Tuesday, March 22, 2011

வழக்குரைஞர் தொழிலுக்கு நுழைவுத் தேர்வா? தமிழர் தலைவர் கண்டனம்

சட்டக் கல்லூரியில் படித்து பார்-கவுன்சிலில் பதிவும் செய்து, வழக்குரைஞர் தொழிலைத் தொடங்குபவர்கள் நுழைவுத் தேர்வு ஒன்றை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மருத்துவருக்கும், பொறியாளருக்கும் சார்ட்டெட் அக்கவுன்டென்ட் ஆகியோருக்கும் இல்லாத தகுதித் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வை, வழக்குரைஞர்கள் படித்து முடித்த பிறகு ஏன் வைக்க வேண்டும்?

வழக்குரைஞர் தொழிலில் இழந்த அக்ரகார ஆதிக்கத்தை மீண்டும் உள்ளே நுழைக்க மறைமுகத் தேர்வு மூலம் ஏற்பாடாகிறது.

மேலும் வழக்குரைஞர் தொழில் செய்யாமலேயே, பார்கவுன்சிலில் பதிவும் செய்யாமலேயே சட்டக் கல்லூரியில் படித்துவிட்டு நேரடியாக நீதிபதியாக நியமிக்கும் கொடுமை அக்ரஹார சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டு முன்சீஃப் மேஜிஸ்திரேட்டுகள் ஒரு சிலர் நியமிக்கப்பட்டும் விட்டனர்.

பார்ப்பன சூழ்ச்சி!
சட்டப் படிப்பில் நெற்றியில் டிராயிங் வரைந்து கொண்டும், பட்டை போட்டுக் கொண்டும்,கிராஸ்பெல்ட் அணிந்து கொண்டும் இருக்கும் அக்ரஹார ஆத்தின் பேர் வழிகளின் ஆதிக்கத்தை சட்டத் தொழிலில் உடைத்தெறிந்து, தமிழர்கள் முன்னேறி தந்தை பெரியாரின் தொண்டால், திராவிடர் கழகத்தின் அயராத உழைப்பால் நம்மவர்கள் அட்வகேட் ஜெனரலாகவும், உயர்நீதிமன்றம் முதல் அனைத்து மட்டம் வரை நீதிபதிகளாகவும், சீனியர் கவுன்சிலர்களாகவும் வருவதை பிற்காலத்தில் தடுப்பதற்கான முன்கூட்டிய ரகசிய ஏற்பாடே இந்த எழுத்துத் தேர்வு ஆகும்.

மூன்று ஆண்டுகள் மற்றும் 5 அய்ந்து ஆண்டுகள் என முழு நேரமும் சட்டம் பயின்று, பல்கலைக் கழகத் தேர்வும் எழுதி, தேர்ச்சியும் பெற்று, பார்-கவுன்சிலில் பதிவும் செய்யப்பட்டு வழக்குரைஞர்களாகதொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகும், வேறு எந்த ஒரு தொழிலிலும் இல்லாத  வழக்குரைஞர்  நிர்ப்பந்தத் தேர்வு அவசியம்தானா? அது தேவையற்ற ஒன்றே!

லா-அகாடமி ஏற்படுத்தலாமே!

இதற்கு பார்-கவுன்சில் தேவையின்றிச் செலவிடும் நேரத்திற்கும், பண விரயத்திற்கும் பதிலாக இளம் வழக்குரைஞர்களை தொழிலில் ஊக்குவிக்க லா அகாடமி (டுயற ஹஉயனநஅல) போன்ற பயிற்சிப் பள்ளிகளை நடத்தலாமே! அதன் மூலம் தவறான, திசைமாறிய இளம் வழக்குரைஞர்களும் தொழிலை முறையாகப் பயிற்சி பெற்று சிறந்த வழக்குரைஞர்களாக மாற வாய்ப்புள்ளபோது, அதை விடுத்துத் தேவையின்றி இந்தத் தேர்வுகளைக் குறித்து வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டுமா? இந்த தேர்வில் தேறவில்லை என்றால், அவர் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றதன் பொருள் என்ன? அவருக்குச் சட்டப் பட்டம் அளித்த பல்கலைக் கழகத் தின் நிலை என்ன? என்பதுபோல் தேவையில்லாத, வேண்டத்தகாத பிரச்சினை களைக் கிளப்பி பல்கலைக் கழகங்களுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் பிரச்சினை களை ஏற்படுத்தி, நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக - அரசாங்கத்திற்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.

எனவே, ஆரம்பத்திலேயே முளையில் கிள்ளி எறிய வேண்டியதை விட்டு ஆணிவேர் பதிந்த பிறகு கட்டடம் இடிகிறதே எனக் கூச்சல் போட்டுப் பயன் இல்லை.

போராட்டம் வெடிக்கும்!
இது தொடர்பாக தேவைப்பட்டால் திராவிடர் கழகத்தின் மாணவர் அணி ஒத்த கருத்துடையவர்களை இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்தவும் தயங்காது.
- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சகோதரர் வைகோவுக்கு தமிழர் தலைவர் திறந்த மடல்

ஆரிய மாயை உங்களை வஞ்சம் தீர்த்துவிட்டது
துணிந்து முடிவு எடுங்கள் தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது!

 வைகோ அவர்களையும், அவர் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ம.தி.மு.க.வையும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவமதித்து, வஞ்சம் தீர்த்த நிலையில், வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய திறந்த மடல் இதோ:

அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும்...

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு  கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?

தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வ தாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணி யிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர் களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்பட வில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத் துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!
வஞ்சத்தைத் தீர்த்த அக்ரகாரம்

கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை  - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சகத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது!

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திர மாகவே காட்சி அளிப்பது - அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன் முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண் டியதல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்து அறிந்த செய்தியாகும்.

சோ - குருமூர்த்தி - ஜெயலலிதா - இனம் இனத்தோடு!

அவரது தற்போதைய  ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப,

இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரண மாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதை யொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத் தினீர்கள்.

- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க. வாகவும் - அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப் பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.

வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த  தலைவர் கலைஞர் அவர்கள் - தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்ட போதுகூட, தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரை ஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

உள்நோக்கமற்ற வேண்டுகோள்

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல  - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள்.  எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக்  கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள்.

மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.

பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்  என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

Tuesday, March 15, 2011

தமிழின வாக்காளர்களுக்கு திராவிடர் கழகப் பொதுக்குழு வேண்டுகோள்

எல்லார்க்கும் எல்லாம் என்ற சாதனைகள்மிகு சமதர்ம தி.மு.க. ஆட்சி மீண்டும் நிலைபெற

தி.மு.க. அணிக்கே ஆதரவு தாரீர்!


மனுதர்மம் அரியணை ஏற இடம் தராதீர்!

எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் சாதனைகள் நிகழ்த்திக் காட்டிய, தி.மு.க. ஆட்சியே மீண்டும் தமிழ்நாட்டில் நிலைபெற, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனுதர்மத்தை அரியணையில் அமர்த்த இடம் கொடுக்கக் கூடாது என்றும், தமிழின வாக்காளர் பெருமக்களுக்கு திராவிடர் கழகப் பொதுக் குழு வேண்டுகோள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம்

தீர்மானம் எண் 2:
நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிடர் கழகத்தின் முடிவு

வரும் ஏப்ரல் 13 (2011) அன்று நடைபெறவிருக்கும் 14ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நமது இயக்கத்தையும், திராவிடர் சமுதாயத்தையும் பொறுத்த வரை வெறும் அரசியல் ரீதியான ஒரு ஜனநாயக நிகழ்வு மட்டுமல்ல; அதைவிட ஆழமாகவும் தொலைநோக்குடனும் பார்க்க வேண்டிய முக்கியமான சமுதாயப் போராட்டத் தின் வடிவமாகும்.

பரம்பரை யுத்தம் என்று சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே இதே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் குறிப்பிட்டார்.

இப்போது நமது வாக்காளர்கள்முன் உள்ள பிரச் சினை - பல்வேறு ஒப்பனைகளுடன்  வரும்  மனு தர்மத்தை  மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லது

பெரியார் - அண்ணா கண்ட திராவிடர் இயக்க, சுயமரியாதை இயக்க இலக்கு நோக்கிய சமதர்ம ஆட்சியாக - அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில், அய்ந்தாம் முறையாக பொற்கால ஆட்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான சூத்திர - பஞ்சம, மனிதத் தர்ம ஆட்சியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி, நடைபெற்ற சரித்திர சாதனைகளைத் தொடரச் செய்வதா என்பதேயாகும்!

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு  - இவற்றை உள்ளடக்கிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முயற்சிகளைச் செய்தும், நீசபாஷை என்று இழிவுபடுத்தப்பட்ட நம் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்  தந்து, தமிழ் மானம் காத்தும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தியும், புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும்,  தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தி, புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த துணிச்சல் மிகுந்த ஆட்சியாகும் மானமிகு கலைஞர் ஆட்சி.

மக்கள் தொகையில் சரி பகுதியான மகளிர் நலம் காக்க, பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களை உருவாக்கிப் பெருக்கி, அவர்களுக்குச் சொந்த கால் பலத்தை ஏற்படுத்தி, சொத்துரிமை முதல் பதவி உரிமை வரை பலவற்றையும் தந்து, அவர்களுக்கு திருமண உதவி, மறுமண உதவி, கருவில் வளரும் குழந்தைகள் நலத்தையும்கூடப் பாதுகாத்தும், அனாதைகளான விதவைகளுக்கு உதவித் தொகை, திருநங்கையர்களாம் அரவாணி களுக்குத் தனிவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு வசதி - இவைகளைச் செய்து வரலாறு படைத்துள்ள ஆட்சி என்ற சாதனைகளோடு தேர்தலை தி.மு.க. சந்திக்கிறது.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி, நோய் போக்க உதவியாக மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், கடனற்ற நிம்மதி - இவை உள்ள வாழ்க்கை யினைத் தருவதுதானே நல்லாட்சியின் அடை யாளங்கள்? அவை அத்தனையும் மக்களைச் சென்றடையும் வண்ணம் நாளும் திட்டம் தீட்டி செயல்படுத்திட்ட ஆட்சி திமுக ஆட்சிதானே! 

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு, மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் 50 ரூபாய்க்கு; (காய்கறிகளும்கூட அவசியப்படும்போது அரசே மலிவு விலையில் உழவர் சந்தைகள் மூலம்)  வழங்கிப் பசிப்பிணி போக்கியதோடு, நோயற்ற வாழ்வு வாழ வருமுன்னர் காக்கும் திட்டம் முதல், வந்தாலும் உடன் காக்கும் கலைஞர் உயிர் காக்கும் திட்டம் வரை, 108 எண் ஆம்புலன்ஸ் வண்டிகள் ஓடோடி வரும் மருத்துவ வசதிகள் ஏழை - எளிய மக்களுக்கு கிடைத்திடும் திட்டங்கள் எல்லாம் இனிய கொடைகளாகும்.

கல்விப் புரட்சியோ, கிராமங்கள், நகரங்கள் போன்ற வேறுபாடு இன்றி, ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, தொழிற் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை மாவட்டந்தோறும் அரசுத் துறையில் ஏற்படுத்திய வரலாறும், நுழைவு தேர்வினை ரத்து செய்தும் முதல் தலைமுறை யினருக்கு சாதி, மத, பால் வேற்றுமை பாராது படித்து முன்னேற இலவசப் படிப்பு வசதிகள் - எண்ணற்ற பல்கலைக் கழகங்கள்-ஓட்டைக் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு 21 லட்சம் குடிசைகள் இல்லா கான்கிரீட் வீடுகளை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவித்து, 3 லட்ச வீடுகளில் ஏற்கெனவே எம்மக்கள் குடியேறி வாழ்கின்ற வாய்ப்புக்களை அளித்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.

சொன்னதையெல்லாம் செய்து சொல்லாத தையும் செய்து, சாதனை மேல் சாதனைகள் அடுக்கியுள்ள ஆட்சி - மக்கள் நலன் கருதித் தொடர வேண்டாமா? என்பதை வாக்காளர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

ரூபாய் 7000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாக செலுத்துப வர்களுக்கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி என்று அறிவித்து, ஏழைகள் நெஞ்சில் பால் வார்த்த ஆட்சி.  பட்டினியின்றி, எலிக்கறியைத் தின்னாதவர்களாக ஆக்கி, வரலாறு படைத்த மனிதநேய ஆட்சி திமுக ஆட்சி, தொழிற்சாலை பெருக்கம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்; வேலைகிட்டாதாருக்கு உதவித் தொகை - இவ்வளவும் இங்கு சாதனைகள்.

1 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பி, நள்ளிரவில் சிறை பிடித்த ஆட்சியல்ல திமுக ஆட்சி. ஆறாவது சம்பளக் கமிஷன் கூடுதல் ஊதியத்தையும் தந்து, அரசு ஊழியர்களை உயர்த்திட்ட ஆட்சி! எந்தத்தரப்பிலும் போராட்டம் அரும்பும் போதே அழைத்துப் பேசி, தீர்வு காணும் ஜனநாயக நெறியில் நடைபோடும் ஆட்சியாகவே கடந்த 5 ஆண்டு காலம் சரித்திரம் படைத்துள்ளது! தொழிலாளர் நல வாரியம் உட்பட எத்தனை எத்தனை வாரியங்கள்!

எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமதர்மத் தத்துவ அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நேரிடையாகவோ,  மறைமுகமாகவோ திமுகவின் ஆட்சியால் பலன் அடைந்தவர்களேயாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள், பொய்யுரைப் பரப்பல்கள், நடக்காதவைகளை ஊழல் குற்றச்சாற்றுகளாக்கிக் காட்டுதல் - இவைகளையும் மீறி, முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல கலைஞர் ஆட்சி மீண்டும் மலரப் போவது உறுதியாகும்!

இவ்வளவு சாதனைகளைச் செய்த ஓர் கட்சிக்கு, ஆட்சிக்கு எதிராக ஆரியம் வரிந்து கட்டி நிற்கிறது - 1971இல் செய்ததைப் போல அவதூறுகளை அள்ளி வீசுகின்றது. எனவே, திராவிடப் பெருங்குடி மக்கள், ஏமாந்து விடாமல் - யார் வரக்கூடாது என்பதை முதலில் தெளிவாக உணர வேண்டும் - யார் வர வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் எண்ணற்றவை என்ற போதிலும் கூட.

தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவதுபோல, தன்மானத்தைப் பலி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங் களும்கூட பொதுவாழ்வில் ஏற்படும். இனமான வேட்கையின்முன் தன்மானம் வெகுச் சாதாரணமானது என்பது அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களுக்குத் தெள்ளத் தெளிய விளங்கும்! ஒரு போரில் நமது வியூகம், நம் எதிரி வகுக்கும் வியூகம் - உபாயத்தைப் பொறுத்தே அமையும். நாம் எந்த ஆயுதத்தை எப்படி எப்போது எடுப்பது என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்க வைக்கிறான் என்ற மூதுரை - நமக்கு சரியான நிலைப்பாடு எடுக்க உதவுகிறது. இந்த நிலையில், 1971 தேர்தலைப் போன்றதுதான் வரும் 14ஆவது தமிழகச் சட்டப் பேரவைக்கான தேர்தலும். தமிழர்கள் திமுக தலைமையில் உள்ள கூட்டணியையே வெற்றி வாகை சூடச் செய்வதன் மூலம் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழினப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

வரும் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந் தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை ஆதரித்து, வெற்றி பெறச் செய்யும் ஜனநாயகக் கடமையாற்றிட வாரீர் வாரீர் என்று  திராவிடர் கழகப் பொதுக் குழு தமிழினப் பெரு மக்களுக்குக் கடமையுடன் கூடிய அன்பழைப்பை விடுக்கிறது.

வெற்றி நமதே!

தீர்மானம் எண் 3:

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - இதிகாசக் கற்பனைப் பாத்திரமான இராமனைக் காட்டி - இராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறி, அறிவியலுக்கு முற்றிலும் முரணான வகையில் நாட்டு மக்களுக்கான மாபெரும் ஒரு வளர்ச்சித் திட்டத்தை நீதிமன்றம் மூலம் முடக்கியிருப்பதற்கு இப்பொதுக்குழு தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத்தார் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் இத்திட்டத்தை - அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டும், இனம் மற்றும் கலாச்சாரம் இவற்றைச் சுட்டும் திராவிட என்னும் பெயரை முத்திரையாகப் பயன்படுத்திக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அஇஅதிமுக தன் தேர்தல் அறிக்கை பக்கம் 83,84 ஆகிய பக்கங்களில் வெளியிட்டு வலியுறுத்தி யிருந்ததற்கு முற்றிலும் முரணாகவும், நேர் எதிராகவும் அரசியல் நோக்கத்தோடும், மூடநம்பிக்கை அடிப்படையில் இராமன் பெயரைப் பயன்படுத்தியும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்திடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்குத் தொடுத்திருப்பதை - தமிழ் நாட்டு மக்கள் - குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் மிகச் சரியாக அடையாளங் கண்டு, நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அஇஅதிமுகவுக்கும், அதனோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் கட்சி களுக்கும் தக்கவகையில் தோல்வியை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

(அ) ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தேவை!


இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களைக் கொன் றொழித்து சிங்களப் பேரினவாத வெறியைத் தீர்த்துக் கொண்ட பிறகும், அத்தீவில் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை அறவே புறக்கணிக்கப்பட்டு வரும் கொடுமை தொடர்ந்து கொண்டே வருகிறது. முள்வேலி முகாமுக்குள் இன்னும் பல்லாயிரம் தமிழர்கள் முடங்கியே கிடக்கிறார்கள்.

தமிழர்களின் மரபு வழி தாயகப் பகுதிகளில் அரசின் உதவியால் திட்டமிட்ட வகையில் சிங்களவர்களின் குடியேற்றமும் நடந்த வண்ணமாகவே உள்ளது. இதற்கு மேலும் காலம் கடத்தாமல், ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை நிலைபெறச் செய்ய, தேவையான அனைத்து முயற்சிகளையும் உளப்பூர் வமாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

ஆ) லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேமீது விசாரணை நடத்தி, போர்க் குற்றவாளியாக அறிவிக்க நியாயமான  - சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அய்.நாவை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தூதர்களாகத் தமிழர்களை நியமிக்கக் கோருதல்

அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமீரகம் (துபாய்) குவைத் முதலிய நாடுகளுக்குத் தமிழர் களையே தூதர்களாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. திராவிடர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ஒரு தனித்துறையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசை இப்பொதுக் குழு பெரிதும் பாராட்டுகிறது.

தீர்மானம் 6:


நுழைவுத் தேர்வு அறவே கூடாது

மாநில அளவில் நுழைவுத் தேர்வு அறவே கிடையாது என்று திமுக அரசு சட்டரீதியாக அறிவித்துள்ள நிலையில், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற பெயரில், நுழைவுத் தேர்வைத் திணிக்கும் போக்குக்கு இப்பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களையும், கிராமப்புற மாணவ- மாணவிகளையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கச் செய்யும் இந்த நுழைவுத் தேர்வை அறவே கைவிட தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.


தி.மு.க. கூட்டணியை ஆதரித்து
திராவிடர் கழகம் பிரச்சாரம்


வரும் சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும். திராவிடர் கழகம் வழக்கம்போல எங்களுடைய மேடைகளிலேயே தனித்து நின்று பிரச்சாரம் செய்வோம். மற்ற அரசியல் கட்சியின் மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்யத் தேவையில்லை.

எங்களுக்கென்றே தமிழ்நாடு முழுக்க அமைப்புகள், கிளைக் கழகங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் தனியே மேடை அமைத்து பிரச்சாரம் செய்வோம். எனவே ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5 மணி வரை எங்களுடைய பிரச்சாரம் நடைபெறும்.
(செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
சென்னை - பெரியார் திடல் 14.3.2011)


தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு
தமிழர் தலைவர் முன்மொழிந்தார்
பொதுக்குழு எழுந்து நின்று வரவேற்பு


சென்னை பெரியார் திடலில் இன்று (14.3.2011) காலை 10 மணிக்கு திராவிடர் கழகப் பொதுக் குழு நடைபெற்றது.

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை பொதுக்குழுவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் முன்மொழிந்து (இரண் டாவது தீர்மானம்) விளக்கமளித்தார்.

அதனை தி.க. தோழர்கள், தோழியர்கள் எழுந்து நின்று உற்சாகத்தோடு வரவேற்று, கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

யார் வரக்கூடாது?

சென்னையில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஆறு நறுக்கான தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அதில் இரண்டாவது தீர்மானம் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவையின் 14ஆவது தேர்தல் குறித்த முக்கிய தீர்மானமாகும்.

தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை பெருஞ் சாதனைகளின் பட்டியல் என்ற பலத்தோடு வாக்காளர்களைச் சந்திக்க உள்ளது.
அ.இ.அ.தி.மு.க தலைமையில் இன்னொரு அணி; இந்த அணியின் தலைவரோ, கட்சியோ குறைந்தபட்சம் எதிர்க்கட்சி என்ற தகுதியோடு செயல்பட்டு இருக் கிறதா? சட்டசபையிலோ சட்டசபைக்கு வெளியிலோ அந்த வகையில் தன் கடைமையை ஆற்றியதாகக் கூற முடியாது.
தன் கட்சியும் உயிரோடு இருக்கிறது என்பதைக் காட்டி கொள்வதற்காக உப்புச் சப்பு இல்லாத ஆர்ப்பாட்டங்களை நடத்தி, போராட்டம் என்பதையே கொச்சைப்படுத்திய ஒரு செயலைத்தான் அது சாதித்துக் காட்டியிருக்கிறது.
அ.இ.அ.தி.மு.க. அணியில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகள் எல்லாம் இணைந்து தமிழ்நாட்டில் போராட்டத்தை அறிவித்தன.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதாவைத் தவிர மற்ற  கட்சிகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் நேரிடையாகப் பங்குபெற்றனர். இது பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களை செய்தியாளர்கள் கேட்டபோது, இது சில பேருடைய குணங்கள் அப்படி என்று நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியாகக் கட்சி நடத்தும் தலைவராக ஜெயலலிதா எப்பொழுதுமே நடந்து கொண்டதில்லை. பொறுப்புடன் செயல்பட வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் மாதக்கணக்கில் கொடநாடு பங்களாவில் ஓய்வு எடுத்துக்கொள்வார்.
அ.இ.அ.தி.மு.க.வோடு இப்பொழுது கூட்டுச் சேர்ந்துள்ள இடதுசாரிகள் 2001இல் அ.இ.அ.தி.மு.க. வோடு கூட்டு வைத்து வெற்றி பெற்றதுண்டு. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த ஒரு சில மாதங்களுக் குள்ளாகவே இடது சாரிகளைப் புறக்கணித்து அவமதித்து வெளியேறச் செய்தார் ஜெயலலிதா என்ற கசப்பான உண்மையை இடதுசாரிகள் எளிதாக மறந்துவிட முடியாது - முடியவே முடியாது.
முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதாவை கட்சித் தலைவர்கள் சந்திப்பது என்பது எல்லாம் அவ்வளவு சாதாரணமானதல்ல. போயஸ் தோட்டத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு  புறப்பட்டார் என்றால் அவ்வளவுதான் மணிக்கணக்கில் போக்குவரத்துப் பாதிப்பு!
அலுவலகங்களுக்குச் செல்லக்கூடியவர்கள், கல்வி நிறுவனங்களுக்குச் செல்லக்கூடியவர்கள், அவசர அவசரமாக மருத்துவமனைகளை நோக்கிச் செல்லக்கூடிய நோயாளிகள் அத்தனைப் பேரும் ஜெயலலிதா அம்மையாரைச் சபித்துக் கொட்டு வார்கள் என்பதையெல்லாம் மறக்கத்தான் முடியுமா?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் - அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவர் அவர்.
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கரசேவைக்கு ஆதரவு தெரிவித்தவர் இவர். இராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய்க் கட்டுவது என்ற வினாவை எழுப்பியவர்.
உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளங் காட்டப்பட்ட நரேந்திரமோடி முதல் அமைச்சராகப் பதவியேற்ற விழாவில், தனி விமானத் தின் மூலம் சென்றவர் இந்த ஜெயலலிதாதான். ஒரே ஒரு முதல் அமைச்சரும் இவரே, இவரே!
மதச்சார்பற்ற தன்மையின் அஸ்திவாரத்தைத் தகர்க்கும் -சிறுபான்மை மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் கொன்று குவித்த அந்த இடிஅமீனை போயஸ் தோட்டத்துக்கு அழைத்து, நல்ல வரவேற்புக் கொடுத்து வித விதமான, வகை வகையான பதார்த்தங்களுடன் விருந்து படைத்தவரும் இந்த ஜெயலலிதாதான்.
ஆர்.எஸ்.எசுக்கு மிகவும் விருப்பமான மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்த மாமணி (?) யும் இவரே!
பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே அவர்களின் கொள்கைகளுக்குக் குழி வெட்டும் குலதர்மக் கொழுந்து இவர்.
இத்தகைய ஒருவர் தலைமையில் ஆட்சி அமைவது - அமையச் செய்வது கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொரிந்து கொள்வது ஆகாதா?
முதலில் யார் வரக்கூடாது என்பதிலே நம் வாக்காளர்ப் பெருமக்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். அந்த வகையில் திராவிடர் கழகப் பொதுக்குழு சரியான வழிகாட்டுதலைச் செய்துள்ளது.
தமிழின வாக்காளர்கள் சிந்திப்பார்களாக!

நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதத்தைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளே!

பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதோடு நம் கடமை முடிந்துவிடாது. களப் பணியிலும் இறங்குவோம்; பிரச்சாரத்திலும் ஈடுபடுவோம். தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டம் சென்னை - பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நேற்று காலை சரியாக பத்து மணிக்குத் தொடங்கப்பட்டது.
திராவிடர் கழக மகளிரணி பாசறை செயலாளர் பொறியாளர் கனிமொழி கடவுள் மறுப்புக் கூறியபின், முதலாவ தாக இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இத்தீர்மானத்தைக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்மொழிந்தார். அனை வரும் எழுந்து நின்று இரு மணித் துளிகள் அமைதி காத்தனர்.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.
பொதுக் குழுக் கூட்டத்திற்கு கழகச் செயலவைத் தலைவர் ராஜகிரி கோ. தங்கராசு தலைமை வகித்தார்.
2010 அக்டோபர் 21ஆம் தேதி வேலூர் - திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவுக்குப்பின் இடைப்பட்ட 5 மாதங்களில் கழக நடவடிக்கைகள், நாட்டு நடப்புகள் பற்றி  விளக்கினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன்.
தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த கால கழகச் செயற்பாடுகள் குறித்தும், அடுத்து கழகம் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
மாணவர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து மாநில மாணவரணி செயலாளர் ரஞ்சித்குமார் எடுத்துரைத்தார். இளைஞரணி மாநிலச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், இளைஞரணி செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
தீர்மானங்கள்
கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.
தமிழர் தலைவர் முன்மொழிந்த தேர்தல் பற்றிய தீர்மானம்
நடக்க உள்ள தமிழ்நாடு 14ஆவது சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிடர் கழகத்தின் முடிவு என்னும் இரண்டாவது தீர்மானத்தைக் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் முன்மொழிந்து விளக்கிப் பேசினார்.
தன்னிறைவு மிக்க (Self Explanatory) தீர்மானமாக அது அமைந்திருந்தது. 1) பரம்பரை யுத்தம் என்று ஜெயலலிதா சொன்னதன்மூலம் ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பது உறுதிப் படுத்தப்பட்ட ஒன்றாகும்.
2) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புக்கான செயல்பாடுகள்.
3) நீஷ பாஷை என்று சங்கராச்சாரியாராலும், பார்ப்பனர் களாலும் கொச்சைப்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதியைத் தேடி தந்த தகைமை.
பண்பாட்டுப் படையெடுப்பு முறியடிப்பு
ஆரியப் புராணக் கதைகளின் அடிப்படையில் ஆண் கடவுள்களான நாரதனும்  - கிருஷ்ணனும் புணர்ந்து பெற்ற 60 பிள்ளைகள்தான் பிரபவ தொடங்கி அட்சய என முடியும் 60 வருடங்கள்தான் தமிழ் வருடங்கள் என்னும் ஆபாச ஆண்டு பிறப்புகளைத் தூக்கி எறிந்து தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றிய இலட்சிய  நோக்கு. இவையெல்லாம் பார்ப்பனப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடித்த ஆட்சி தி.மு.க. ஆட்சியின் சாதனைகளாகும்.
பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள்
4) பெண்கள் நலன் என்கிறபோது தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அசாதாரண மானவை.    பெண்களுக்குச் சொத்துரிமை, திருமண உதவித்திட்டம் , கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உதவித்தொகை, திருநங்கையர்களுக்குத் தனி வாரியம், அனாதை விதவைகளுக்கு நிதி உதவி, ஆயிரக் கணக்கான சுய உதவி குழுக்கள் என்று அலை அலையான திட்டங்களின் அடிப்படையிலான செயல் ஊக்கங்கள் மூலம் மகளிர் உரிமை ஆட்சி மாண்பமை;
5) எண்ணற்ற கல்வி நிறுவனங்கள், மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள், நுழைவுத் தேர்வு ரத்து, பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி என்று கல்விப் புரட்சியை நடத்தி வரும் சாதனை.
6) விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாகச் செலுத்திய வர்களுக்கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி செய்த ஈர நெஞ்சம்.
பசிப்பிணியை ஒழித்த பாங்கு
7) உண்ண உணவு - ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மலிவு விலையில் மளிகைச் சாமான்கள், 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இவற்றின் மூலம் பசி என்னும் பொல்லாக் கொடுமையை ஒழித்துக் கட்டி, ஓட்டையில்லா இல்லத்தில் வாழ வைத்த கருணையுள்ளம்.
8) உடல் நலமே மிகச் சிறந்த செல்வம் (Health is Wealth).  அந்த அடிப்படையில் வருமுன் காக்கும் திட்டம், வந்தபின் உயிர்களைக் காக்க 108 எண் அவசர ஆம்புலன்ஸ் உதவி, கலைஞர் உயிர் காக்கும் திட்டம் இவற்றின் மூலம் மக்கள் உயிர் பாதுகாக்கும் பொறுப்புணர்வு.
9) ஒரே ஆணையில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பியது முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. ஆனால் கலைஞர் ஆட்சியிலோ புதிய புதிய வேலை வாய்ப்பு, மத்திய அரசின் ஆறாவது சம்பள கமிஷன் ஊதிய விகிதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட நிலை. எல்லார்க்கும் எல்லாம் என்ற சமதர்ம ஆட்சி என்பதற்கு அடையாளமாக தி.மு.க. ஆட்சி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது.
சமத்துவ - சமதர்ம ஆட்சியன்றோ!
அத்தகைய சமத்துவ, சமதர்ம சமவாய்ப்பு ஆட்சி தொடர வேண்டும் என்பதைக் காரண காரியத்துடன் விளக்கியது திராவிடர் கழகத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த தீர்மானமாகும்.
1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலின்போது ராமன் படத்தை செருப்பால் அடித்த தி.க. ஆதரித்த தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்தார்கள். முடிவு என்னாயிற்று? 1967 தேர்தலில் 138 இடங்களை தி.மு.க. பெற்றது என்றால், 1971 தேர்தலில் 183 இடங்களைப் பெற்று வாகை சூடியது.
இனவுணர்வைச் சீண்டினால்..
இனவுணர்வைச் சீண்டும் வகையில் அமைக்கப்படும் எந்தக் களத்திலும் தந்தை பெரியார் ஊட்டிய இனவுணர்வு தான் வெற்றிச் சிம்மாசனத்தை அலங்கரிக்கும் என்பது தமிழ்நாட்டில் நிரூபிக்கப்பட்ட வரலாறாகும்.
நடக்க இருக்கும் தமிழகத் தேர்தலையும் அந்த நிலைக்குப் பார்ப்பனர்கள் தள்ளியுள்ள நிலையில் நடப்பது வெறும் தேர்தல் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று திராவிடர் கழகப் பொதுக் குழுவின் தீர்மானம் முரசொலித்துக் கூறுகிறது. இந்தவகையில் தீர்மானத்தின் சிறப்பை விளக்கிக் கூறினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். சமுதாய இயக்கமான திராவிடர் கழகம் அரசியலையும் அதன் குழந்தையான தேர்தலையும் சமுதாய நோக்கில்தான் பார்க்கும். தந்தை பெரியார் காலத்திலும் இதே அணுகுமுறைதான் - அதுதான் இப்பொழுதும் தொடர்கிறது.
மக்கள் பின்னால் போகாதவர்கள்
மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் சொல்வதல்ல நமது வேலை. மக்களுக்கு எது தேவையோ அதனைச் சொல்லுவதுதான் என் வேலை என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
தேர்தல் குறித்து தான் வெளியிட்ட அறிக்கை குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார். வெளிநாட்டுத் தமிழர்களிலிருந்து உள்நாட்டுத் தமிழர்கள் வரை அதனை வரவேற்றனர்.
நம்மை யாரும் அலட்சியப்படுத்த முடியாது!
நம்மை இருட்டடிக்கும் ஏடுகள்கூட அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நம்மை யாரும் அலட்சியப்படுத்திவிட முடியாது.
தேர்தலில் நிற்பவர்கள் கூறும் கருத்தைவிட, தேர்த லுக்கு நிற்காத நாம் கருத்துக்கு தமிழ் மக்களிடத்தில் கூடுதல் மதிப்பும், வரவேற்பும் உண்டு என்று கூறிய கழகத் தலைவர் தந்தை பெரியார் தந்த புத்தியை நாம் பின்பற்றுவதால், நமக்குத் தடுமாற்றம் இல்லை - எதையும் துணிவாகவும் கூற முடிகிறது என்றார்.
நாம் சொன்ன ஒரு கருத்தினை ஏற்கவில்லை என்ப தற்காக நாம் குறை காண வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நிற்கும் அந்தக் காலத்திலே ராஜதந்திரங்கள் தேவைப்பட்டிருக்கக் கூடும். இன்று இருக்கும் தேர்தல் என்பது கூட்டணி அரசியல் ஆகிவிட்டது.
எதிர் அணி வகுக்கும் திட்டத்தைக் கண்காணித்து, யூகங்களை வகுக்கும் நிலை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கூட்டணி அரசியல்
கட்சிகள் தனித் தனியே நின்று வாக்குகளைப் பெற்ற அடிப்படையில் (Proportionate Representation) பிரதிநிதித்துவம் என்ற நிலை ஏற்பட்டால், இந்தக் கூட்டணி அரசியலுக்கு வேலையில்லாமற் போய்விடும். அந்த நிலை ஏற்படாத வரை இந்த நிலை என்பது தவிர்க்கப்பட முடியாததாகும். யார் வர வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ, அதைக் கருதி அவர்களோடு கூட்டுச் சேர்ந்தவர்களையும் ஆதரிக்க வேண்டிய நிலையை தமிழர் தலைவர் வகுப்பறைப் பாடம் போல நடத்தினார்.
(காமராசர் முதல் அமைச்சராக வர வேண்டும் என்பதற் காக அவரால் நிறுத்தப்பட்ட பார்ப்பன வேட்பாளர்களை ஆதரிக்கச் சொல்லவில்லையா தந்தை பெரியார்?)
நம் ஆயுதத்தைத் தீர்மானிப்பவன் யார்?
நம் கையில் உள்ள ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிப்பான் என்பதை மறந்துவிடக் கூடாது.
திராவிடர் கழகம் ஆதரித்தால் அவர்கள் தோற்றுவிடு வார்கள் என்று சொன்னவர்கள் உண்டு.  திராவிடர் கழகம் ஆதரிப்பவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் உண்மை என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது பலத்த கரவொலி! தீர்மானம் நிறைவேற்றியதோடு நம் கடமை முடிந்து விடாது. களப்பணியையும் செய்வோம் - பிரச்சாரமும் செய்வோம் - வெற்றி நமதே! என்றார் கழகத் தலைவர்.
தோழர்களின் கருத்துரை
திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் கி. மகேந் திரன், திராவிடர் கழக மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி மணியம்மை, மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச் செயலாளர் வீ. குமரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச. இன்பலாதன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, தென் மண்டல பிரச்சாரக் குழுத்தலைவர் தே. எடிசன்ராஜா, தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ. செய ராமன், துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோர்  உரையாற்றினர்.  தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி நன்றி கூறிட, பொதுக் குழு பிற்பகல் 1. 30 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் மதியம் புலால் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.
தொகுப்பு: மின்சாரம்
ஊழலைப்பற்றிப் பேசுவோர் யார்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சிலர் கூப்பாடு போடுகிறார்கள். கேட்டால் அது யூகத்தின் அடிப்படையில் (Presumptive) என்கிறார்கள். யூகத்தின் அடிப்படை என்றால் அதன் பொருள் என்ன?
இரவில் கனவில் ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டவன், பொழுது விடிந்தவுடன் அந்த ராஜகுமாரி எங்கே எங்கே என்று தேடி ஓடினானாம். அதுபோன்றதுதான் இவர்கள் கூறும் யூகத்தின் அடிப்படையிலான ஊழல் - அதையாவது எல்லோரும் ஒரே மாதிரியாகக் கூறுகிறார்களா? அவரவர்களும் அவர்கள் இஷ்டத்துக்கு - மனதிற் தோன்றியபடி, கற்பனைக்கு எட்டியபடி கூறுகிறார்கள்.
ஊலைப்பற்றிப் பேசுவோர் யார்? இன்றைக்கும் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் நிற்பவர்கள் பேசலாமா? சினிமாக்காரர்கள் ஊழலைப்பற்றிப் பேசலாமா? கறுப்புப் பணம் வாங்காத நடிகர் உண்டா?
பொது மக்களைப் பார்த்துக்கூட தந்தைபெரியார் கேட்டாரே!
ஊழலைப்பற்றிப் பேச உனக்கு யோக்கியதை உண்டா? நீ பணம் வாங்கிட்டுதானே ஓட்டுப் போட்டாய்? இந்த யோக்கியதையில் உள்ள நீ ஊழல், லஞ்சம் பற்றிப் பேசலாமா? என்று கேட்டாரே தந்தை பெரியார்.
தேர்தலில் நிற்கிறவர்கள் இந்த அளவுக்குத்தான் செலவு செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு தேர்தல் ஆணையத்துக்கு கணக்குக் கொடுக்கிறார்களே - அது உண்மையான கணக்குத்தானா?
தேர்தல் ஆணையம் விதித்துள்ள அந்தத் தொகைக்குள் மட்டும் தான் செலவு செய்கிறார்களா? இப்படிப்பட்டவர்கள்தான் ஊழலைப்பற்றி யெல்லாம் வாய் மணக்கப் பேசுகிறார்கள்
- திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் (14.3.2011)
பிரச்சாரத் திட்டம்
தேர்தல் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் தனி மேடையில் மேற்கொள்ளும் அப்பொழுதுதான் நம் கருத்துகளை முழுமையாக நாம் எடுத்துக் கூற முடியும் என்று கூறிய தமிழர் தலைவர் அவர்கள், எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனி நபர் விமர்சனம் இடம் பெறக்கூடாது என்றும் கறாராகக் குறிப்பிட்டார். மூன்று குழுக்கள் இந்தப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளும் என்றார். பேச்சாளர்கள் கூட்டம் தஞ்சை, வல்லத்தில் வரும் 20ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் துணைப்பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம் ஆகியோர் அந்தத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துவார்கள் என்றும் குறிப் பிட்டார். கழகத் தலைவர் மேற்கொள்ளும் பிரச்சாரக் குழுவில் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு இடம் பெறுவார் என்றும் கழகத் தலைவர் அறிவித்தார். திமுக ஆட்சியின் சாதனைகள் எனும் தலைப்பில் கழகத்தின் சார்பில் நூல் ஒன்று வெளியிடப்படும். அதற்கான பொறுப்பை கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் கவனிப்பார் என்றும் கூறினார் கழகத் தலைவர்.


வி.ஜி. இளங்கோவன்
வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளராக வி.ஜி. இளங்கோவன் நியமிக்கப்படு வதாகப் பொதுக்குழுவில் கழகத் தலைவர் அறிவித்தார்.


சந்தாக்கள் குவிந்தன!
சால்வைக்குப் பதிலாக சந்தாக்களை அளிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுண்டு அதனைப் பின்பற்றிக் கழகத் தோழர்கள் வரிசையாக வந்து விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சுகளுக் கான சந்தாக்களை அளித்தனர்.


வெற்றிச்செல்வன்
திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் அ. சற்குணன் - ஆஷா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு வெற்றிச்செல்வன் என்று பெயர் சூட்டினார் கழகத் தலைவர்.
தேர்தல் வெற்றிக்கான அச்சாரப் பெயர் இது என்று கழகத் தலைவர் சொன்னபொழுது பெரும் வரவேற்பு.

Wednesday, March 9, 2011

தொலைக்காட்சியால் ஏற்பட்ட கொலைக்காட்சி-வாழ்வியல் சிந்தனைகள்

தொலைக்காட்சி என்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஊடகம்தான். ஆனால் பொழுது முழுவதையும் அதற்கே செலவிடும் நிலை நம் நாட்டு மக்களில் குறிப்பாக இளைஞர்கள், தாய்மார்கள் மத்தியில் மிகப்பெரும் தீமையை உருவாக்கி உடல் நலம், உள்ள நலம், நேரம் - இவற்றையெல்லாம் பாழாக்கும் நிலை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வருகிறது!

அறிவியல் கண்ட கண்டுபிடிப்பான தொலைக்காட்சியில் அறிவியலுக்குக் கேடு செய்து, மூடநம்பிக்கைகளை, மூளையில் ஆணியடிக்கும் பல்வகை மதவெறிகளைப் பரப்புவதும் மலிந்துவிட்டது.

மதவாதிகள் இதுபோன்ற பல தொலைக்காட்சிகளை தங்களது சொந்த உடைமைகளாக சுமார் 100 - god TV - கடவுள் டி.வி.யிலிருந்து அனைத்து மதவாதிகளும், அடிப்படை மத வெறியர்களும்கூட (Religious Fundamentalists) இப்படி ஒரு வழியில் மக்களின் மூளைக்கு சாயம் ஏற்றி, விலங்கு போடவும் செய்கின்றனர்!

