்கெல்லாம் நம்முடைய செய்தியாளர்கள் முன்னுரிமை கொடுப்பதில்லை. அவர்களுக்கெல் லாம் எந்த நடிகைக்கு எந்தக் குழந்தை பிறந்தது, ஒற்றைக் குழந்தையா, இரட்டைக்குழந்தையா அல்லது எந்த நடிகை கர்ப்பமுற்று இருக்கிறாள்? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டி ருக்கிறார்கள்.

(தமிழர் தலைவர் சொல்வது உண்மைதானே? அய்ஸ்வர்யா ராய் கர்ப்பமுற்றிருப்பதைப் பற்றி எவ்வளவு அக்கறையோடு செய்தி வெளியிட் டார்கள். பிரபுதேவா - நயன்தாரா காதல் -நயன்தாரா குருவாயூர் கோயி லில் வழிபட்டது - ஆரிய சமாஜத்தில் சேர்ந்து இந்துவாக மாறியது - எவ்வளவு முக்கியம் பாருங்கள்.)

அதைவிடத் தமிழகத்தினுடைய வளம்; தமிழர்களுடைய நலன் இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கொஞ்சம் அதிகமாகக் கவலைப்படவேண்டும். இதைத் தான் நாங்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு சுட்டிக் காட்டுகிறோம். ஆகவே அவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவேண்டும் (விடுதலை 5-10-1989).

தந்தை பெரியாருக்குப் பின் அம்மா மணியம்மையாருக்குப் பின் - தமிழர் தலைவர் அவர்கள் அய்யா வின், அம்மாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது கால் பதித்து சமூக நீதிக்குத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஊறு நேரும்போதெல்லாம் குரல் கொடுக்க, போராட்டத் தடி ஏந்திடத் தவறிய தில்லை.

ஆனால் - இந்த ஊடகங்களுக் குத் திராவிடர் கழகம் என்றால் திகட்டுகிறது. சமூக நீதிச் சிந்தனை என்றால் கழகம் செய்வதெல்லாம் கசக்கிறது. ஆனால் அவாள் எனில் ஊதி, ஊதிப் பெரிதாக்கிக் காட்டு வார்கள். நம்மவரின் மலையளவுச் சாதனையைக் கடுகிலும் சிறிதாகக் காட்டும் கள்ளத்தனத்திற்குப் பஞ்ச மில்லை. அது மட்டுமா? இன்றைய தலை முறை இளையதலைமுறை கிரிக் கெட்டிலும், சினிமாவிலும் செலுத்தும் ஆர்வத்தைத் தங்களுக்குக் கிடைத்த இந்த வாழ்வின் மூலாதாரத்தை, சிருஷ்டி கர்த்தாவைச் சிறிதேனும் நினைத்துச் சிந்திப்பதில்லை.

அது மட்டுமல்ல. அவர்களுக்குத் திராவிடர் கழகமென்றால் எதிர்மறைச் சிந்தனைகள்தான் நிறைந்திருக்கும். கோணல், குறுக்குப் புத்தியோடு கண்ணை விரித்துப் பாராது இறுக்கிப் பார்க்கும் இழியுணர்வுதான்.

இந்தப் பீடிகை, நீண்ட முன்னுரை, நீண்ட கொட்டி முழக்கும் வார்த்தை மணியோசை எதற்கு?

திராவிடர் கழகம் உங்கள் திரையிட்ட கோணல் பார்வையில் படுவது போல அழிவுச் சக்தி அல்ல; சமுதாயச் சிந்தனை மட்டுமல்ல - ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வு மட்டுமல்ல. வஞ்சிக்கப்பட்ட தமிழ கம் - வடவரின் ஆதிக்கத்தில் நசுக்கப் பட்ட தமிழகம் உயர வழி காட்டியது கழகம்.

பொருளாதாரச் சிந்தனையில், பொருளாதார முன்னேற்றத்தில் எந்த அரசியல் இயக்கத்தையும் விட முன் நிற்பது. இன்னும் சொல்லப் போனால் முதல் முதலாகப் பொருளாதார அடிப்படையில் தமிழக நலன் குறித்துச் சிந்திக்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

தமிழகத்தின் பெருமையைப் பறை சாற்றுவது, ஆந்திரா, கருநாடகா, புதுச் சேரிக்கு அன்றாடம் ஒளி வீச மின்சாரம் தருவது நெய்வேலி அனல் மின் நிலையம்.

ஆந்திரா- பாலாற்றில் குறுக்கே அணை கட்டி நீரைத் தடுக்க முயற்சித்த போதும், கருநாடகம் காவிரி நீருக்குத் தடை போட்டபோதும், முல்லைப் பெரியாறு அணையின் மட்டத்தை உயர்த்தத் தடைக் கற்களைத்தான் பரப்பியபோதும் நெய்வேலி மின்சாரம் நெடுந்தொலைவு அங்கெல்லாம் ஏன் செல்லவேண்டும் என்று கேட்டுப் போராடக் கூடச் செய்யாத இனம் தமிழினம் - குணம் தமிழர் களுடையது.

அந்த நெய்வேலி குறித்துப் பொருளா தாரச் சிந்தனையோடு - தமிழர் நலன் - தமிழ்நாட்டின் நலன் கருதிக் குரல் எழுப்பிச் சுவர், சுவராய் எழுதிப் போராடிப் பலன் பெற்றுத் தந்த ஒரே இயக்கம் திராவிடர் கழகம்.

இந்தத் திராவிடர் இயக்கத்தின் சாதனை இளைய தலைமுறைக்கு, எதிர் காலச் சந்ததிக்கு மட்டுமல்ல - எல்லாத் தமிழர்களும் தெரிந்து கொள்ளப் பதிவு செய்து வைக்கவேண்டியது நமது கடமை.

நெய்வேலி என்றவுடன் சிலருக்குப் பழுப்பு நிலக்கரி மட்டும்தான் நினைவுக்கு வரும். சிலருக்கு வாரியார் படித்த பாடம் நினைவுக்கு வரும். ஆனால் அனைவர் நினைவுக்கும் வரவேண்டியது திராவிடர் கழகம் பெற்றுத் தந்த உரிமையான ஈட்டுத் தொகை - அதற்கெனச் சளைக்காது அல்லும் பகலும் தமிழர் தலைவர் போராடிய போர்க்களம் மறந்து போய்விடக்கூடாது - மறக்கடிக்கப் பட்டுவிடக்கூடாது. அதற்கு முன் நெய்வேலி நிலக்கரி வெளிவந்தது எப்படி? நெய்வேலி அனல் மின் நிலையம் பிறந்தது எப்படி? தமிழகம் கனிம வள வரைபடத்தில் இடம் பெற்றது எவ்வாறு என்ற வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவானது முதலே தொடக்கம் முதலாய் சர்வேயராய்ப் பணியாற்றி அதன் வளர்ச்சியைக் கண்ணுற்று வந்த 90 வயதுப் பெரியவர் க.திருநாவுக்கரசு முதலியார் நெய்வேலியின் தோற்றம் குறித்த அரிய தகவல்களைத் தெரிவித்த வாழும் சான்றாக விளங்குகிறார்.

இறை நம்பிக்கை உடையவர் என்ற போதிலும் நெய்வேலி தி.க.வினர் குறிப்பாக, நெய்வேலி ஜெயராமன், நெய்வேலி ஞானசேகரன் ஆகியோர் பால் மிகுந்த பரிவும் பற்றும் உடையவர். நெய்வேலியில் தி.க.வினர் கூட்டம் என்றால் கேட்கா மலேயே தாமே முன்வந்து தாராளமாக நன்கொடையினை வாரி வழங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

1942 இல் மந்தாரகுப்பம் ஜம்புலிங்க முதலியார் நீதிக் கட்சிப் பிரமுகர்களில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் சிறப்புடன் விளங்கியவர். ஊராட்சிப் பதவிகள் வகித்த செல்வந்தர். ஏழை எளியவர்கள் பால் பரிவுடையவர்.

மந்தாரக் குப்பத்தில் 700 ஏக்கர் புறம் போக்கு நிலம் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தவர் தண்ணீர் வசதியிருந்தால் ஏழைகள் பயிர் செய்து பிழைக்கலாமே என்ற எண்ணத்தில் பெரிய ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது கரித்துண்டுகள் வரவே இந்திய அளவையியல் துறையில் கிருஷ்ணன் என்பவருக்குத் தகவல் கொடுத்தார். அவர் நிலப் பொறியியலாளரை அனுப்பி அதனை ஆய்வு செய்யச் சொன்னார். அங்குக் கிடைத்த கரியை ஜெர்மன் நாட்டு ரூர்க் கிக்கு அனுப்பினர்.

ரூர்க்கியிலிருந்து ஆய்வு செய்து அது முதிர்ச்சி பெறாத நிலக்கரி அதாவது பழுப்பு நிலக்கரி எனவும் பாய்லருக்குப் பயன் படுத்தி மின்சாரம் எடுக்கலாம் எனவும் அறிவித்தனர்.

தன்பாத்திலிருந்து எச்.கே. கோஷ் எனும் வங்காளி ஆய்வாளரை அரசு நிய மித்து ஆய்வு செய்யச் சொல்லியது. அவர் 1943-1947 இல் ராமசாமி நாயுடு என்ப வரின் பெரிய வீட்டில் தங்கி அங்கேயே அலுவலகம் அமைத்து ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுத் திரும்பிய க.திருநாவுக்கரசு சர்வேயராக நியமிக்கப் பெற்றார். 1948 இல் 100 இடங்களில் ஆழ் துளைக் கிணறு தோண்டி நிலக்கரி இருப்பதை உறுதி செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அப்போது தொழில் துறைச் செய லாளராக இருந்தவர் லோபோ பிரபு. அவ ரிடம் அறிக்கை கொடுத்தனர். அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர் டி.எம்.எஸ். மணி என்பவர். பார்ப்பனராக இருந்தாலும் அவருடைய பெருமுயற்சி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோன்ற, ஆற்றிய பணி மறுப்பதற்கில்லை. பார்ப்பனரான படியால் ஏராளமான பார்ப்பனர்களை நியமனம் செய்தார் என்பதையும் குறிப் பிட்டுத்தான் ஆகவேண்டும்.

அண்ணாமலை அரசர் ராஜாசர் அண்ணாமலை, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா விற்குத் தலைமை அமைச்சர் நேருவை அழைப்பது வழக்கம். அப்போதெல்லாம் நேருவைச் சந்தித்த தலைமைச் செயலாளர் டி.எம்.எஸ்.மணி ரு டிககஉயைட ஆக நேருவை நெய்வேலியைப் பார்வை யிட அழைத்தபோது நேருவும் வந்து பார்வையிட்டிருக்கிறார்.

அப்போது நேருவிடம் டி.எம்.எஸ். மணி வயலில் உழுகிற உழவர்களைக் காட்டி, இப்போது நாலு இஞ்ச் துணி தான் இங்கேயுள்ள உழவர்கள் அணிந்தி ருக்கிறார்கள் (அதாவது கோவணம்), நீங்கள் மனது வைத்தால் நூறு முழம் துணி அணிவார்கள் என்று சொல்லி யிருக்கிறார். 1954-இல் லோபோபிரபு விடம் இறுதி அறிக்கை கொடுக்க அவர் அதை இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
1957 மே மாதம் 20 ஆம் நாள் சுரங்கத்தைத் தொடங்கி வைக்கத் தலைமை அமைச்சர் நேரு, தம் அருமை மகள் இந்திராவுடன் வந்திருக்கிறார்.

1958 ஜெர்மன் இயந்திரம் கொண்டு தோண்டிய போது 60 அடி ஆழத்தில் நிலக்கரி இருப்பது ஊர்ஜிதமாயிற்று. 1961 வரை தோண்டும் வேலைதான். மண்தான் கிடைத்தது.

1961 இல்தான் நிலக்கரியை எட்டினர். 100 சதுர மைலுக்கு நிலக்கரி இருப்பது தெரிந்தது. தாண்டவன் குப்பம் என்னும் இடத்தில் - 970 சதுர பரப்பில் நிலக்கரி தோண்டும் பணி முதன் முதலில் தொடங்கியது. 1949 இல் ஓமந்தூராரின் முயற்சியும் 1962 இல் காமராசர் முயற்சியின் பயனாக 3.5 மெகாவாட் மின்சார உற் பத்தி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனால் தொடங்கி வைக்கப் பட்டது.
1968 இல் 150 மெகாவாட் என மின் உற்பத்தி உயர்ந்து இன்று 650 மெகாவாட் உற்பத்தியை எட்டியுள்ளது. தொடக்கம் முதல் நெய்வேலி மண்ணில் அலைந்து திரிந்து சர்வேயராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு அவர்கள் 1981 இல் ஓய்வு பெற்ற போதும், மேலும் அவருடைய பணியை நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது.

இந்நிலையில் திராவிடர் கழகத்தின் பணி என்ன? திராவிடர் கழகம் ஆற்றிய அருந்தொண்டு யாது? ஒவ்வொரு தமிழரும் அறிந்து கொள்ள வேண்டிய துடன் திராவிடர் கழகப் பணியைக் குறிப்பாகத் தமிழர் தலைவரின் பணியைப் பாராட்ட வேண்டும். வரலாற் றில் பதிவு செய்தல் வேண்டும்.

- இன்னும் வரும்
http://viduthalai.in/new/page-2/18850-2011-10-03-09-41-22.html 

Wednesday, August 10, 2011

உ.பி. காசியில் சமூகநீதியாளர்களின் சங்கமம்!

இடஒதுக்கீடு வெறும் பிச்சையல்ல - நமது உரிமை!
நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்!


வடக்கேயும் தந்தை பெரியார் தொண்டெனும் வான்மழை!
புதுக் கணக்கு, புது வெள்ளம் மடை திறந்த காட்சி!


தமிழர் தலைவரின் நேரடி வருணனை


வாரணாசியில் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் அமைப்புகள் சங்கமித்த சமூகநீதி விழாவின் நேர்த் தியையும், மாட்சியையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேரிடை வருணனையாகத் தரும் தகவல்கள் இதோ!

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாரணாசி மாநகரத்தில் ஒரு (முன்னாள் காசி என்ற பெயர் பெற்ற நகரம்) மாபெரும் சமூக நீதித் திருவிழா 7.8.2011 ஞாயிறு மாலை 6 மணியளவில், பிரபல நட்சத்திர ஓட்டலான கிளார்க்ஸ் மாநாட்டு அரங்கத்தில் உ.பி. மாநில பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலக்  கூட்டமைப்பின் (Federation of other Backward Classes (OBC) Employees Welfare Association) சார்பில் மிகச் சிறப்பாக மாலை 6 மணிக்குத் துவங்கி இரவு 10.30 மணி வரை நடை பெற்றது; அதற்குப் பிறகு வந்து பங்கேற்ற குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்த சுமார் 1000 (ஆயிரம்) பேர் களுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரவு விருந்தும் அளிக்கப்பட்டு (இரவு 11.30 மணிக்கு) விழா நேர்த்தியாக நிறைவுற்றது.

பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் சங்கமம்!

மத்திய அரசு, மாநில அரசு, பொதுத் துறை அமைப் புகள், வருமானவரி, யூனியன் வங்கி, வணிக அமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இப்படி பல அமைப்புகளும் இணைந்து இந்த சமூக நீதி - மாநாடு - அய்.ஏ.எஸ்.; அய்.ஆர்.எஸ்.; அய்.பி.எஸ். தேர்வுகளில் உ.பி. பீகார் மாநிலங்களில் இவ்வாண்டு தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய  வெற்றியாளர்களுக்குப் பாராட்டும் இதில் இணைந்து நடத்தப்பட்டது.

ஏற்பாடுகளை மிகவும் முறையாகவும் பாராட்டத் தக்கனவாகவும் ஏற்பாட்டாளர்களான, அமைப்பாளர்கள் குறிப்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அமைப்பின்  தலைவர். ரவிந்திரராம். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமிர்த்தான்ஷு, அதன் தலைவரான மத்திய அரசின்  பல்கலைக் கழகமான காசி வித்தியாபீடத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எஸ். குஷ்வாகா அவர்களும், அசோக் குமார் கூட்டமைப்பின் உ.பி. செயலாளர், அசோக் ஆனந்த் (Voice of the OBC இந்தி பதிப்பு ஆசிரியர் கல்வியாளர்) ஆகியோரும் அவருடன் ஒத்துழைத்த பல நண்பர்களும் ஆர்வம் கரை புரண்டோட சமூகநீதித் திருவிழாவை நடத்தி வரலாறு படைத்தனர்.