டிஸ்கவரி ஒளிவழி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல், அனிமல் (மிருகம்) பற்றி இப்படி இயற்கையையொட்டிய டி.வி.களைப் பார்ப்பவர் - நம் நாட்டில் மிகவும் குறைவு. பகுத்தறிவாளர்கள் இல்லத்துப் பிள்ளைகள் - குழந்தைகளைக்கூட இவற்றைப் பார்க்கத் தூண்டுவது கிடையாது நமது பெற்றோர்கள்.

தேர்வு நேரத்தில் உலகத் தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்ற கொள்ளைக் கூட்டு சூதாட்ட பேரம் உள்பட பல ஆயிரக்கணக்கில் ஏழைகள், நடுத்தர மக்களின் பணம் உறிஞ்சப்பட்டு, மாணவர்களின் படிப்பிலும் மண்ணைப் போடும் கொடுமையைக் கண்டிக்க எவரும் முன்வருவதில்லை.

காரணம் ஆட்சியாளர்களிலும் பலருக்கு இந்தப் போதை உண்டு. சில கனவான்கள் பன்னூறு - ஆயிரம் - லட்சம் கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளவர்கள் இந்த கிரிக்கெட் மோகத்தைத் தூண்டி, அதனை தமது பணப்பெட்டிக்குள் கொண்டு செலுத்தி, திடீர் என்ற கொள்ளை லாபக் குபேரர்களாகி நிற்கின்றனர்!

அறிவுக்கோ, உடலுழைப்புக்கோ, உதவும் விளையாட்டு கூட அல்ல; இதனைக் காண தொலைக்காட்சி ஊடகங்களில் ஏலம் - அதில் ஊழல் - அதன்பின் விசாரணை - இப்படி பலப்பல அரங்கேறுகின்றன ஒவ்வொரு நாளிலும்!

என்றாலும் தொலைக்காட்சி என்ற இந்த தொல்லைக்காட்சி முன் அமர்ந்து பார்த்து காலத்தைக் கழிப்பது ஒருபுறமிருந்தாலும், பல குடும்பங்களில் வீண் தகராறு - வாய்ச்சண்டையாகத் துவங்கி, முற்றிய நிலையில் அண்ணன் - தம்பி, அப்பா - மகன் கொலையில் முடியும் உயிர்க் கொல்லியாகவும் ஆகிவிடுகிறதே!
தொலைக்காட்சியில் அடிக்கடி சேனல்களை மாற்றிட பல குடும்பத்தவரிடம் வாக்கு வாதங்கள்!
ஒருவர், இதை நான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும்போது, வாய்த் தகராறில் துவங்கி, அடிதடி கொலை வரையில் சென்று முடிகிறது.

இரண்டு நாள்களுக்கு முன் வடசென்னையில் இப்படி ஒரு கொலை - தந்தைக்கும் மகனுக்கும்; தொலைக்காட்சியில் ஒலியை (Volume - அய்) சற்று அதிகரிக்கச் சொல்ல, அவர் மறுக்க, அதில் துவங்கி கத்தியால் குத்தி, உயிரைப் பலிகொண்டுவிட்ட சம்பவம் எவ்வளவு வெட்கமானது! வேதனைக்குரியது!

தொலைக்காட்சி - கொலைக்காட்சியை உருவாக்குவதைவிட மிக மோசமான ஒரு நிகழ்வை கற்பனையால்கூட எண்ணிப் பார்க்க முடியுமா?

நான் பலமுறை எழுதியுள்ளேன்; மீண்டும் சொல்லுகிறேன். உணவுக்கு உப்பு தேவைதான்; ஆனால் உப்பே உணவாகிவிட்டால், உடல் நலம் என்னவாகும்?

பொழுதுபோக்கு (recreation) என்பது ஓய்வு நேரத்தைச் செலவழிக்கும் இளைப்பாறும் வழி; ஆனால் அதுவே 24 மணிநேரமும் என்றால் அது பொழுதுபோக்காகுமா? பொழுதையே போக்குமா? இளைப்பாறுதல்தான் ஆகுமா? யோசியுங்கள் நண்பர்களே!

பேரணி என்னும் பேராறு! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

தஞ்சை, மார்ச் 6- தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டையொட்டி பட்டுக்கோட்டையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி 5.3.2011 சனி மாலை 5.30 மணிக்கு பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் தலைவர் அ.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் புறப்பட்டது.
புலவஞ்சி இராமையன், மல்லிகை வை.சிதம்பரம் ஆகியோர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்கள். தோழர் முத்துதுரைராசன் பி.ஏ., இரா.இளவரசன் எம்.ஏ., பி.எட்., அல்லூர் இரா.பாலு, அழகியமணவாளன் பி.ஏ., நா.எழிலரசன், து.அண்ணா துரை, அ.இளங்கோவன், இரா.மோகன்தாஸ் எம்.ஏ., பி.எட்., ஆகியோர் பேரணிக்கு முன்னிலை வகித்தனர்.
இருவர் இருவராகப் பெரியார் பிஞ்சுகள், மகளிரணி, இளைஞரணி மற்றும் கழகத் தோழர்கள் கழகக்கொடி ஏந்தி அணிவகுத்து நின்றனர்.
தலைமைக் கழகத்தால் அச்சிட்டு வழங்கப்பட்ட முழக்கங்களைத் தோழர்கள் முழங்கினர். திருவாரூர் சு.சிங்காரவேலு, மாங்காடு மணியரசன், ஆகியோர் பேரணி பற்றி முன்னெடுத்து முழங்கிச் சென்றனர்.
மகளிர் தீச்சட்டி
வீ.கலைவாணி, அல்லிராணி, வேதவள்ளி, முருகம்மாள், பாக்யா, ரக்வுந்நிஷா ஆகிய கழக மகளிரணி தோழியர்கள் தீச்சட்டி ஏந்தி கடவுள் மறுப்பு முழக்கங்களை முழங்கி வந்தனர்.
கூரிய அரிவாள் மீது...
கோயில் பூசாரிகள் அரிவாள் மீது ஏறி நின்று சாமி சக்தி என்று பூச்சாண்டி காட்டுவார்களே- அந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியும் வண்ணம் பெரியார் பிஞ்சுகள் முதல் அரிவாள் மீது ஏறிநின்று கடவுள் மறுப்பு முழக்கமிட்டது கண்டு பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.
சோம.நீலகண்டன், புலவஞ்சி அண்ணாதுரை, பட்டுக்கோட்டை ராஜ்குமார், ஆலங்குடி கருணாகரன், பாலகிருஷ்ணாபுரம் மகாராஜா, பேராவூரணி ரவி, பெரியார் பிஞ்சு சுதர்சன் (குப்பக்குடி), புதுக்கோட்டை அகிலா, கறம்பக்குடி முத்து முதலியோர் பளபளக்கும் கூரிய அரிவாள் மீது ஏறிக் காட்டினர்.
மல்லிப்பட்டினம் முருகானந்தம், படப்பைக்காடு அருண்பாண்டியன், எட்டுபுலிக்காடு பாலையன் ஆகியோர் நாக்கில் அலகுகுத்தி வந்தனர்.
அலகுக் காவடி
செயங்கொண்டம் கே.பி.கலியபெருமாள், கே.எம்.சேகர் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து வந்தனர். காளையார்கோவில் நாராயணசாமி, குழுவினர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடி கோலாட்டம் அடித்து வந்தனர்.
அலகு குத்தி கார் இழுத்தல்
மதுக்கூர் சுரேந்தர், தஞ்சை சிவகாமி நகர், கார்த்திக், சேதுபாவாசத்திரம் பெரியசாமி ஆகியோர் முதுகில் அலகுக் குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்ததோடு கடவுள் மறுப்பு முழக்கங்களை எழுப்பிப் பார்வை யாளர்களை ஆச்சரியக்குறியில் ஆழ்த்தினர்.
தமிழர் வீர விளையாட்டு
சிலம்ப விளையாட்டு, சுருள் கத்தி செயல்பாடு, நாக்கில் சூடம் கொளுத்துதல் ஆகியவற்றை கறம்பக்குடி முத்து, கே.சண்முகசுந்தரலிங்கம், கே.குமரேசன் ஆகியோர் இடை இடையே மெய்சிலிர்க்கச் செய்துகாட்டி பொது மக்களை ஈர்த்தனர். தஞ்சாவூர் வெட்டிப்பாளையம் எம்.எம்.மதியழகன் குழுவினர் தப்பாட்டம் மூலம் தூள் பரப்பினர்.
பேரணியின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, திருவிழா சென்று பார்ப்பது போல் பார்த்தனர். இந்த மூடநம்பிக்கை ஒழிப்புச் செயல்பாடுகளை அதிசயமாகப் பார்த்தனர். பெண்கள், தீச்சட்டி இங்கே-மாரியாத்தாள் எங்கே? என்று முழக்கமிட்டபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பெண்களுக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலையில் தொடங்கி பெரிய தெரு, சின்னையா தெரு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலை, அதிரை சாலை, பழனியப்பன் தெரு, தலையாரித் தெரு, காளியம்மன் கோயில் தெரு, அறந்தாங்கி முக்கூட்டு, தஞ்சை சாலை, சவுக்கண்டித் தெரு, பிள்ளையார் கோயில் தெரு வழியாக மாநாடு தொடங்கும் இடத்தைப் பேரணி வந்தடைந்தது. பேரணியின் மொத்த நீளம் 5 கிலோ மீட்டராகும்.
கோயில் திருவிழாக்களையும், அது தொடர்பான நிகழ்ச்சிகளையும் பார்த்திருந்த பொதுமக்களுக்கு- திராவிடர் கழகத்தினர் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி வித்தியாசமாகவும் சில அதிர்ச்சியாகவும் இருந்தது என்பது உண்மை-அதே நேரத்தில் இளை ஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூற வேண்டும்.
http://viduthalai.in/new/home/dravidar-kazhagam/99-propoganda/4829-2011-03-06-09-14-55.html

Sunday, March 6, 2011


கிரீமிலேயரை நீக்குக! 50 சதவிகிதம் என்ற எல்லையை மாற்றுக!
பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற நிலைக் குழுவை அமைத்திடுக!

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் திணிக்கப்பட்டுள்ள பொருளாதார அளவுகோலை நீக்க வேண்டும் என்றும், 50 விழுக்காட்டுக்குமேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்ற வரையறையை அகற்ற வேண்டும் என்றும், பிற்படுத் தப்பட்டோருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தியும் டில்லியில் பெரியார் மய்யத்தில் நடை பெற்ற சமூகநீதிக் கருத்தரங்கில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டில்லி ஜெசோலா பகுதியில் உள்ள பெரியார் மய்யத்தில் நேற்று (3.3.2011) வியாழக்கிழமையன்று சமூக நீதிக் கருத்தரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இக்கருத்தரங்கைக் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள் இணைந்து நடத்தின.

திராவிடர் கழகம்

சமூக நீதிக்கான வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு

டில்லி பல்கலைக் கழக சமூக நீதிக் கல்விப் பேரவை

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் கூட்டமைப்பு

பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு ஆகியவை சார்பில் நடத்தப்பட்டது. காலை 11 மணி அளவில் தொடங்கிய இக்கருத்தரங் கிற்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான முனைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.என்.ராவ் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சமூக நீதியும், அதில் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பும் என்ற தலைப்பில் அமெரிக்க நாட்டின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் பேரா சிரியர் இலக்குவன் எஸ். தமிழ் சிறப்புரையாற்றினார்.

மதிப்பிற்குரிய விருந்தினர்களாக மக்களவை தி.மு.க. கொறடாவான டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங் களவை தி.மு.க. கட்சித் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா, பிற்படுத்தப்பட்டோர்க்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அறங்காவலர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான பேரா. ரவிவர்வகுமார், ஏ.சுப்பாராவ், பத்திரிகையாளர் திலீப் மண்டல், முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி.யாதவ், பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பின் செயல் தலைவர் எம். கங்கையன், டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் முனைவர் கேதார் மண்டல், முனைவர் பார்த்தசாரதி, மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அஞ்சையா ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர். தீர்மானங்கள்

இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

கீழ்க்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1) கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படுவதை மேற்பார்வையிட இதர பிற்படுத்தப்பட்டோர்க் கான நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

2) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி ஆணையங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்ற அரசமைப்புச் சட்டப் படியான அதிகாரங்கள் பிற்படுத்தப்பட்டோர்க்கான ஆணையத்திற்கும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

3) சமூகங்களின், சமூக, பொருளாதார, கல்வியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

4) மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பொது நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பணிகளில் இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது பற்றிய ஒரு முன்னேற்ற அறிக்கை (Status Report) தயாரித்து அளிக்கப்படவேண்டும்

5) மத்திய கல்வி நிறுவனங்களில், குறிப்பாக அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய்.எம்.எஸ்., ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது பற்றிய உண்மை அறிக்கை (Status Report) தயாரித்து அளிக்கப்படவேண்டும்.

6) மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பொது நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட மத்தியஅரசின் பணிகளில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் விடுபட்டுப் போன பணியிடங்களில் விரைவில் அவர்களைக் கொண்டு நியமனம் செய்ய வேண்டும்.

7) பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களின் நலனுக்காக போதுமான அளவு நிதி மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டும்.

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு

8) மண்டல் குழுப் பரிந்துரைகள், கீழ்க்குறிப் பிடப்பட்ட இனங்களையும் சேர்த்து, முழு அளவில் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

அ) தனியார் துறையில் இட ஒதுக்கீடு

ஆ) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு

9) பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் வருமான வரம்பு அளவுகோல் கைவிடப்படவேண்டும்.

10) இதர வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு வரையறை நீக்கப்பட வேண்டும்.

- இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

http://viduthalai.in/new/home/archive/4679.html

Thursday, March 3, 2011

டில்லி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சமூகநீதியறிஞர்கள் பங்கேற்றுக் கருத்துரை ஆற்றினர்.  டில்லி பெரியார் மய்யத்தில் சமூக நீதிக்கான கருத்தரங்கு, திராவிடர் கழகம், சமூக நீதிக்கான வழக்கறிஞர் அமைப்பு, டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாண வர்கள் அமைப்பு, அனைத்திந்திய பிற் படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங் களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார் பில் இன்று நடைபெற்றது.