பங்கேற்ற பிரமுகர்கள்

வாரணாசியின் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் கலெக்ட ருமான திரு ரவீந்திரா அய்.ஏ.எஸ். பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, யூனியன் வங்கி பொதுமேலாளர் திரு பி.கே. பன்சால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், காசி பல்கலைக் கழக மேனாள் இந்திப் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர் சவுத்திராம்யாதவ், பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவிக் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவரான டாக்டர் பாபுராம் நிஷாத்,  ஆகியோர் சிறப்பு பேச்சாளராக, விழாத் தலைவராக, துவக்குபவர்களாக, பரிசளிப்பவர்களாகக் கலந்து கொண்டனர். தலைமை விருந்தினராக என்னை அழைத்து உரையாற்றிடச் செய்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளரான ஆற்றல்மிகு நண்பர் கோ. கருணாநிதி அவர்களை முக்கிய சிறப்புப் பேச்சாளராக அழைத்து பெருமைப்படுத்தினார்கள்.

வான் மழையாய் வந்த பெரியார் தொண்டு!

பேசியவர்கள் மாவட்டக் கலெக்டரிலிருந்து ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக உணர்ச்சிப் பிழம்பாக பேசினர். சுமார் 10,12 பேர்கள் அய்.எஸ்.அய்.பி.எஸ். தேர்வு பெற்ற மணிமணியான இளைஞர்கள், பிரகாசிக்கும் முகங்களோடு உற்சாகம் பொங்க அமர்ந்திருந்து பாராட்டும் பரிசும் - பெரியார் நூல்களும் - பெற்றனர்!

அவர்களது பெற்றோர்கள், வாழ்விணையர்கள் உடன் வந்து அவர்களும் பாராட்டுப் பெற்றபோது கண்ணீர் விட்டு உவகை பொங்க மகிழ்ந்த காட்சி, தந்தை பெரியார் தம் தொண்டு எப்படியெல்லாம் வடக்கேயும் இன்று வாடிய பயிர்களுக்கு வான்மழையாய் வந்தடைந்தது என்று பூரித்தோம் நாம்!

வெற்றி பெற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்பது உறுதி; ஆனால் உங்களுக்குள்ள முக்கிய கடமை உங்கள் பெற்றோர் அளவில் துவங்கி உங்களை வளரச் செய்த நண்பர்கள் ஆசிரியர்கள், (கண்ணுக்குத் தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள் உட்பட) அனை வருக்கும் நன்றி காட்டி நடந்துகொள்ளுங்கள்; சமூகத்தினால் தான்  சமூகத்திற்கு நீங்கள் பட்ட கடனை எப்படித் திருப்பித் தர முடியும் என்பதை நன்கு சிந்தித்து அதற்கேற்ற தொண்டறத்தை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை உருவாக்க ஒத்துழைப்பதே மிக மிக முக்கியமாகும் என்று நானும் தோழர்களும் குறிப்பிட்டபோது அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது!

சமூகநீதி என்பது வெறும் பிச்சையல்ல!


சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல; நம் உரிமை. யாரிடமும் நாம் கையேந்தவில்லை. தட்டிக் கேட்டுப் பெறுவதற்கு நமக்கு உரிமையும் நியாயமும் உண்டு; அரசியல் சட்டப்படி தான் நாம் அதைக் கேட்கிறோம்.

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் போராட்டத்தால்தான் வந்தது. அதன் வரலாறு தான் இன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டம் ஏன்? என்ற நூல் என்பதை விளக்கி, மண்டல் கமிஷன் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கும் அமல்படுத்துவதற்கும் திராவிடர் கழகம், 42 மாநாடுகளை 16 போராட்டங்களை உ.பி. உட்பட பல மாநிலங்கள், சந்திரஜித் யாதவ் போன்றவர்கள் துணையோடு கர்ப்பூரிதாக்கர், போன்றவர்களோடு நடத்தியுள்ள வரலாற்றை புதிய தலைமுறைக்கு எடுத்துக் கூறினேன்.

90 ஆண்டுகளுக்குமுன் காசியில் பெரியார்!

தோழர்கள் காட்டிய ஆர்வம், விமான தளத்தில் வழியனுப்பி வைக்கும்போதுகூட இங்கே நாங்கள் அடிக்கடி வர வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினைத் துவக்க வேண்டும் என்று ஆர்வம் கொப்பளிக்கக் கூறியது கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம் நாங்கள்.

சுமார் 90 ஆண்டுகளுக்குமுன் எனது தலைவர் ஆசான் தந்தை பெரியார் சந்நியாசியாகிட காசி வந்து வெறுத்துத் திரும்பி பிறகு சுயமரியாதை இயக்கம் துவக்கி, சமூகப் புரட்சிக்கு வித்திட்டார்; இன்று அவரது தொண்டன் நான் இங்கே உங்களால் தலைமை விருந்தினராக அழைத்துச் சிறப்பிக்கப்படுகிறேன் என்றால் பெரியார் வாழ்கிறார். பெரியாரால் நாம் வாழுகிறோம் என்றும் வாழ்வோம் என்று ஒப்பிட்டுக் காட்டினேன்.

30 நிமிட ஆங்கில உரை

ஜோதிபா பூலே, சாகுமகராஜ், நாராயண குரு போன்ற சமுதாய போராளிகளில் தந்தை பெரியார் மிகவும் மதித்த  அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் கூறிய கருத்துகள், ஜாதிபேத அடக்குமுறைகள், அதைத் தாண்ட சமூகநீதிக் களத்தில் கல்வி, உத்தியோகம், பகுத்தறிவு, பெண்கள் சமூக அதிகாரம் பெறும் நிலை எல்லாம் நமது அஜண்டாக்களாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் 30 நிமிடங்கள் பேசியதற்கு நல்ல வரவேற்பு, ஆமோதிப்பு இருந்ததோடு, அதன்பின் பேசிய உ.பி. பிரமுகர்கள் பெரியார் வந்தபோது நாங்கள் இளைஞர்கள் இப்போது முதியவர்கள். நீங்கள் இப்பகுதிக்கு எல்லாம் வந்து விழிப்புணர்வை உருவாக்க தலைமை தாங்கி, வழிகாட்டுங்கள் என்றெல்லாம் நாம் வியக்கத்தக்க முறையில் இந்தியில், ஆங்கிலத்தில் பேசினர்!

இளைஞர்களான அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். வெற்றியாளர்களும் உணர்ச்சியுடன் பதில் அளித்தனர்.

இரவு 10.30 மணி வரை விழா
இரவு 10.30மணிக்கும் அவர்கள் கலையவும் இல்லை; களைப்படையவும் இல்லை! என்னே அதிசயம்! தமிழ்நாட்டில்கூட அப்படி ஒரு கூட்டம் அவ்வளவு நீண்ட நேரம் நடைபெறுமா என்பது அய்யமே!

1958-இல் அய்யா தந்தைபெரியார், அன்னை மணியம் மையாருடன் காசிக்குப் பார்வையாளராக சென்றபிறகு, அய்யாவின் கொள்கையைப் பரப்பும் வாய்ப்பு இப்போது! தோழர் கோ. கருணாநிதியின் அயராத உழைப்பும், திட்டமிட்ட செயலாக்கமும் வடமாநிலங்களிலும் (உ.பி. பீகார்) நாடாளுமன்றத்திலும் நல்ல பயனைத் தந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, 27 சதவிகித இடஒதுக் கீட்டினை (OBC) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவித்து ஆணை பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் ஆகஸ்டு 7 (1990). 1958-இல் வாரணாசி, பாட்னா, டில்லி போன்ற பலவிடங்களிலும் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பும் ஏனைய சமூகநீதி அமைப்புகளும் இணைந்து தந்தை பெரியாரை அழைத்து இதுபோன்ற சமூகநீதித் திருவிழாவைக் கொண்டாடின.

நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!