பங்கேற்றோர்

இன்று காலை டில்லி பெரியார் மய்யத்தில் காலை 10.30 மணியளவில்  சமூக நீதியும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பும் என்ற தலைப்பில் தொடங் கிய சமூக நீதிக்கான கருத்தரங்கிற்கு வந்தவர்களை அனைத்திந்திய பிற்படுத் தப்பட்ட அரசுப் பணியாளர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி வரவேற்றுப் பேசினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் லட்சுமணன் எஸ்.தமிழ் (அமெரிக்கா), முன்னாள் மத்திய கல்வித் துறை அமைச்சர் டி.பி.யாதவ், உச்சநீதிமன் றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் பேரா.ரவி வர்மகுமார், ஏ.சுப்பாராவ், டில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் பார்த்த சாரதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கின் தொடக்க உரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் எம்.என்.ராவ் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.கார் வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

சமூகநீதிக்கான கருத்தரங்கின் தலைமை உரையை, திராவிடர் கழகத் தின் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான  கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார். அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாண வர் அமைப்பு மற்றும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஞ்சையா அவர்கள் நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கிற்கு டில்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜவலர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், பல்வேறு மாநிலங்களி லிருந்து சமூகநீதி ஆர்வலர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட பல்கலைக் கழக வளா கங்களில் இக்கருத்தரங்கம் பற்றிய பல வண்ண சுவரொட்டிகள் மாணவர் களைப் பெரிதும் கவர்ந்தன.

இந்த இரு பல்கலைக் கழகங்களிலும்  உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு (27 சதவிகிதம்), தவ றான விளக்கம் கூறி அவர்களுக்குரிய எண்ணிக்கையைக் குறைக்கும் சூழ்ச் சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மனித வளத்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
http://viduthalai.in/new/page1/4651.html

Wednesday, March 2, 2011

மருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்-கி.வீரமணி

கோவையின் தொண்டறச் செம்மல் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்களது மிகப் பரந்து வளர்ந்தோங்கி நிற்கும் மருத்துவ, கலை அறிவியல், கணினித் துறை, செவிலியத் துறை முதலிய பல்கலைக் கல்விக் கூடங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சீரிய செயலாற்றல் மிக்க புத்தாயிரத்து இந்தியக் குடிமகன் என்ற விருது வழங்கி, அவர்களை ஊக்க, ஊட்டச் சத்தாக இளைய தலைமுறை யினருக்குக் காட்டி எழுச்சியூட்டக் கூடிய தனித்தன்மையான விழா எடுத்து பெரு மிதம் சேர்க்கிறார்.

இவ்வாண்டு ஆந்திராவின் மிகப் பெரிய நிருவாகியும், சேவையாளருமான வெங்கட் சங்கவள்ளி எம்.பி.ஏ. அவர் களுக்கும், எனக்கும் விருது அளித்துப் பெருமைப்படுத்தினார்.

எனக்கு இது மிகவும் சங்கடமாக அமைந்தபோதிலும், 26 ஆண்டுகளுக்கு முன் (1985 வாக்கில்) எனக்கு கோவை யில் மாரடைப்பு (Heart Attack) முதன் முதலில் நள்ளிரவில் திடீரென்று வந்த நிலையில், அவரது கே.ஜி. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரு டைய அருமையான சேவை, கவனிப்பு கண்காணிப்பு மூலம் நான் மீண்டும் புதுவாழ்வு பெற்றேன் என்பதால் அவரது விருப்பத்தை அன்புக் கட்டளையாகவே ஏற்று மறுப்பேதுமின்றி ஒப்புக் கொண்டு சென்றேன் - இணையரோடு.

அவ்விழா எளிமை, இனிமை, விருந் தோம்பல், உற்சாகம், மாணவ சமுதாயத் தின் எடுத்துக்காட்டான கட்டுப்பாடு - இவைகளின் எடுத்துக்காட்டாக நடை பெற்ற விழாவாகும்!
கூட்டுக் குழு வெற்றி (Team Spirit) என்பது அன்னார் அருமைச்செல்வன் அசோக் பக்தவத்சலம் தலைமையில் அவரது சக கூட்டுப் பணித் தோழர்கள் உற்சாகத்துடன் தொண்டாற்றி மகிழ்ந் தனர்!

அதில் பாராட்டு விருது பெற்ற பெருந்தகையாளர் வெங்கட் சங்கவள்ளி அவர்கள் ஆந்திராவின் நிறுவனமான சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ந்தோங்கிட மூல காரணமானவர்.

அவர் தந்த திட்டம்தான் இப்போது தமிழ்நாட்டில் நாம் கலைஞர் ஆட்சியில் மக்கள் உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆந்திராவில் அறிமுகப்படுத்த காரணமானவராக கருத்துரை கூறியவர் என்று அறிமுகப் படுத்தினார்.

திரு. வெங்கட் அவர்கள் பேசும்போது ஒரு முக்கிய தகவலைக் கூறினார் - வியத்தகு செய்தி.

இந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் துவக்கப் பட்டதிலிருந்து சுமார் 65,000 தாய்மார் களின் மகப்பேறு (பிரசவங்கள்) நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 40 லட்சம் பேர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டு, கேட்டவர்களை மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக் கினார்கள்!

அதற்கு முதலில் கிராமங்களில் உள்ள தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கயிற்றுக் கட்டிலில் வைத்து பல மைல் தூக்கிச் சென்று, வழியிலேயே சரியான மருத்துவ வசதி கிட்டாத தினால் இறந்தவர்கள் பலர் என்பது இப்பொழுதும் மாற்றப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் - திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் உள்ள கங்களாஞ் சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் பக்கத்து மற்றும் சுற்று கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கே பெரிதும் விவசாயிகளான அன்றாடம் பணிபுரியும் இருபாலர் -பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர - சகோதரிகள் நிறைந்த பகுதி என்ற நிலையில் நான் கண்ட காட்சி மனதை மிகவும் நெருடச் செய்தது!

கயிற்றுக் கட்டிலில் வைத்து பிரசவ வலியால் துடிக்கும் ஏழை - எளிய தாய்மார்களை திருவாரூருக்கோ, நாகூருக்கோ அழைத்துச் செல்லும் (தூக்கிச் செல்லும்) காட்சியைக் கண்டு, அந்தப் பகுதியில் எப்படியாவது ஒரு மகப்பேறு மருத்துவமனை தொடங்கிடத் திட்டமிட்டு, இன்று சோழங்கநல்லூரில் (திருவாரூர்) அந்த கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் நிலத்தைப் பெற்று பெரியார் மருத்துவமனை பல படுக்கை வசதிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது; (அரசுகளின் எந்த உதவியும் இதற்குக் கிடையாது; இன்னமும் கிட்டவில்லை என்றாலும்) சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவ வசதிகள் எங்கணும் சிறப் புடன் நடைபெற மருத்துவமனைகள் மட்டும் போதாது; மருத்துவ மனங் களும் தேவை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த கிராமப்புற இளைஞர்கள் (இருபால்) கூட, கிராமங்களில் போய் தங்கி மருத்துவ சேவை செய்ய முன் வர மறுக்கிறார்கள் - அரசு சம்பளம் விகிதம் தந்தாலும்கூட மருத்துவர்கள் கிடைப்பதில்லை.

இதற்கொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் போன்று அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும் போலும்!

என்ன செய்வது! பணமே வாழ்க்கை என்றாகிவிட்டதால் குணம் விடை பெற்று, பணம் ஆட்சி செய்து, மக்களை பிணம் ஆக்கும் கொடுமை நீடிக்கிறது!

நிலைமை மாறும் - கலைஞர் போன்ற மனிதநேயர்கள் ஆட்சியில். அதற்கும் ஒரு விடையும் - விடியலும் கிடைக்கும் என்று நம்புவோமாக!

கருஞ்சட்டைக் கடலே, கை வரிசையைக் காட்ட வருக! வருக!! பட்டுக்கோட்டையாம் பாடி வீடு அழைக்கிறது! அழைக்கிறது!!

அஞ்சா நெஞ்சன் அழகிரி
பட்டுக்கோட்டை என்றாலே சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை என்று பொருள். இந்தக் கோட்டையிலிருந்து கிளம்பிய சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் ஏராளம், ஏராளம்! கருஞ்சட்டைக் காளையர்கள் கணக்கற்றவர்கள்!

அஞ்சா நெஞ்சன் அழகிரி என்ற சொல்லை உச் சரிக்கும் போதே உடலின் ஒவ்வொரு அணுவும் புல்லரிக்கும். அரிமாவின் கர்ச்சனை என்பார்களே, அது அவருக்கே பொருந்தும்.

ரத்தம் கக்கக் கக்க தன்மான எரிமலைக் குழம்பை யொத்த உரையை, மரத்துப் போன தமிழர்களின் உடலில் சூடேற்றும் வண்ணம் பொழிந்தவர் அவர். ஆண்டு அரை நூறு அடைவதற்கு முன்பே இயற்கை அவரைக் கொத்திக்கொண்டு போய்விட்டதே!

இன்னும் எத்தனை எத்தனையோ மாவீரர்கள் உண்டு. இன்று நூறு வயதைத் தொட்டுக்கொள்ளத் துடிக்கும் மாமுண்டி என்று அன்போடு அழைக்கப்படும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நா.இராமாமிர்தம் அவர்கள் வரை எடுத்துச்சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு தொகுப்பாக வளரும்.

இந்த ஊரிலே எத்தனை எத்தனையோ மாநாடுகள்!

அதிலே ஒரு குறிப்பிடத்தக்க மாநாடுதான் 1929ஆம் ஆண்டு மே மாதம் 25, 26 நாள்களிலேயே நடைபெற்ற முதலாவது தமிழர் மாகாண சுயமரியாதைத் தொண்டர் கள் மாநாடாகும். தொண்டர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட முதல் மாநாடு என்ற மகுடத்திற்குரியது அந்த மாநாடு. அந்த மாநாட்டில் பங்கேற்ற பெருமக்கள் யார் யார்? குடிஅரசு (12.5.1929) பட்டியலிடுகிறது-இதோ,

26ஆம் தேதி மகாநாடன்று தஞ்சை திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாடு பட்டுக்கோட்டையிலேயே நடைபெறும். சர்வகட்சி பார்ப்பனரல்லாதாரும் மகா நாட்டுக்கு விஜயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாகாண முழுவதுமுள்ள சங்கங்கள் மற்ற கட்சி நண்பர்கள் தங்களூரிலிருந்து எத்தனைப் பிரதிநிதிகள் விஜயமாகின்றார்கள் என்ற விவரத்தை வரவேற்புக் கழகத்திற்கு அறிவிக்கக் கோருகிறோம்.

மகாநாட்டிற்கு சென்னை அரசாங்க சட்ட மெம்பர் கனம் திவான் பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள் வைக்கம் வீரர் திரு.ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு இரண்டாவது மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் தலைமை வகிப்பார். மகாநாட்டுப் பந்தலில் சட்ட மெம்பர் திவான்பகதூர் எம். கிருஷ்ணன்நாயர், திரு.ஈ.வெ.ராமசாமியார் திரு.பி.டி. ராஜன் முதலிய தலைவர்களுக்கு வரவேற்பளிக்கப்படும். உபசாரப் பத்திரமளிப்புக் கூட்டத்திற்கு தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் ராவ் பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

சுயமரியாதைத் தொண்டர்கள் மாகாண மாநாட்டிற்கு ரிவோல்ட் உதவி ஆசிரியர் திருவாளர் எஸ்.குருசாமி அவர்கள் தலைமை வகிப்பார். காரைக்குடி குமரன் ஆசிரியர் திரு.சொ.முருகப்பர் மாநாட்டைத் திறந்து வைப்பார்.

திருச்சி திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் சுயமரியாதைக் கொடியை உயர்த்துவார்.

உயர்திரு. கைவல்ய சாமியாரின் திருஉருவப்படத்தை திரு.கே.வி.அழகர்சாமி திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு திரு.சாமி சிதம்பரனார் தலைமை வகிப்பார்.

மகாநாட்டிற்குக் கட்டணம் அடியிற்கண்டவாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வரவேற்பு அங்கத்தினர் ரூ.5

பிரதிநிதி ரூ.2

மாகாண சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாட்டு பொக்கிஷதார் திரு.எஸ்.கே.சிதம்பரம் அவர்கள் மகாநாட்டின் நன்கொடை வசூலிக்கவும், வரவேற்புக் கழக அங்கத்தினர்கள் சேர்க்கவும் வெளி ஜில்லாக்களில் சுற்றுப் பிரயாணம் செய்கிறார். 5,6 நாட்கள் வரையில் திருச்சி, நாமக்கல், சேலம் தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய இடங்களுக்குச் செல்வார். அந்தந்த ஊர் சகோதரர்கள் தக்க ஆதரவு காட்ட வேண்டுகிறோம்.

-வரவேற்புக் கழகத்தார்.

மாநாடு முடிந்தவுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது பொதுக்கூட்டத்திற்கு சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

காரைக்குடி குமரன் இதழின் ஆசிரியர் சொ.முரு கப்பா உரையில் கேலியும், கிண்டலும் பீறிட்டுக் கிளம்பின. இந்து மதத்தின் ஆபாசமும், பார்ப்பனர் ஏற்படுத்திய புரட்டும் என்பது தலைப்பானால் முருகப்பா போன்றோர்களின் பேச்சைப் பற்றிக் கேட்கவும் வேண் டுமோ! பேச்சின் கால அளவு இரண்டு மணிநேரம்.

அந்தப் பேச்சு வெறும் கேலி, கிண்டலோடும், சிரிப்பை வரவழைத்ததோடும் நின்று விட்டதா? அதுதான் இல்லை.

அது பற்றி குடிஅரசு (2.6.1929) எழுதுகிறது:

முருகப்பாவின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண் டிருந்தவர்களில் நாமத்தை அழித்தவர்கள் பலரும், ருத்திராட்சத்தைப் பிடுங்கி எறிந்தவர்கள் பலரும், கூட்டத்தில் பிடுங்கி எறிய சங்கோஜப்பட்டு மறைத்துக் கொண்டவர்கள் பலரும், நாமக்காரர்களையும், விபூதிக் காரர்களையும், பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் பலரும், விஷயங்களை எங்கு வினயமாய்க் கவனித்து இதுவரையிலும் தாங்கள் மவுடிகத் தன்மானவும், மூடத் தனமாகவும் நடந்து வந்ததையும் மாற்றிக்கொண் டவர்கள் பலருமாய் இருந்த காட்சி அற்புதக் காட்சியாக இருந்தது,

கலப்பு மணம், விதவை மணம் சம்பந்தமான தீர்மானம் வந்தபோது தலைவர் அத்தீர்மானத்தை நடவடிக்கையில் நடத்தக்கூடியவர்களை எழுந்து நிற்கும்படி கேட்டபோது சுமார் 200 வாலிபர்களும் 2,3 பெண்களும் எழுந்து நின்ற காட்சி, எல்லாக்காட்சிகளையும் விட மேலான காட்சி யாயிருந்தது என்று குடிஅரசு குறிப்பிட்டிருப்பதைப் படிக்கும்பொழுது விம்மிதம் கொள்கிறோம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் குருதியில் குடைந்து ஊறிக்கிடந்த பழக்க வழக்கங்களை அதன் அடிவேர், சல்லிவேர் வரை சென்று ஒரு மாநாடு-ஒரு பொதுக்கூட்டம் பிடுங்கி வெளியில் எறிகிறது என்றால், இந்தச் சாதனைக்கு நிகரானதை எந்த நிகண்டுவில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

அந்த உணர்வு இன்றைக்கும் கூடத் தேவைப்படு கிறது. பார்ப்பனீயம் பல வகைகளில் மாறுவேடம் தரித்து தன் அற்பப் புத்தியை அரங்கேற்றிக் கொண்டுதானிருக் கிறது. அதற்கு அவ்வப்போது சூடு கொடுக்கவும், நம்மக்களுக்குச் சூடு, சொரணையை ஏற்படுத்தவும் கழகத்தின் மாநாடுகளும், பிரச்சாரங்களும் தேவைப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் கழகத்தின் சார்பில் அலை அலையாக மாநாடுகள் நடத்தப்பட்டது வேறு எந்தக் காலகட்டத்திலுமே கிடையாது.


2011ஆம் ஆண்டு தொடக்கமே களை கட்டியது!

உலக நாத்திகர்கள் மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்திக்காட்டி (2011, சனவரி 7,8,9) உலகத்தையே நம்மை நோக்கிப் பார்க்க வைத்தோம்.

இதோ மார்ச் 5ஆம் தேதி பட்டுக்கோட்டையில் மகத் தான பேரணியுடன்கூடிய தஞ்சை மண்டல இளைஞரணி மாநாடு. கழகப் பாரம்பரிய மிக்க பட்டுக்கோட்டைப் பாசறையில் கழக இளைஞர்கள் கூடி எக்காளமிட இருக்கின்றனர்.

தேர்தல் களம் சூடு கிளம்பும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மண்ணை இனமான நெருப்புச் சூளையாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமது கழகத்திற்கு இருக்கிறதே!

ஆரியர்- திராவிடர் போர் என்று அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் கலைஞரே ஆவேசத்துடன் அறிவித்துவிட்ட நிலையில், நமது மாநாட்டுக்குக் கூடுதல் உத்வேகமும் பொறுப்புணர்ச்சியும் தானாகவே வந்து சேர்ந்துவிட்டது.

ஊழலைப்பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது? அவர் களின் பிறப்பே ஊழல் தன்மையானது. (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்றால், அதன் பொருள் இதுதானே?).

அவர்கள் நடப்பே ஊழல் மயமானது! கடவுளிடம் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்து கரையேறப் பார்க்கும் கயமைத்தனமானது.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப் பானுக்கே மோட்ச லோக டிக்கெட் கொடுப்பதற்கு-பசுமாட்டுக்குப் புல் போட்டாலேபோதும் என்கிற அளவுக்குக் கையூட்டுக்குப் பெயர் போனது.

இந்து மதமே ஊழல்மயம்தானே?

மதத்தையும், ஜாதியையும், கடவுளையும், மூடநம்பிக் கைகளையும் விமர்சிக்கும் ஒரே ஒரு முதல்வர் உலகி லேயே நமது மானமிகு கலைஞர்அவர்கள்தாம்!

தமிழர் தலைவர் மிக நேர்த்தியாகச் சொன்னது போல நெருக்கடி கால எரிமலையையே விழுங்கி ஏப்பமிட்டவர் அவர்!

இளைஞர்களைத் தயார் செய்ய வேண்டும். சினிமா மாயை என்னும் தொற்று நோய்க்குப் பலியாகாமல், பகுத்தறிவுத் தடுப்பூசி போடும் கடமை சமுதாய மருத்துவப் பாசறையாம் நம்மைச் சார்ந்தது.

பட்டுக்கோட்டையில் ஒரு திட்டத்தோடு சந்திப்போம். பட்டுக்கோட்டை கொடுக்கும் குரல் தமிழ் மண்ணையே அதிரச் செய்யட்டும்!

அரிமாக்களே, அவசியம் வாருங்கள்! தமிழர் தலைவர் அழைக்கிறார். தன்மான முரசு கொட்டுவோம், தவறாமல் கூடுங்கள்! கூடுங்கள்!!

என்ன தைரியம் இருந்தால் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தெய்வத்தைத் துணை கொண்டு தேர்தலில் குதிப்போம் என்று கூப்பாடு போடுவார்கள்?

அந்த ராமன் தெய்வத்தைத்தான் சேலத்திலேயே பார்த்தோமே! ராமன் கை கொடுத்தானா? - பெரியார் ராமசாமி (ராமனுக்கே சாமி) கை கொடுத்தாரா? என்பது நாட்டுக்குத் தெரியுமே!

கருஞ்சட்டைக் கடலே,
கை வரிசையைக் காட்ட வருக! வருக!!
பட்டுக்கோட்டையாம் பாடி வீடு
அழைக்கிறது! அழைக்கிறது!!
தங்கள் வருகையைத் தருக! தருக!!

மின்சாரம்


http://viduthalai.in/new/home/archive/4487.html

கறுப்புச் சட்டை

20.9.1945 அன்று திரா விடர் கழக 17 ஆவது மாநில மாநாடு திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் தலைமை யில் கூடியது. அம்மாநாட்டில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரலாற்று ரீதியான மிக முக்கிய முடிவு - இயக்கத் தோழர்கள் கறுப்புச் சட்டை அணிவது பற்றியதாகும்.

இயக்கத் தொண்டர் களாயிருப்போர் இயக்கக் காரியங்களைக் கவனிக்கும் போதும், கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், கூடுமானவரையில் முழு நேரமும் கறுஞ்சட்டை அணிந்திருக்கலாம். கழக உறுப்பினர்கள் அனைவருமே சமயம் வாய்க்கும்போதெல் லாம் கறுஞ்சட்டை அணிதல் அவசியமாகும் என்று அறி வித்தார் தந்தை பெரியார்.

கறுப்புச் சட்டைப்படை அமைக்கப்படுவதற்கான தற்காலிகப் பொறுப்பாளர் களாக ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்தப் படையைப் பற்றி குடிஅரசு (17.11.1945) தலை யங்கம் இவ்வாறு கூறுகிறது:
கறுப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக் காவது தொல்லை கொடுக் கவோ அல்லது நாசவேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொரு ளையே பாழாக்கிக் கொள் ளவோ அல்ல என்பதைத் தெளி வாக வலியுறுத்திக் கூறு வோம். மற்றபடி அடிப்படை எதற்காக என்றால், இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்க மும், துக்கமும் அடைந்திருக் கிறார்கள் என்பதைக் காட் டவும், அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக் கிறார்கள் என்பதைக் காட்ட வும், அதற்கான முயற்சி களைச் செய்ய தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்ப தைக் காட்டவுமே ஏற்படுத் தப்பட்டிருப்பதாகும் என்று குடிஅரசு தலையங்கம் பேசு கிறது.

இப்படி ஒரு படை அமைக்கப்பட்டது என்ற வுடன், ஆரியர்களின் வட்டா ரத்தில் கிலி பிடித்துவிட்டது. அதனுடைய தீய விளைவு தான் - மதுரையில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் நடைபெற்ற கறுப்புச் சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் - வைத்திய நாதய்யர் என்ற பார்ப்பனரின் தூண்டுதலால் காலிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகும்.
20 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலத்தில் சென்ற அந்த மிடுக்கான அணிவகுப்பு, ஆரிய ஆதிக் கக் கோட்டையை நொறுங் கச் செய்யக் கூடிய ஒரு படையை ராமசாமி நாயக்கர் உண்டாக்கி விட்டார் - அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று திட்டமிட்டு அந்தக் கேவலத்தை அரங்கேற்றினர்.

அரசையும் கவனிக்கச் செய்தது. அதன் விளைவு தான் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கறுஞ் சட்டைப் படையைத் தடை செய்யப்படுவதாக உத்தர விட்டார்.

அந்த நாள்தான் இந்த மார்ச் 2 (1948). கிரிமினல் சட்டத் திருத்தத்தின் 16 ஆவது பிரிவின்கீழ் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு சட்டத்தினால் இந் தப் படையை அழித்துவிட முடிந்திருக்கிறதா? இன் றைக்கு லட்சோப லட்ச கறுஞ் சட்டைத் தொண்டர்கள் நாட்டில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்களே!

இந்த மார்ச் 2 - நம்மை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும் - பெரியார் பிஞ்சு களுக்குக்கூட கறுப்புடை தைத்துக் கொடுக்கவேண் டும். வீடெல்லாம் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும்.
வாழ்க பெரியார்! - மயிலாடன்

http://viduthalai.in/new/e-paper/4531.html

நீங்கள் மாமனிதர்

கருப்புச்சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மை திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்குச் சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக்காரர்
சமூகநீதிக் காவலர்-அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா
கடலூரின் கருத்துக்கனல் -என்றும்
அடங்கா எழுத்துப் புனல்-
எழுதிய நூல்கள் 75
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி
அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன்முதலாய்
பாவையருக்கு தொழில்நுட்பக் கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்கு சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு
காணத் தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டு சிறப்பு செய்தபோது டாக்டர் கே.ஜி.பக்தவச்சலம் அவர்களால் வாசித்து அளிக்கப்பட்ட புகழாரக் கவிதை இது. 25.2.2011)
http://viduthalai.in/new/home/archive/4300.html

ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக மீண்டும் கலைஞரே வருவார் -கி.வீரமணி

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாள் ஆகிவிட்டது...

திண்டுக்கல்லில் ஈசநத்தத்தில் நடைபெற்ற மணவிழாவை ஒட்டி நான் இங்கு வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி தோழர்கள், நீங்கள் திண்டுக்கல்லில் பேசி நீண்ட நாளாகிறது. ஆகவே நீங்கள் பொதுக் கூட்டத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு வலியுறுத்தினார் கள்.

நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்து உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கின்றேன். அநேகமாக ஒரு முக்கால் மணி நேரம் அல்லது அதிகமாகத் தாண்டினால் ஒரு மணி நேரம் கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால், அந்த நேரத்திற்குள்ளாக பல்வேறு கொள்கை விளக்கங்களை உங்களுக்குச் சொல்லி விட முடியுமா? என்று சொன்னால் நிச்சயம் முடியாது.

ஆரியர்களின் சூழ்ச்சித் திறன்

ஏனென்றால் இந்த நாட்டில் உண்மை விளக்கம் என்று சொல்லுகின்றபொழுது அது ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாள்கள் செய்ய வேண்டிய அளவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய பொய்யுரைகள், புனைந்துரைகள், அவதூறுகள், பழிகள் இவை எல்லாம் இந்த நாட்டிலே திராவிட இனத்தின் மீது ஆரியர்களுடைய சூழ்ச்சித்திறனாலே அவர்கள் கையிலே சிக்கியிருக்கிற ஊடகங்கள் மூலமாகவும், மற்ற பல்வேறு பத்திரிகைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கலைஞரின் தனித்தமிழர் ஆட்சி

ஒரு பலூன் போல அது காட்சியளிக்கிறது. ஊரிலே பலூனைக் கட்டி விளம்பரம் செய்வது போல இன்றைக்குத் திராவிடர் ஆட்சி, கலைஞரு டைய ஆட்சி, தனித்தமிழர் ஆட்சியாக இந்த நாட்டில் அசைக்கமுடியாத அஸ்தி வாரத்தோடு அது அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடியவர்கள், எப்படி எல்லாம் இதைப் பற்றி பொய்யுரை பரப்பி, அதன் மூலமாக நாம் வருகின்ற தேர்தலிலே இழந்த பதவியை எப்படியாவது பிடிக்கலாமா? என்பதற் காக பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக் கிறார்கள். அதற்கு ஏதாவது கருவிகள் கிடைக்காதா? ஏதாவது பிரச்சாரத்திற்கு மூலதனம் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஒன்றிரண்டு கிடைக்க முடியும். அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

சோ இராமசாமி காலம் வரை...

ஆகவே, இராமாயண காலம் தொட்டு - இன்றைக்கு சோ இராமசாமி காலம் வரையிலே மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு செய்தி என்னவென்று சொன்னால், திராவிடர் இனத்தின்மீது ஆரியர்கள் பழிபோட்டு, அவர்களை எப்படியாவது தண்டிக்கக் கூடிய அளவுக்கு ஆக்கி, பிறகு அந்த மக்களே தங்களுடைய தலைவரை இழந்துவிட்டோமே என்ற அறிவுகூட இல்லாமல் காலம், காலமாக இருந்த ஒரு சூழல் - இராமாயண காலத்திலிருந்து - புராண காலத்திலிருந்து - இதிகாச காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலே இருந்து கொண்டிருக்கின்றது. இல்லாவிட்டால் தமிழன் தீபாவளி கொண்டாடுவானா? இல்லாவிட்டால் சூரபத்மனை வதம் செய்கிறோம் என்று சொல்லு வானா?

திராவிடர் இனம்

அசுரன் என்று சொன்னாலே அவர்கள் யார்?

திராவிடர் இனம் இந்தியா முழுவதும் பரவி யிருந்த ஓர் இனம். வரலாற்றுப் பெருமை மிகுந்த ஓர் இனம். இந்த மண்ணுக்குரிய இனம். மொகஞ் சதாரோ, ஹரப்பா என்று சொல்லக்கூடிய புதைந்து போன நகரங்களிலே இருந்து மிகப் பெரிய ஆதாரங்களைக் கொண்ட இனம் இது.

இது நாடோடிக் கூட்டமல்ல. பி.ஜே.பி. ஆட் சிக்கு வந்தபொழுது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அர சியல் வடிவமான அந்த பி.ஜே.பி., அதனுடைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? வரலாற்றைக் காவிமயமாக்கித் தலைகீழாகப் புரட்டிப் போட்டார்கள்.