வாரணாசி விழாவில் எனது உரையின் இறுதியில் குறிப்பிட்டேன். நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்; அடைய வேண்டிய இலக்குகள் ஏராளம். சில சிறு சண்டைகளில்  வெற்றி பெற்றுள்ளோம். யுத்தத்தில்  வெற்றி பெற்றால் தான் அது உண்மை யான நிலைத்த நீடித்த வெற்றியாகும் என்று குறிப் பிட்டேன். உ.பி. மாநிலம் 7ஆம் தேதி திருவிழா வழிகாட்டு கிறது; புதுகணக்கைத் திறந்து, புதுவெள்ளத்திற்கான மடை திறந்து விடப்பட்டுள்ளது. பெரியார் இப்போது வடபுலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்!
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


வாரணாசி மாவட்ட ஆட்சியர் ரவீந்திரா (அய்.ஏ.எஸ்.) உரை

அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற நீங்கள் திறமை படைத்தவர்கள்; நாளை பணியை சிறப்பாக செய்திட உள்ளீர்கள். ஆனால் நீங்கள் நூறு விழுக்காடு உங்கள் உழைப்பை தந்தாலும், உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆகவே, நீங்கள் இருநூறு விழுக்காடு அதிகம் உழைத்திட வேண்டும்; நேர்மையாகவும், துணிவாகவும் உங்கள் பணியை செய்திடுங்கள்; அதில் நீங்கள் பின்வாங்க வேண்டாம்.

நீங்கள் சிறப்பாக பணியாற்றினால் கிடைக்கும் பாராட்டைவிட, சிறு தவறு செய்தாலும், உங்களைக் கடுமையாக தண்டித்திட தயாராகும் சமுதாயத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதையும், அது உங்களை மட்டும் அல்லாமல், உங்கள் சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொண்டு, சிறப்பாகப் பணியாற்றுங்கள்.

நீங்கள் இடஒதுக்கீட்டின் பயனால் இப்பணி கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள். இதை எதிர்க்கும் சிலர் கடந்த 21 ஆண்டுகளாக தாங்கள் பழிவாங்கப்பட்டதாக கருதுகிறார்கள். ஆனால் நாம் அவர்களால், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக பழி வாங்கப்பட்டோம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. ஆனால் நாம் மறந்து விடாமல், இடஒதுக்கீடு கிடைத்திட அரும்பணி ஆற்றிய மாமனிதர்களை நன்றியோடு நினைவில் கொள்ளுங்கள்.

Tuesday, August 9, 2011

சமூக நீதித் தடத்தில் தமிழர் தலைவரின் தேவை!

உத்தரப்பிரதேசம் வாரணாசி (காசி)யில் உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கக் கூட்டமைப் பின் சார்பில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில்) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாராட்டு விழா 7.8.2011 அன்று மாலை நடைபெற்றுள்ளது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டார்.

சமூக நீதிக்கான சட்டங்கள், ஆணைகள் இருந்தும்கூட அவற்றை செயல்படுத்துவதில் ஆங்காங்கே உயர்ஜாதி நிருவாக வர்க்கம் முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டுதான் வருகின்றன. நீதிமன்றங்கள்கூட தவறான வியாக்கியானங்கள்மூலம் அந்தச் சக்திகளுக்குத் துணை போவதும் வேதனைக்குரியது.

மண்டல் குழுப் பரிந்துரைகளின்படி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு அளிக்கப்பட்டது (7.8.1990)

வழக்கம்போல உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக அது நடைமுறைக்கு வர மேலும் இரண்டாண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாண்டு கழித்து அளிக்கப்பட்ட தீர்ப்பில்கூட புதிதாக - அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாத பொருளாதார அளவுகோல் என்ற புதிய கரடியை அவிழ்த்து விட்டனர்.

மத்திய அரசில் 27 விழுக்காடு அளிக்கப்பட்டும் மேற்கு வங்கம் போன்ற பொதுவுடைமைக் கட்சியினர் ஆளும் மாநிலத்தில்கூட 27 விழுக்காடு கொடுக்கப்படாத நிலை கண்டிக்கத்தக்கது.

27 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்பட எத்தனிக்கும் கால கட்டத்தில் அப்பொழுது இருந்த பா.ஜ.க. அரசு மத்திய அரசு பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 இலிருந்து 60 என்று உயர்த்தி, ஏற்கெனவே பணியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த உயர்ஜாதியினர் மேலும் ஈராண்டுகள் பணியில் தொடரவும், பிற்படுத்தப்பட்டவர்கள் உடனடியாக உள்ளே நுழைய முடியாத நிலை என்ற சூழ்ச்சியையும் அரங்கேற்றினர்.

இப்பொழுதுகூட மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப் பட்டோர் 27 விழுக்காடு இடங்களைப் பெற்றிடவில்லை; மிகவும் கேவலமான முறையில் வெறும் 6 சதவிகிதத்துக்கே தள்ளாடிக் கொண்டு இருக்கின்றனர்.

மத்திய தேர்வாணையமோ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டோரின் இடஒதுக்கீட்டில் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற இவர்களை பொதுப் போட்டிக்கான இடங்களில் அமர்த்தாமல், அவர்களில் இடஒதுக்கீடு பிரிவுக்குக் கொண்டு போய் 50 சதவிகித இடங்களையும் உயர்ஜாதி ஆதிக்க வர்க்கம் கபளீகரம் செய்து கொண்டு திரிகிறது.

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. கல்வியில் இடஒதக்கீடு கிடைப்பதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற அளவில் அளிக்கப்படும் என்றனர். இப்பொழுதோ அதனை ஆறு ஆண்டுகாலமாக நீடிப்பதற்கான சூழ்ச்சியிலும் இறங்கிவிட்டனர்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு அறிக்கையில் கூறியபடி) பிற்படுத்தப்பட்டோர் சமூகநீதியைப் பெற்றிடப் போராடும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தாலும் ஒன்றுபட்டு போராடும் நிலை எட்டப்படவில்லை. அவரவர்களும் அவர்களின் கட்சிக் கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டோருக்கான ஓர் இயக்கம் கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதைத்தான் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர்.

தந்தை பெரியார் வழிவந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று ஓர் அகில இந்திய இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

1995 செப்டம்பர் 19இல் டில்லி மாவ்லங்கர் மன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைகளில் காணப்படும் அடுத்த கட்ட செயல்பாட்டுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

1959 பிப்ரவரி முதல் தேதி முதல் 28 வரை வடநாட்டுக்கு பயணத்தைத் தந்தை பெரியார் (4000 மைல் பயணத்தை சாலை வழியாக) மேற்கொண்டார். ஜான்சி, கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் ஆகியவை அவர் மேற்கொண்ட பயணத்தின் முக்கிய பகுதிகளாகும். அந்தப் பயணத்தில் அன்னை மணியம்மையார் அவர்களுடன் நமது ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அய்யாவுக்கு உதவியாகச் சென்றிருந்தார்.

கான்பூரில் ரிபப்ளிக் கட்சியினர் உருவிய வாளுடன் தந்தை பெரியார் அவர்களுக்கு உணர்வு மிக்க வரவேற்பினைக் கொடுத்தனர். பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்!, பம்மன் பாரத் ஜோடுதோ! (பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு!) என்று முழக்கமிட்டனர்.

அந்த நிகழ்ச்சியிலும் தந்தை பெரியார் அவர்கள் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 52 ஆண்டுகளுக்குப்பின் அதே கோரிக்கையை வாரணாசி யில் தமிழர் தலைவரிடம் வேண்டுகோள் வைத்தது சரித்திரத்தின் வினோதமான சுழற்சியாகும்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக் களத்தில் இந்தியாவுக்கும், மத மற்ற சமத்துவத்திற்கு உலக அளவிலும் தேவைப்படும் தலைவர் ஆகி விட்டார். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கான அர்த்தம் இதுதான்!

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்கள் நெஞ்சில் பாலை வார்த்தது!

ஆட்சி மக்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டுமே தவிர
தன்முனைப்புக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது!
முதல் அமைச்சரின் போக்கில் மாற்றம் வரட்டும்! 


உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக வழங்கிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு.க. அரசு ஆட்சியிலிருந்தபோது கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டம் என்பது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து, தக்காரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிக அருமையான பாடத் திட்டம் - ஒன்று முதல் 10 ஆவது வகுப்பு வரை.
இதனை எதிர்க்கட்சிகளாக அன்று அமர்ந்தவர்கள் உள்பட பலரும் (அ.தி.மு.க. தவிர) வலியுறுத்தினார்கள். செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்குக் கோரிக்கையாகவும் வைத்தனர்.
அதனால் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்கென தனிச் சட்டம் கொண்டு வந்து, (அமைச்சரவையில் வல்லுநர்களால் வரையப்பட்ட அந்த பாட திட்ட அறிக்கையையும் விவாதித்து) ஒரு மனதாக ஏற்று தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார்.
தேர்தல் முடிவும் - மாற்றமும்!
அப்போது அதனை எதிர்த்து சில தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டனர். அது தள்ளுபடியான பிறகு, உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் - மேல் முறையீடு செய்து அதிலும் தோல்வி கண்டனர். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அன்றைய (தி.மு.க.) அரசு வரும் 2011-12 கல்வி ஆண்டிலிருந்து இப்பாடத் திட்டம் செயலுக்கு வரும் என்று கூறியதோடு அதற்கான பாடப் புத்தகங்களையும் சிறந்த பாட நூல் வல்லுநர்கள், கல்வி அறிஞர்களைக் கொண்டு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிட்டு, இவ்வாண்டு பள்ளிக் கல்வியாண்டு துவங்குமுன்பே மாணவர்களுக்கு வழங்கிட எல்லா ஏற்பாடுகளையும் செய்த நிலையில்தான் தேர்தல் முடிவால் அ.தி.மு.க. அரசு செல்வி ஜெயலலிதா தலைமையில் அமையும்படி நேர்ந்தது.
மக்கள் தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டியது என்ற நிலையில், அரசு என்பது ஒரு தொடர்ச்சி, சில மாற்றங்கள், கட்சி அரசியலால் ஏற்படுத்தலாமே தவிர, முந்தைய ஆட்சி செய்த எல்லாவற்றையும் தலை கீழாகக் கவிழ்ப்பது - செயல்படுத்தாமல் தன் முனைப்பு, வன்மத்தைக் காட்டுவது ஜனநாயகத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை! விரும்பத்தக்கதல்ல. ஆனால் புதிய அரசோ இதற்கு மாறாக செயல்படத் துவங்கி விட்டது!
அவசர அவசரமாக ரத்து செய்த நிலை!
இக்கல்வி ஆண்டு, பள்ளிகள் திறப்பதை ஒருமாதம் தள்ளி வைத்ததோடு, அப்போதும் இப்பாடத் திட்டத்தை ஏற்க இயலாது என்று பதவியேற்ற அன்றே அவசரக்கோலம் அள்ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு; சமச்சீர் கல்வியை ரத்துசெய்து சட்டத் திருத்தம்; அதற்கு அதே நாளில் ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1 கோடியே 20 லட்சம் பிள்ளைகள் - உலக அதிசயங்களில் ஒன்றாக  கடந்த 100 நாள்கள் பாடப் புத்தகங்களே இன்றி - யோகா, டான்ஸ் கதை காட்சி என்று காலந்தள்ளிய கொடுமை அன்றாட அவலமாகியது! பெற்றோர்களும், கல்வியாளர்களும், பொது நல விரும்பிகளும் மிகவும் வேதனையும் விரசமும் அடைந்தனர். ஒன்று முதல் பத்து வகுப்புவரை படிக்க வேண்டிய மாணவர்களின் படிப்புக் காலம் விரயப்படுத்தப்பட்டது. குறிப்பாக அரசு தேர்வைச் சந்திக்க வேண்டிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பீதியும், மன
நலப்பாதிப்பும் ஏற்படுத்தப்பட்ட கொடுமை!
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு - சமச் சீர் கல்வியை அமல்படுத்திட வேண்டும் என்பதே!
அரசு நியமித்த அக்கிரகார கமிட்டி
உடனே உச்சநீதிமன்ற படையெடுப்பு; அங்கே  தேவையானால் ஒரு புதுக் கமிட்டியை போட்டு சில பாடங்களை மறு ஆய்வு செய்யலாம் என்றனர். ஒரு அக்கிரகாரக் கமிட்டியை அவசரத்திற்குப் போட்டு, அவர்களிடம் அறிக்கை வாங்கி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இத்தனைக் கோடி வரிப்பணம் பாழாவதா என்று  கேட்டதோடு, உடனே செயல்படுத்திட சமச்சீர் பாடப் புத்தகங்களை வழங்கிட ஆணையும் பிறப்பித்தார்கள்.
தொலைநோக்கோடு கூறினோமே!
அத்தீர்ப்பை ஏற்க நாம் உள்பட பலரும் தமிழக அரசை, முதல்வரை கேட்டுக் கொண்டோம். அவர் லட்சியம் செய்யவில்லை. நாம் விடுத்த அறிக்கையில் உச்சநீதிமன்றம் சென்றாலும்  - முடிவு எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது என்பது தான் முடிவாக இருக்கும் என்று தொலைநோக்கோடு கூறினோம்.
வழக்கம்போல அலட்சியம் செய்து, பிடிவாதமாக மேல் முறையீட்டுக்குச் சென்று இன்று உச்சநீதிமன்றம் இரட்டைத் தாழ்ப்பாளை அம்மையார் ஆசைக்குப் போட்டு விட்டது!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு 25 காரணங்களை முன்னிறுத்தி உச்சநீதிமன்றம் இன்று காலை இந்த நல்ல தீர்ப்பினை வழங்கி, பெற்றோர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது!
நியாயம், நீதி வென்றுள்ளது; தன் முனைப்பை முன்னிறுத்தி, அரசியல் நடத்தாமல் ஆக்க ரீதியாக இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - எதிர்பார்ப்பு என்பதை இதன் மூலமாகவாவது முதல் அமைச்சர் அம்மையார் புரிந்து கொண்டு, ஆட்சியை நடத்திட முன்வர வேண்டும்.
ஒரு குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து முன்பு மக்கள் திரண்டுள்ளது போலவே உணர்ச்சிப் பிரவாக வெள்ளம் ஓடுகிறது இன்று நாடெங்கும்.
சுவர் எழுத்தினைப் பார்த்துப் பாடம் பெற அ.தி.மு.க. அரசு தவறக் கூடாது.
மலைபோல் எதிர்ப்புகள்!
மூன்றே மாதங்களில் இவ்வளவு மலைபோல் எதிர்ப்பு மக்கள் வெறுப்பை ஒரு ஆட்சி சம்பாதிக்கலாமா? மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலாவது முன் யோசனையோடு பிடிவாதம்  காட்டாது, மக்கள் நலனுக்கு முன்னுரிமையே தவிர, தன் முனைப்புக்கே பழி வாங்குதற்கோ அல்ல என்று காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
ஊடகங்களே உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்!
ஊடகங்களே ஊமையன் கனவு கண்டதுபோல் மென்று விழுங்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி, ஊராள்வோருக்குத் தக்க அறிவுரை கூறி, உங்கள் மதிப்பை மரியாதையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்பதும்கூட நமது வேண்டுகோள்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சமூகநீதியை நிலைநாட்ட தமிழர் தலைவரைத் தலைமையேற்க வேண்டுகோள்!

வாரணாசியில் நடை பெற்ற சமூகநீதி விழா வில், அகில இந்திய அள வில் சமூக நீதியை நிலை நாட்ட தலைமையேற்று வழி நடத்திட தமிழர் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேச பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். பதவி களுக்கு இவ்வாண்டு தேர்வு பெற்றோருக்குப் பாராட்டு விழாவும் அதனுடன் இணைந்து தந்தை பெரியாரின் 1950 ஆம் ஆண்டு வகுப் புரிமை ஏன்? சொற் பொழிவின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை வாரணாசி ஓட் டல் கிளார்க்ஸ் ஆவத் மாநாடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு காசி வித் யபீத் பல்கலைக் கழ கத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகா தலைமையேற்றார். யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் தலை வர் ரவீந்திரராம் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநில கூட்ட மைப்பின் செயலாளர் அமிர்தான்சு அமைப் பின் பணியினையும், வார ணாசியில் இரண்டாவது ஆண்டாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதையும் குறிப்புரையாக அளித்தார்.
துவக்கத்தில் தந்தை பெரியாரின் வகுப்பு ரிமை ஏன்? ஆங்கில நூலை பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா வெளியிட, யூனியன் வங்கி உத்திர பிரதேச மாநில பொது மேலாளர் பி.கே.பன்சால் பெற்றுக் கொண்டார்.
வெற்றி பெற்ற அய்.ஏ.எஸ். மாணவர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து, குடி மைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை, பூங்கொத்து நினைவுபரிசு மற்றும் பெரியாரின் சிந்தனை கள் என்ற ஆங்கில நூல் ஆகிவற்றை ஒவ்வொரு வருக்கும் அளித்து, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி சிறப்பு செய் தனர்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
விழாவில், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் உறுப்பினரும், நாடாளு மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எஸ். கே.கார்வேந்தன், வார ணாசி மாவட்ட ஆட்சி யர் ரவீந்திரா அய்.ஏ. எஸ்., பேராசிரியர் சவுத் திரம் யாதவ், தேசிய பிற் படுத்தப்பட்டோர் நிதி நிறுவன முன்னாள் தலை வர் டாக்டர் பாபுராம் நிஷாத், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கரு ணாநிதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில கூட் டமைப்பின் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
அசோகா கல்வி நிறு வனத் தலைவர் அசோக் ஆனந்த் விழா நிகழ்ச்சி நிரலை கவிதைபட சிறப் பாக தொகுத்து வழங் கினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சால்வை, நினைவுப்பரிசு, பெரியாரின் சிந்தனை கள் நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில், அமைப் பின் உறுப்பினர்கள் குடும் பத்தினருடன் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல்துறையைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களும் கலந்து கொண்டு, அரங்கம் நிரம்பி இருந் தது. மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10.30 மணிக்கு நிறைவுற்ற விழாவில், இறுதிவரை அனைவரும் இருந்து கருத்துகளை கேட்டறிந் தது மிகச் சிறப்பானதா கும். வியப்பளிப்பதாக வும் இருந்தது.
காசியில் முக்கிய மான காயில் விழா நடை பெறும் அதே நாளில் இந்துச் சமூக நீதிக்கான விழா சிறப்பாக நடை பெற்றது மிகவும் குறிப் பிடத்தக்கதாகும்.
அனைவருக்கும் இரவு உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. (சுமார் 11 மணி அளவில்) உத்தரபிரதேச மாநி லத்தில் வாரணாசியில் நடைபெற்ற சமூக நீதித் திருவிழாவாக அமைந் ததை அனைவரும் மகிழ் வுடன் பகிர்ந்து கொண் டனர்.
ஏறத்தாழ 50 ஆண்டு களுக்குப் பிறகு, வார ணாசிக்கு வருகை தந்த - தமிழர் தலைவரின் 30 நிமிடம் உரை சமூக நீதி, பெரியாரின் உழைப்பு, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு, சமூக ஏற்றத் தாழ்வு என அனைத்தையும் உள் ளடக்கியதை அனைத் துப் பெருமக்களும், சிறப்பு செய்யப்பட்ட மாணவர் களும் கவனத்துடனும், மகிழ்வுடனும் கேட்ட றிந்தது விழாவின் சிறப் பான அம்சமாகும்.
தலைமையேற்று நடத்த வேண்டுகோள்!
சமூக நீதி இயக்கத் துக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்று வழி நடத்தித் தருமாறு திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர் களை விழா ஏற்பாட்டா ளர்கள் கேட்டுக் கொண் டனர். விழாவை முன்னிட்டு, தந்தை பெரியாரின் ஆங் கில நூல்களின் விற்ப னைக் கூடம் அமைக்கப் பட்டு அனைத்து நூல் களும் விற்கப்பட்டு விட்டன.
நிகழ்ச்சி முடிந்து தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களை விமா னம் நிலையம் வரை வந்து ரவீந்திரராம், பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, டாக்டர் ஹேமேந்திர குமார் அசோக் ஆனந்த், அமிர்தான்சு, பிரசாந்த், மற் றும் விழாக்குழுவினர் பலரும்  வழியனுப்பி வைத்தனர்.

சமூகநீதியை நிலைநாட்ட தமிழர் தலைவரைத் தலைமையேற்க வேண்டுகோள்!

வாரணாசியில் நடை பெற்ற சமூகநீதி விழா வில், அகில இந்திய அள வில் சமூக நீதியை நிலை நாட்ட தலைமையேற்று வழி நடத்திட தமிழர் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேச பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். பதவி களுக்கு இவ்வாண்டு தேர்வு பெற்றோருக்குப் பாராட்டு விழாவும் அதனுடன் இணைந்து தந்தை பெரியாரின் 1950 ஆம் ஆண்டு வகுப் புரிமை ஏன்? சொற் பொழிவின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை வாரணாசி ஓட் டல் கிளார்க்ஸ் ஆவத் மாநாடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு காசி வித் யபீத் பல்கலைக் கழ கத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகா தலைமையேற்றார். யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் தலை வர் ரவீந்திரராம் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநில கூட்ட மைப்பின் செயலாளர் அமிர்தான்சு அமைப் பின் பணியினையும், வார ணாசியில் இரண்டாவது ஆண்டாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதையும் குறிப்புரையாக அளித்தார்.
துவக்கத்தில் தந்தை பெரியாரின் வகுப்பு ரிமை ஏன்? ஆங்கில நூலை பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா வெளியிட, யூனியன் வங்கி உத்திர பிரதேச மாநில பொது மேலாளர் பி.கே.பன்சால் பெற்றுக் கொண்டார்.
வெற்றி பெற்ற அய்.ஏ.எஸ். மாணவர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து, குடி மைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை, பூங்கொத்து நினைவுபரிசு மற்றும் பெரியாரின் சிந்தனை கள் என்ற ஆங்கில நூல் ஆகிவற்றை ஒவ்வொரு வருக்கும் அளித்து, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி சிறப்பு செய் தனர்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
விழாவில், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் உறுப்பினரும், நாடாளு மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எஸ். கே.கார்வேந்தன், வார ணாசி மாவட்ட ஆட்சி யர் ரவீந்திரா அய்.ஏ. எஸ்., பேராசிரியர் சவுத் திரம் யாதவ், தேசிய பிற் படுத்தப்பட்டோர் நிதி நிறுவன முன்னாள் தலை வர் டாக்டர் பாபுராம் நிஷாத், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கரு ணாநிதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில கூட் டமைப்பின் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
அசோகா கல்வி நிறு வனத் தலைவர் அசோக் ஆனந்த் விழா நிகழ்ச்சி நிரலை கவிதைபட சிறப் பாக தொகுத்து வழங் கினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சால்வை, நினைவுப்பரிசு, பெரியாரின் சிந்தனை கள் நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில், அமைப் பின் உறுப்பினர்கள் குடும் பத்தினருடன் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல்துறையைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களும் கலந்து கொண்டு, அரங்கம் நிரம்பி இருந் தது. மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10.30 மணிக்கு நிறைவுற்ற விழாவில், இறுதிவரை அனைவரும் இருந்து கருத்துகளை கேட்டறிந் தது மிகச் சிறப்பானதா கும். வியப்பளிப்பதாக வும் இருந்தது.
காசியில் முக்கிய மான காயில் விழா நடை பெறும் அதே நாளில் இந்துச் சமூக நீதிக்கான விழா சிறப்பாக நடை பெற்றது மிகவும் குறிப் பிடத்தக்கதாகும்.
அனைவருக்கும் இரவு உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. (சுமார் 11 மணி அளவில்) உத்தரபிரதேச மாநி லத்தில் வாரணாசியில் நடைபெற்ற சமூக நீதித் திருவிழாவாக அமைந் ததை அனைவரும் மகிழ் வுடன் பகிர்ந்து கொண் டனர்.
ஏறத்தாழ 50 ஆண்டு களுக்குப் பிறகு, வார ணாசிக்கு வருகை தந்த - தமிழர் தலைவரின் 30 நிமிடம் உரை சமூக நீதி, பெரியாரின் உழைப்பு, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு, சமூக ஏற்றத் தாழ்வு என அனைத்தையும் உள் ளடக்கியதை அனைத் துப் பெருமக்களும், சிறப்பு செய்யப்பட்ட மாணவர் களும் கவனத்துடனும், மகிழ்வுடனும் கேட்ட றிந்தது விழாவின் சிறப் பான அம்சமாகும்.
தலைமையேற்று நடத்த வேண்டுகோள்!
சமூக நீதி இயக்கத் துக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்று வழி நடத்தித் தருமாறு திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர் களை விழா ஏற்பாட்டா ளர்கள் கேட்டுக் கொண் டனர். விழாவை முன்னிட்டு, தந்தை பெரியாரின் ஆங் கில நூல்களின் விற்ப னைக் கூடம் அமைக்கப் பட்டு அனைத்து நூல் களும் விற்கப்பட்டு விட்டன.
நிகழ்ச்சி முடிந்து தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களை விமா னம் நிலையம் வரை வந்து ரவீந்திரராம், பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, டாக்டர் ஹேமேந்திர குமார் அசோக் ஆனந்த், அமிர்தான்சு, பிரசாந்த், மற் றும் விழாக்குழுவினர் பலரும்  வழியனுப்பி வைத்தனர்.