ஆரியர்கள் எல்லாம் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்தது போலவும், திராவிடர்கள் எல்லாம் இங்கு வந்து குடியேறியதைப் போலவும் அவர்கள் உண்மைக்கு மாறாக சித்திரித்தார்கள்.

காளையை குதிரையாக்கினார்கள்

காளையைப் பிடிப்பது, காளையை அடக்குவது கூட இன்றைக்கு ஜல்லிக்கட்டாக நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்த வட்டாரத்திலே கூட ஜல்லிக்கட்டு நிகழ்வதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் காளை மாட்டைப் பயன்படுத்தி இருக் கின்ற சின்னத்தை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்று சொன்னால் நண்பர்களே!

பின்னாலே சொல்லக்கூடிய செய்திக்காக நான் விளக்கிச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் பா.ஜ.க. ஆட் சியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நேரத்திலே வரலாற்றையே தலைகுப்புற புரட்டிப் போட்டார், உண்மைக்கு மாறாக, காளை மாட்டுக்குப் பதிலாக மொகஞ்சதாரோ ஹரப்பா வின் சின்னம் குதிரை என்று மாற்றினார்கள்.

ஆரியர்கள் வரும்பொழுது குதிரையுடன் வந்தார்கள். எனவே ஆரிய புராணங்களிலே குதிரை பூட்டிய ரதம் இருக்கும்.

காவி ஆட்சியை அகற்றி...

ஆரியர்களுடைய யாகங்கள். அசுவமேத யாகங்கள் எல்லாம் குதிரையை வைத்துத்தான் இருக்கும்.அது புத்திர காமேஷ்டி யாகமாக இருந்தாலும், அசுவமேத யாகமாக இருந்தாலும், அந்த யாகங் களைப் பற்றி விளக்கிச் சொன்னால் தாய்மார்கள் இங்கே அமர்ந்திருக்க முடியாது. அவ்வளவு அநாகரிகம் படைத்த கூட்டம் அந்தக் கூட்டம். ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே அவர்கள் குதிரையைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக வரலாற்றிலே காளை மாட்டுச் சின்னத்தை குதிரையாக மாற்றினார்கள். கொஞ்சம் அசந்து போயிருந்தால் நமது தமிழ்நாடு ஒத்து ழைத்து அன்றைக்கு அந்த காவி ஆட்சியை மத்தி யிலே இருந்து அகற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்று இன்றைக்கு இரண்டாவது முறை யாகவும், தி.மு.க. உள்பட ஆண்டு கொண்டிருக் கிறார்களோ இந்த ஆட்சி வந்திருக்காவிட்டால் இந்நேரம் எல்லோரையுமே குரங்குகளாக ஆக்கி இருப்பார்கள்.

அனுமார் பரம்பரை...!

நம்மாள்களும் அதற்கு எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள். ஓகோ! நாமும் அனுமார் பரம்பரை போல இருக்கிறது என்று நினைப்பார்கள். பல இடங்களில் உயர, உயரமாக அனுமார் சிலைகளை வைத்திருக்கின்றார்கள்.

சின்ன குரங்கை வீட்டிற்குள் விட்டாலே ஆபத்து. ஆனால் பெரிய அனுமாரைக் கொண்டு வந்து நாட்டிற்குள் விட்டுவிட்டான். ஆகவே அது ஒரு பண்பாட்டுப் படை எடுப்பினுடைய சின்னம். அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்காக அவ்வப்பொழுது அந்த பக்தியைக் கொண்டு வந்து விடுவான்.

நம்மாள் புத்தியை இழக்கவேண்டுமானால் இவனுக்கு சரியான மருந்து பக்திதான் என்று அவன் நினைத்து கொடுக்கிறான்.

அதனால்தான் பெரியார் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். புத்தி வந்தால் பக்தி போகும். பக்தி வந்தால் புத்தி போகும் என்று. அய்யா அவர்கள் எப்பொழுமே எளிமையாகச் சொல்வார்.

ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி!

மற்றவர்கள் எல்லாம் பல மணி நேரம் சொல்லக் கூடிய விசயத்தை அய்யா அவர்கள் பட்டென்று, டக்கென்று நெற்றியடி மாதிரி, பொறி தட்டுகிற மாதிரி ரொம்ப அழகாக எடுத்துச் சொல்லுவார்.

திடீரென்று ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை, ஒரு கலாச்சாரப் படை எடுப்பைக் காட்டுவதற்கு, ஆஞ்சனேய ஜனன ஜெயந்தி என்று சொல்லுகின்றான். குரங்கு பிறந்ததை ஜனனம் என்று சொல்லுகின்றான், ஜெயந்தி என்று சொல்லுகின்றான்.

பொறுப்பில்லாமல் சந்தேகத்துடன்...!

இது அறிவு யுகம். பகுத்தறிவு யுகம். அதுவும் 3ஜி தாண்டி, 4ஜி வந்த காலம் இது. இந்த அறிவைப் பயன்படுத்த வேண்டியவன் மூடநம்பிக்கைக்கு இந்த நாட்டை அழைத்துச் செல்கிறான் என்று சொன்னால், ஆரியம் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - கட்சிக்கு அப்பாற்பட்ட தமிழர்களே, இந்த இயக்கம் தேவையா? என்று பொறுப்பில்லாமல் இன்னமும் சந்தேகத்துடன் கேட்கக்கூடிய அப்பாவித் தமிழர்களே, அழைத்துச் செல்வதா?

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் - ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த இருபத் தோராம் நூற்றாண்டில் உங்களை குரங்கை கும்பிட வைத்து விட்டார்களே!

அன்றைக்கே மார்க்ஸ் சொன்னார்

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்திருக்கின்றான். வளர்ச்சி அய்ந்தறிவிலிருந்து ஆறறிவுக்கு முன் னேற்றம்.

இவன் என்ன செய்தான்? அதைத் திருப்பி விட்டான். மனிதன் எல்லாம் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

காரல் மார்க்ஸ் ரொம்ப நாளைக்கு முன்னா லேயே, அவர் எழுதிய மூலதனம் என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.

இந்தியாவைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றார்? இந்தியாவில் இருக்கின்ற மனிதர்கள் குரங்கைக் கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள் என்று காரல் மார்க்ஸ் எழுதியிருக்கின்றார்.

இதுதான் நமது பண்பாடுமிக்க பாரத கலாச்சாரம். காரல் மார்க்ஸ் காலத்தில் இருந்ததை மாற்ற வேண்டும் என்று மார்க்சியம் பேசுகிற தோழர்கள் கூட, இதைப் பற்றி பேசுவதில்லை. குரங்கை கும்பிடுகின்ற கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று மார்க்சிய நண்பர்கள்கூட தங்களுடைய அரசியல் போக்கைக் கடைப்பிடிக்க வந்து விட்டார்கள்.

எனவே, இதைத் திருத்துவதற்கு ஆள் கிடையாது. எனவே இதை கலாச்சார ரீதியால் ஆனது என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

மூளையைத் தாக்கி செயலிழக்க வைக்கும்

இது ஏதோ ஒரு சின்னம். ஒரு குரங்கு பொம் மையை விற்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இது மூளையைத் தாக்குகிற மூளைக் காய்ச்சல். மூளையைத் தாக்கிவிட்டால் மூளை பாதிக்கப் பட்ட மனிதன் பயன்படவே மாட்டான். அது மாதிரி இந்த இனத்தினுடைய கலாச்சாரத்தை அழிக்கக் கூடிய வகையிலே அவர்கள் இது போன்ற காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனால் அசுரன். அசுரன் என்று நம்மையே சொல்ல ஆரம்பித்துவிட்டான். எதிர் கட்சித் தலைவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

அசுர குலத்தை அழிக்க வந்த...!

அசுர குலத்தை அழிக்க வந்தவர் என்று போட்டிருந்தார்கள். ரொம்ப மகிழ்ச்சி. இப்படித் தான் நீங்கள் எழுத வேண்டும். இப்படித்தான் நீங்கள் பிரச்சாரத்தை அடிக்கடி செய்ய வேண்டும்.

இப்பொழுது போராட்டமே அசுர குலத்திற்கும், தேவர் குலத்திற்கும் தான் போராட்டம் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அசுர குலம் என்றால் என்ன? அசுரன், அசுரன் என்றால் பயந்து கொண்டிருந்தான். பெரியார் வந்த பொழுதுதான் இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.

அசுரன் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டாயா? என்று கேட்டால் சுராபானமும் சோமபானமும் குடிப்பவர்கள் ஆரியர்கள். வெளி யிலிருந்து வந்தவன் சதா குடித்துக் கொண்டி ருந்தான். வேதத்தில் பார்த்தால் எனக்கு சுராபானம் கிடைக்காதா? சோம பானம் கிடைக்காதா? என்று இதைத்தான் வேண்டுகோளாக வைத்திருப்பான்.

வேதங்களில் உள்ளது

நல்ல சுராபானத்தைக் கொண்டு வந்து கொடு. இதைத்தான் எழுதியிருப்பான். எதிரிக்கு நோயைக் கொடு. அவனுக்கு மின்னலைக் கொடு. அவனுக்குத் தலைவலியை உண்டாக்கு அவனுக்கு வயிற்று வலியை உண்டாக்கு. யாருக்கு? தஸ்யூக்களுக்கு, கறுப்பர்களுக்கு.

இந்த இனத்தைப் பார்த்து இப்படி சாபம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு நல்ல சோமபானத்தை வழங்குவாயாக! நல்ல சுராபானத்தைத் தருவாயாக, இதுதான் யஜுர் வேதம், இதுதான் அதர்வண வேதம். இதுதான் எல்லா வேதமும்.

ஆனால் நம்மாள்களுக்கு அது என்ன என்றே தெரியாமல் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். அவர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். வேதத் தைப் படிக்கக் கூடாது. அதைக் கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று. அது என்ன வேத வாக்கா? வேதத்தை மாற்றவே முடியாது.

அரசியல் சட்டத் திருத்தம்

அரசியல் ஸ்டேட்டசையே மாற்றலாம். 60 வருடத்தில் நூறு தடவை அரசியல் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றார்கள்.

இவன் வேதவாக்கு! என்று சொல்லி அய்ந்தா யிரம் வருடமாக அப்படியே வைத்திருக்கின்றார் கள். நடைமுறையில் ஏதாவது அறிவுக்கும், வளர்ச் சிக்கும் உகந்த செய்தியா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆகவே அசுரன் என்றால் வேறொன்றுமில்லை. சுராபானத்தைக் குடித்தவன் சுரன். அசுரன் என்றால் குடிக்காதவன் என்று அர்த்தம்.

அசுர குலத்தை அழிக்க...!

அசுர குலத்தை அழிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஒழுக்கமாக இருக்கிறவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்பதுதான் அதற்குப் பொருள்.

அசுரர்கள் என்றால் திராவிடர்கள். சுரா பானத்தை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆரியர்கள். எனவே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது வெறும் அரசியல் போராட்ட மல்ல. மாறாக அசுரர்களுக்கும் அதாவது திராவிட இனத்திற்கும், தேவர்கள் என்று நினைக்கக் கூடிய ஆரியக் கூட்டத்திற்கும்தான் இப்பொழுது நடக் கின்ற போராட்டம். இது இனப் போராட்டமாக நிற்கிறது.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால்...

வெளி உருவத்திலே மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது அதற்கு அரசியல் வர்ணம் தீட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான். ஆகவே இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவது. இந்தக் கட்சிக்கா, அந்த கட்சிக்கா என்பது பிரச்சினையே கிடையாது.

இந்தப் பிரச்சினையா? அந்தப் பிரச்சினையா? என்பது அல்ல. ரொம்பத் தெளிவாக இருக்கக்கூடிய முன் உதாணரம் என்னவென்றால், காலம் காலமாக இருக்கின்ற இந்த மண்ணுக்குரியவர்கள் இந்த நாட்டை ஆளுவதா? அல்லது இந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாத ஒரு ஆரிய தத்துவம் - மனுதர் மத்திற்கு இந்த நாட்டிலே உயிர் ஊட்டவேண்டும் என்று நினைக்கின்றார்களே அந்த மனுதர்மத்திற்கு இடம். கொடுப்பது என்பதுதான் மிக முக்கிய மானது.

ஆகவே, திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக இழிவு ஒழிப்பு, சமுதாயத்திலே அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சமதர்ம நோக்கு, பெண்ணடிமை ஒழிப்பு அனைவரும் சமத்துவத்தோடும், சுதந்திரத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்து - இவை அத்தனையையும் உள்ளடக்கியது. தந்தை பெரியாரின் இந்த இயக்கத்தின் கொள்கைகள்.

ஆரியக் கூட்டத்திற்கு விரோதமானது

பிரெஞ்சுப் புரட்சியின் தத்துவத்தைச் சொல்லும் பொழுதுகூட, சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்று சொல்லுவார்கள். சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் இந்த மூன்றையும் சொல்லு கிறார்கள் பாருங்கள். இந்த மூன்றும் ஆரியத்திற்கு விரோதமானது. ஆரிய தத்துவத்திற்கு, ஆரிய இனத்திற்கு இந்த மூன்றும் விரோதமானது. ஆரியக் கூட்டம் சுதந் திரத்தை விரும்பாது. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளவேண்டும். உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று பார்க்காதே. அறிவைப் பயன்படுத்தினால் அவனை நாத்திகன் என்று சொல்லி முத்திரைக் குத்தி கீழே தள்ளிவிடு. எனவே சொந்தமாக அறிவைப் பயன்படுத்தக் கூடாது.

கேள்வி கேட்டால் - நரகம்!

இது ஆரிய இனத்தின் தத்துவம். திராவிட இனத்தின் தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வள்ளுவரின் குறளைப் பாருங்கள். இதிலே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

அறிவு அற்றம் காக்கும், அறிவுதான் மிக முக்கியம் என்று இப்படி திராவிடர்களுடைய சிந்தனை இருக்கிறது.

அறிவைப் பயன்படுத்தாதே. அறிவைப் பயன் படுத்தி நீ கேள்வி கேட்காதே. கேள்வி கேட்டால் நீ போகவேண்டியது ரௌரவாதி நரகம். ஆகவே அறிவைப் பயன்படுத்தாதே என்று சொல்லுவது ஆரிய தத்துவம்.


ஆரிய தத்துவத்தில்...