Saturday, July 30, 2011

அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வு சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்திய ரீதியில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு என்கிற மருத்துவக் கவுன்சிலின் முடிவைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. இதுகுறித்துத் தமிழ்நாடு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்தியே தீர்வது என்பதில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒற்றைக் காலில் நிற்கிறது. கடந்த ஆண்டே அறிவிப்பையும் வெளியிட்டது (21.12.2010). இதனை எதிர்த்து தி.மு.க. அரசு தொடர்ந்த வழங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி இடைக்காலத் தடையும் விதித்தார்.


உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது (2007). அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், தமிழ்நாடு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புப் பெற்றாகி விட்டது.


கடந்த ஆண்டு மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வு அறிவிப்புத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தி.மு.க. அரசு தன்னையும் (Implead) இணைத்துக் கொண்டு வாதாடியது. மத்திய அரசும் மாநிலங்களின் கருத்தறிந்து இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.


திராவிடர் கழகம் போராட்டம்


மருத்துவக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்துத் திராவிடர் கழகம் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது (29.12.2010). இந்த ஆண்டு அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு உண்டு என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது, உச்சநீதிமன்றமும் ஒப்புதல் தந்து விட்டது.


மாநில அரசின் உரிமையில் தலையிடுவதா?


இது கண்டிப்பாக மாநில அரசின் உரிமையில் தலையிடும் அத்துமீறிய செயல்தான் என்பதில் அய்யமில்லை. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 சதவிகிதமும் முதுகலைப் படிப்புக்கு 50 சதவிகிதமும் மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் ஒட்டு மொத்தமான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு என்றால் - இது குரங்கு அப்பம் பிரித்த கதைதானே! அவ்வளவு ஏமாளியாக மாநிலங்கள் இருக்கின்றன என்கிற நினைப்பா? இதில் இன்னொரு கொடுமை - சமூக அநீதி என்னவென்றால் இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது; எஸ்.சி., எஸ்.டி.க்கு மட்டும் உண்டு - என்னே பிரித்தாளும் தந்திரம்!


மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மேலானதா மருத்துவக் கவுன்சில்?


மற்ற மற்ற மாநிலங்களில் கருத்தறிந்து முடிவு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு கருத்துத் தெரிவித்த மத்திய அரசு - இவ்வாண்டு நுழைவுத் தேர்வுக்குப் பச்சைக் கொடி காட்டியது எந்த அடிப்படையில்? மற்ற மற்ற மாநிலங்களில் கருத்துக்களைக் கேட்டு அறிந்துதான் இந்த முடிவுக்கு வந்ததா என்பது விளக்கப்படவில்லை.


மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியால்தான் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மாணவர் சேர்க்கைக்கு எந்த மாதிரியான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தானே முடிவு செய்ய முடியும்?


அகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ். போல அகில இந்தியக் கல்வித்துறை (அய்.இ.எஸ்.,) ஒன்றைக் கொண்டுவருவது குறித்துக்கூட யோசனை இருப்பதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு கூறினார். பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண்ணை மாநில அரசு நிர்ணயித்தால் அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் (ஏ.அய்.சி.டி.) வேறொரு மதிப்பெண்ணைக் கூடுதலாக நிர்ணயிக்கிறது.


போகிற போக்கைப் பார்த்தால் மாநில அரசு என்ற ஒன்றே தேவையில்லை என்ற பழைய ஜன சங்கம் (ஆர்.எஸ்.எஸ். கொள்கை) கூறி வந்தபடியான முடிவு எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.


அதனை வலியுறுத்தக் கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசு நிர்ப்பந்தித்துக் கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக வரும் செப்டம்பரில் சென்னையில் ஒரு மாநாடு கூட்டப்படும். +2 தேர்வு என்பது அரசு நடத்தும் தேர்வு தானே! அதில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்வது குற்றமான காரியமா? தேர்வுக்கு மேல் தேர்வு என்பதன் அவசியம் என்ன?


இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான பாடத் திட்டமா இருக்கிறது? பல மொழி, பல இனம், பல்வேறு புவியியல் நிலை, ஏற்றத் தாழ்வான கல்வி வளர்ச்சி உள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியாகும்? போட்டித் தேர்வும் தகுதித் தேர்வும் ஒன்றல்ல; இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.


இந்தி, இங்கிலீஷில் மட்டுமே நுழைவுத் தேர்வு எழுத முடியும் - இது இந்தி வாலாக்களுக்குத்தானே சாதகம்?

நீதிபதிகள் கூறியதென்ன?


நுழைவுத் தேர்வுதான் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோலா? இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (27.4.2007)


நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பதும் கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தேடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்களே - அதுதானே உண்மை?

என்ன கெட்டு விட்டது?


நுழைவுத் தேர்வு இலலாமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வெளியில் வந்து தொழில் செய்து கொண்டு இருக்கிறார்களே, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாகத்தானே தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.


இவர்கள் சொல்லுகிற மதிப்பெண் அளவுகோல்தான் தகுதியை நிர்ணயிக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் இவ்வாண்டு தமிழ்நாட்டில் +2 தேர்வில் கட்ஆஃப் மதிப்பெண் விவரம்: 200-க்கு 200 - 69 பேர்கள்; 199.75 - 198 மதிப்பெண் பெற்றோர் 1099; 197.97-195 - 2007 பேர்; 194.75-190 - 3180 பேர்; இந்த மதிப்பெண்கள் போதுமானவை இல்லையா? இதைவிடத் தாண்டியதா நுழைவுத் தேர்வு?


சமூகநீதிக்கு எதிரானது!


சமூகநீதியை ஒழிப்பதும் - கிராமப்புற மாணவர்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும்தான் நுழைவுத் தேர்வின் பின்னணி என்பதில் அய்யமில்லை. மாநிலங்களிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரி இடங்களை மேலும் அள்ளிச் செல்லுவதற்கான சூழ்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது. இந்தியா - முழுமையும் நுழைவுத் தேர்வைத் திணித்தால்கூட அம்மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால்கூட, தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாடு அதனை ஏற்றுக் கொள்ளாது - இது உறுதி!


தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?


இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? முதல் அமைச்சர் அவர்கள் இதுபற்றிய கருத்தினை இதுவரை தெரிவிக்காதது ஏன்?


69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வந்த முதல் அமைச்சர் அவர்கள், இந்த முக்கியமான பிரச்சினையில் தமிழ்நாட்டின் கருத்தினை உறுதியாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


2011-2012ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் நிறைவு பெற்றது என்றாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே தடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

Saturday, July 23, 2011

சமூக நீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி விருது தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது

காலம் சென்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி அவர்களின் நினைவு அறக்கட்டளை 24.7.2011 அன்று அய்தராபாத்தில் கொண்டாட உள்ள அவரது மூன்றாவது நினைவு நாள் விழாவில் தமிழினத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சமூக நீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவிற்கு ஆந்திர மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு காகிமாதவராவ் தலைமை தாங்குவார். இந்த நிகழ்ச்சி அய்தராபாத் பக்ளி காம்பட்டி ஆந்திர மாநில சாலைப் போக் குவரத்துக் கழக கலா பவனில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது.

மேலும் இந்த விழாவில், நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி நினைவு அறக்கட் டளையை ஆந்திர மாநில நிருவாக தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் நீதியரசர் ஜி.எத்திராஜுலு அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்.

அத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் கே.ராமசாமி அவர் கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதி என்னும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார்.

நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி அவர்கள் மனபத்திரிகா என்ற இதழில் எழுதிய தலையங்களின் தொகுப்பு நூலான நா மாதா (எனது தாய்) என்ற நூல் வெளி யிடப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் மற்ற சிறப்பு விருந்தினர்கள் வருமாறு:

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் கே.சி.பானு, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பி.சேஷசயனரெட்டி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ஜி.சந்தரையா, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பவானி பிரசாத், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ஆர்.காந்தராவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ராஜா இளங்கோ, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பி.சந்திரகுமார், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் கே.எஸ்.அப்பாராவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.

மதிப்பிற்குரிய திரு நீதியரசர் நவ்ஷாத் அலி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம். திரு நீதியரசர் ஜி.பிக்ஷாபதி, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி

திரு நீதியரசர் டி.கோபால கிருஷ்ணா, ஆந்திர மாநில உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி

மதிப்பிற்குரிய அமைச்சர் டி. சிறீதர் பாபு, அரசமைப்பு சட்ட விவகாரத் துறை அமைச்சகம், ஆந்திர மாநிலம்

திரு எம். சத்யநாராயணராவ், ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்துக் கழகத் தலைவர்

திரு. ஜி.விவேகானந்த், மக்களவை உறுப்பினர்

திரு. ஜி.வி.ஹர்ஷகுமார், மக்களவை உறுப்பினர்

திரு. பி.பிரபாகர் கவுட், மக்களவை உறுப்பினர்

திரு. கே.ஈ.கிருஷ்ணமூர்த்தி, ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினர்

திரு ஜி.எஸ்.எஸ்.சிவாஜி, ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்

திரு ஜி.ராஜேஷம் கவுட், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்

திரு டி.டி. நாயக், அய்.பி.எஸ். (ஓய்வு)

பேராசிரியர் ரவிவர்மகுமார், மூத்த வழக்கறிஞர், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர்.
http://viduthalai.in/new/e-paper/14353.html

Tuesday, March 22, 2011

வழக்குரைஞர் தொழிலுக்கு நுழைவுத் தேர்வா? தமிழர் தலைவர் கண்டனம்

சட்டக் கல்லூரியில் படித்து பார்-கவுன்சிலில் பதிவும் செய்து, வழக்குரைஞர் தொழிலைத் தொடங்குபவர்கள் நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மருத்துவருக்கும், பொறியாளருக்கும் சார்ட்டெட் அக்கவுன்டென்ட் ஆகியோருக்கும் இல்லாத தகுதித் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வை, வழக்குரைஞர்கள் படித்து முடித்த பிறகு ஏன் வைக்க வேண்டும்?

வழக்குரைஞர் தொழிலில் இழந்த அக்ரகார ஆதிக்கத்தை மீண்டும் உள்ளே நுழைக்க மறைமுகத் தேர்வு மூலம் ஏற்பாடாகிறது.

மேலும் வழக்குரைஞர் தொழில் செய்யாமலேயே, பார்கவுன்சிலில் பதிவும் செய்யாமலேயே சட்டக் கல்லூரியில் படித்துவிட்டு நேரடியாக நீதிபதியாக நியமிக்கும் கொடுமை அக்ரஹார சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டு முன்சீஃப் மேஜிஸ்திரேட்டுகள் ஒரு சிலர் நியமிக்கப்பட்டும் விட்டனர்.

பார்ப்பன சூழ்ச்சி!
சட்டப் படிப்பில் நெற்றியில் டிராயிங் வரைந்து கொண்டும், பட்டை போட்டுக் கொண்டும்,கிராஸ்பெல்ட் அணிந்து கொண்டும் இருக்கும் அக்ரஹார ஆத்தின் பேர் வழிகளின் ஆதிக்கத்தை சட்டத் தொழிலில் உடைத்தெறிந்து, தமிழர்கள் முன்னேறி தந்தை பெரியாரின் தொண்டால், திராவிடர் கழகத்தின் அயராத உழைப்பால் நம்மவர்கள் அட்வகேட் ஜெனரலாகவும், உயர்நீதிமன்றம் முதல் அனைத்து மட்டம் வரை நீதிபதிகளாகவும், சீனியர் கவுன்சிலர்களாகவும் வருவதை பிற்காலத்தில் தடுப்பதற்கான முன்கூட்டிய ரகசிய ஏற்பாடே இந்த எழுத்துத் தேர்வு ஆகும்.

மூன்று ஆண்டுகள் மற்றும் 5 அய்ந்து ஆண்டுகள் என முழு நேரமும் சட்டம் பயின்று, பல்கலைக் கழகத் தேர்வும் எழுதி, தேர்ச்சியும் பெற்று, பார்-கவுன்சிலில் பதிவும் செய்யப்பட்டு வழக்குரைஞர்களாகதொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகும், வேறு எந்த ஒரு தொழிலிலும் இல்லாத  வழக்குரைஞர்  நிர்ப்பந்தத் தேர்வு அவசியம்தானா? அது தேவையற்ற ஒன்றே!

லா-அகாடமி ஏற்படுத்தலாமே!

இதற்கு பார்-கவுன்சில் தேவையின்றிச் செலவிடும் நேரத்திற்கும், பண விரயத்திற்கும் பதிலாக இளம் வழக்குரைஞர்களை தொழிலில் ஊக்குவிக்க லா அகாடமி (டுயற ஹஉயனநஅல) போன்ற பயிற்சிப் பள்ளிகளை நடத்தலாமே! அதன் மூலம் தவறான, திசைமாறிய இளம் வழக்குரைஞர்களும் தொழிலை முறையாகப் பயிற்சி பெற்று சிறந்த வழக்குரைஞர்களாக மாற வாய்ப்புள்ளபோது, அதை விடுத்துத் தேவையின்றி இந்தத் தேர்வுகளைக் குறித்து வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டுமா? இந்த தேர்வில் தேறவில்லை என்றால், அவர் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றதன் பொருள் என்ன? அவருக்குச் சட்டப் பட்டம் அளித்த பல்கலைக் கழகத் தின் நிலை என்ன? என்பதுபோல் தேவையில்லாத, வேண்டத்தகாத பிரச்சினை களைக் கிளப்பி பல்கலைக் கழகங்களுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் பிரச்சினை களை ஏற்படுத்தி, நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக - அரசாங்கத்திற்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.

எனவே, ஆரம்பத்திலேயே முளையில் கிள்ளி எறிய வேண்டியதை விட்டு ஆணிவேர் பதிந்த பிறகு கட்டடம் இடிகிறதே எனக் கூச்சல் போட்டுப் பயன் இல்லை.

போராட்டம் வெடிக்கும்!
இது தொடர்பாக தேவைப்பட்டால் திராவிடர் கழகத்தின் மாணவர் அணி ஒத்த கருத்துடையவர்களை இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்தவும் தயங்காது.
- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சகோதரர் வைகோவுக்கு தமிழர் தலைவர் திறந்த மடல்

ஆரிய மாயை உங்களை வஞ்சம் தீர்த்துவிட்டது
துணிந்து முடிவு எடுங்கள் தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது!

 வைகோ அவர்களையும், அவர் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ம.தி.மு.க.வையும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவமதித்து, வஞ்சம் தீர்த்த நிலையில், வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய திறந்த மடல் இதோ:

அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும்...

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு  கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?

தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வ தாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணி யிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர் களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்பட வில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத் துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!
வஞ்சத்தைத் தீர்த்த அக்ரகாரம்

கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை  - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சகத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது!

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திர மாகவே காட்சி அளிப்பது - அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன் முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண் டியதல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்து அறிந்த செய்தியாகும்.

சோ - குருமூர்த்தி - ஜெயலலிதா - இனம் இனத்தோடு!

அவரது தற்போதைய  ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப,

இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரண மாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதை யொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத் தினீர்கள்.

- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க. வாகவும் - அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப் பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.

வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த  தலைவர் கலைஞர் அவர்கள் - தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்ட போதுகூட, தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரை ஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

உள்நோக்கமற்ற வேண்டுகோள்

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல  - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள்.  எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக்  கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள்.

மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.

பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்  என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்