எனவே ஆரிய தத்துவத்தில் சுதந்திரம் என்ப தற்கு இடமே இல்லை, சமத்துவம் என்பதற்கு இடம் இல்லை என்று சொல்லக்கூடிய தத்துவம் தான் வர்ணாசிரம தர்மம்.

சகோதரத்துவம் என்பது என்ன? நாம் எல்லோரும் ஓர் நிறை. யாதும் ஊரே யாவரும் கேளிர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், செம்மொழி மாநாட்டுக்குப் பாட்டுமில்லை இது. நீண்ட காலமாக இருந்த திராவிடர்களுடைய வாழ்க்கை முறைப் புத்தாக்கம் கொடுப்பதுதான் திராவிட பாரம்பரியம். தி.மு.க திராவிடப் பாரம் பரியத்தில் வந்த காரணத்தினாலே. பொற்கால ஆட்சி நடத்துகின்ற கலைஞர் இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டு வருகின்றார் (கைதட்டல்).

எனவே நடப்பது வெறும் அரசியல் ரீதியான போராட்டமல்ல. அதைவிட ஆழமாகப் பார்க்க வேண்டியது என்னவென்று சொன்னால் இது லட்சிய ரீதியானது.


இனத்தின் லட்சியம்

இந்த இனத்தினுடைய லட்சியம் என்னவென்று சொன்னால் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எல்லாருக் கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற இந்த வாய்ப் பைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

தி.க-தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி

இது பலவகையில் வளர்ந்து இன்றைக்கு தி.க. தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம், அரசியலுக்குப் போன பிற்பாடு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்தார். அவர் தமது ஆட்சியை எப்படிக் கொண்டு சென்றார்?

இது வெறும் பதவிக்கான வாய்ப்பு என்று அண்ணா அவர்கள் கருதவில்லை. இந்த வரலாறு தனியானது. திராவிடர் இயக்கம் என்றாலே அதன் தனித்தன்மை என்ன என்பது பலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் அரசியல் பார்வையோடு பார்த்தால் நீங்கள் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்ற குற்றத்திற்கு ஆளாவீர்கள்.

நமது கெட்ட வாய்ப்பு

நமது கெட்டவாய்ப்பு அண்ணா அவர்கள் ஓராண்டு-ஒன்றரை ஆண்டு காலம்தான் ஆட்சியில் இருந்தார். ஆனால் அந்த ஓராண்டிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவுக்குப் போய் சிகிச்சை பெற்று திரும்பி வந்த நேரத்திலே கூட அண்ணா அவர்கள் பேசும்பொழுது ஓராண்டு சாதனைகளாக முப்பெரும் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபொழுது மட்டுமல்ல. அது ஆட்சிக்கு வந்த பிற்பாடுகூட அதனுடைய பார்வை-அதனுடைய இலக்கு- அதனுடைய போக்கு எப்படிப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டுமானால், புரிந்து கொள்ளவேண்டுமானால் அவர்களுக்காகப் பாடம் எடுப்பதைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

அண்ணா சொன்னார்

ஒரு மரண சாசனத்தைப் போல அண்ணா அவர்கள் சொன்னார்கள். அந்தச் சாதனைகளை சுட்டிக்காட்டினார்கள். நான் ஆட்சியிலே ஓராண்டு காலம் இருந்தபொழுது செய்த சாதனைகள் ஒன்று என்னுடைய தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினேன்.

இது முதல் செயல். இரண்டாவதாக சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினேன். (கைதட்டல்). அந்த சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றால் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடித்து சுயமரியாதைத் திருமணம் ஆரியர்களுடைய கலாச்சாரப்படி மந்திரம், விவாக சுப முகூர்த்தம் இவைகளுக்கெல்லாம் இடமில்லை. வட மொழிக்கு இடமில்லை. தமிழர்கள் யார் வேண்டுமானாலும் மணவிழாவை நடத்தலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் போதுமானது.

பண்பாட்டுப் படை எடுப்பு!

ஒரு மனதாயினர் தோழி
திருமண மக்கள் நன்கு வாழி
என்ற அடிப்படையிலே இரண்டு மனங்கள் இணைந்தால் திருமணம். அவ்வளவுதான் இரண்டு மாலைகளோடு சரி என்று எளிமையாகத் தந்தை பெரியார் அவர்கள் ஆக்கினார். இந்த ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பு எங்கெல்லாம் நுழைந்ததோ - அங்கெல்லாம் தேடித்தேடி அடித்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த பண்பாட்டுப்படை எடுப்பை முறியடிப்பது தான் சுயமரியாதைத் திருமணம். அது நடந்து பல பத்தாண்டுகள் ஆன நிலையிலே கூட, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே இருந்த இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.

நீதிபதிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அன்று முதல் இன்று வரை என்ன நடக்கிறது? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை திராவிடர் இயக்கக்குடும்பங்கள், சுயமரியாதை இயக்கக் குடும்பங்கள். சட்டப்படி திருமணம் செல்லுபடியானால் என்ன? செல்லுபடி ஆகாவிட்டால் என்ன? உன் சட்டத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அதைக்கொண்டு போய் கண்ணாடிக்குப் பக்கத்தில் போடு, அதே நேரத்திலே எங்களது சுயமரியாதை திருமணம் நடப்பது தொடரும் என்று சொல்லி அதற்குப்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தன.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்!

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று ஆக்கினார்கள்.

மூன்றாவதாக ஆட்சியில் இருமொழிக் கொள்கைதான். உள்ளூரில் நமது பண்பாட்டைக் காப்பதற்குத் தமிழ், உலகத்தோடு தொடர்பு கொள் வதற்கு ஆங்கிலம். இந்த இருமொழி இருந்தாலே போதும். இதற்கு மேல் மூன்றாவது மொழியாக இந்தி தேவையில்லை. கட்டாய இந்திக்கு இடமில்லை என்ற அந்த உணர்வை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள். இந்த மூன்றும் அவர் ஆட்சியில் இருந்தபொழுது செய்த சாதனைகள். இதனுடைய அடித்தளம் என்ன?

ஆரியப் பண்பாட்டை எதிர்த்தவர்கள்

இதைக் கூர்ந்து நீங்கள் கவனிப்பீர்களேயானால்-இந்த மூன்றும் சுயமரியாதை கருத்துகள்-தந்தை பெரியாரின் கொள்கை லட்சியங்கள்-சமுதாய லட்சியங்கள் ஆரிய பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்தவைகள்.

தமிழ்நாடு என்று சொல்லும்பொழுதுதான் அந்த உணர்ச்சி வருகிறது.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
என்று சொல்லக்கூடிய கட்டம் ஏன் வந்தது? தமிழன் ஏற்கெனவே தலைகுனிந்து நின்றான். அதனால்தான் தலையை நிமிர்ந்து நில் என்று சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு வந்தது (கைதட்டல்).

தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயரில்லையே என்று சொன்ன பிற்பாடுதான் அந்த உணர்வு வந்தது.


கலைஞரின் பொற்கால ஆட்சி!

ஆகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த நேரத்திலே கூட ஆட்சிக்காக ஆட்சி அல்ல. லட்சியத்திற்காக ஆட்சி என்பதை எடுத்துக் காட்டி அண்ணா அவர்கள் அதை உருவாக்கி ஒரு நல்ல அடிக்கட்டுமானத்தைப் போட்டார்கள்.

அண்ணா அவர்கள் விட்ட பணிகளை தொடர்ந்து செய்திட நமக்கு ஓர் அற்புதமான தலைவர் கிடைத்தார். அவர்தான் பொற்கால முதல்வராக இருக்கக்கூடிய 87 வயதிலும் இளை ஞரைப் போல் உழைத்துக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அவர் எந்தக் கட்டுமானத்தை உருவாக்கி னார்களோ அந்தக் கட்டுமானத்திற்கு மேலே மாளிகைகளை எழுப்பினார். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பை எங்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு போனார். ஜாதி இழிவுப்படி சூத்திரனுக்குத் திருமணம் செய்ய உரிமை இல்லை.

எங்களுக்கும் உரிமை உண்டு. நாங்கள் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வோம். சுயமரியாதைத் திருமணம் சட்ட படியாக செல்லும் என்பதை அண்ணா உருவாக் கினார். விரட்டிக்கொண்டே போனார்

பெரியார் கேட்டார். நான் ஜாதி என்கிற பாம்பை எல்லா இடங்களிலும் அடித்துவிட்டேன். அதை ஒவ்வொரு இடமாக விரட்டிக்கொண்டு வந்தேன்.

ஓட்டலில் தனி இடம் என்று இருந்தது. நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களுக்குள்ளேயே தனி தண்ணீர் பானை இருந்தது. இது பார்ப்பனர்களுக்கு சூத்திரர்களுக்கு என்று.

இதை எல்லாம் ஒழித்தாகிவிட்டது. ஆனால் நான் அடித்த பாம்பு இருக்கிறதே-ஜாதிப்பாம்பு வர்ணாசிரம தர்மப் பாம்பு அது எங்கே போய் பாதுகாப்பாக ஒளிந்துகொண்டது தெரியுமா? கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது.

கோவில் கருவறைக்குள் ஒளிந்தது

ஏன் கோவில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டது என்றால்-பெரியார் இங்கு வர மாட்டார். கடவுள் சங்கதி என்றவுடன் இவர் அந்தப்பக்கம் போய்விடுவார். ஏனென்றால் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் பாருங்கள் என்று நினைத்தார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் ரொம்ப அழகாகச் சொன்னார். இல்லை, இல்லை நான் கடவுளை கும்பிடுகிறேனா-இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. என் தம்பி கும்பிடுகிறான். என் அண்ணன் கும்பிடுகிறான். என் மாமன் கும்பிடுகிறான். என் மைத்துனன் கும்பிடுகின்றான். அவன் முட்டாளாக இருக்கின்றான்.


பக்திப் பிரச்சினை அல்ல-மனிதனுடைய உரிமைப் பிரச்சினை

அவனுக்குப் பக்தி இருக்கிறது. அவன் கோவிலுக்குப் போனால் அவனை சூத்திரன் என்று சொன்னால் நான் யார்? எங்கள் அம்மா யார்? என்னுடைய தாயையும் அவன் தாசி என்றுதானே சொல்லுகின்றான்? ஆகவே இது இழிவு. இது பக்திப் பிரச்சினை அல்ல. மனிதனுடைய உரிமைப் பிரச்சினை என்று சொல்லி, அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகராக வேண்டும் என்று உண்டாக் கினார்.

உடனே அடுத்த கட்டம். சுயமரியாதைத் திருமணத்தில் எப்படி அண்ணா புரட்சி செய்தாரோ அதற்கு மேல் கட்டுமானத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லி கடைசியாக அந்தப் பாம்பு எங்கே போய் ஓடி ஒளிந்ததோ அங்கே போய் அடித்தார்.

கலைஞர் மீது ஆத்திரம்

இன்றைக்கு அவர்களால் அதைப் பார்த்துத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொல்லிவிட்டான். ரொம்ப காலமாக அவன் காப்பாற்றிக்கொண்டிருந்தான். அதில் கை வைத்ததால்தான் இப்பொழுது அவர்களுக்கு கலைஞர் மீது ஆத்திரம்.

ஏன் சுப்பிரமணியசாமிக்கு, ஏன் சோவுக்கு , ஏன் ஜெயலலிதாவுக்கு? ஏன் பார்ப்பன ஊடகங்களுக்கு ஏன் பார்ப்பனத் தொலைக்காட்சிகளுக்கு ஆத்திரம்? அவர்களுக்கு வேறு ஒன்றும் இல்லை.

அவர் சாதனையைவிட அடிமடியில் கைவைத்துவிட்டாரே-பார்ப்பன ஆதிக்கத்தின் உயிர் நிலை எங்கேயிருக்கிறது என்று சுட்டிக் காட்டினாரே-பெரியார் அடித்த அடி ஜாதி என்கிற பாம்பு கைத்தடியில் வாங்கிய அடியைப் பார்த்தார்கள். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு அய்யா அவர்களைப் புதைக்கிறோமே என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்ட மன்றத்திலே தீர்மானத்தை நிறைவேற்றினார் கலைஞர், ஜாதி ஆதிக்கத்தின் தன்மை தீண்டாமை ஒழிப்பின் தன்மை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

பண்பாட்டுப் படை எடுப்பு !

ஏன் இந்த ஆட்சியை பார்ப்பனர்கள் இன் றைக்கு வெறுக்கிறார்கள்? இந்த ஆட்சி மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்றால் காரணம் இதுதான். இந்தப் பண்பாட்டுப் படை எடுப்பினுடைய ஒரு பகுதியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


ஆரிய-திராவிடப் போராட்டம்

நீங்கள் வெளிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நடப்பது இனப் போராட்டம். ஆரியர்-திராவிடர் போராட்டம் என்பதைத் தெளிவாக உங்களாலே உணர்ந்து கொள்ள முடியும். எப்படி என்று சொல்லும் பொழுது இந்த நந்தன் கதையை உங்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும். நந்தனார் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கதைப்படி நந்தனாருக்கு ஆசை வந்துவிட்டது. அவர் பாவம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு சிறிய கிராமம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அந்தக் காலத்தில் நடந்துபோனால் கூட புளிசோறு கட்டிக்கொண்டு போய்விடலாம்.

நடராஜர் நடனமாடுகிறார் ஆருத்ரா தரிசனம் என்று எல்லோரும் சென்று பார்க்கிறார்களே! அந்த மாதிரி நடராஜனை நாம் போய் பார்க்கமாட்டோமா என்று ரொம்ப பேருக்கு ஆசை.


நந்தனுக்கும் ஆசை

ஏனென்றால் நம்ம ஊர் நந்தன்களுக்கெல்லாம் இப்பொழுது நடராஜனைப் பார்க்க வேண்டும் என்பதுதானே ஆசையாக இருக்கிறது. விடு தலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களை எது இழிவுப்படுத்துகிறது என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதை எல்லோரும் இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை

ஓர் அம்பேத்கர் அப்பொழுது வரவில்லை. ஒரு பெரியார் வரவில்லை. திடீர் என்று நடராஜரைப் பார்ப்பதற்காகப் போகிறேன் என்று நந்தன் சொன்னார். முதலாளி என்னென்னமோ நிபந்தனைகளை வைத்தார். அதைச் சொன்னாலே ரொம்ப நேரம் ஆகிவிடும் உங்களுக்கு அந்தக் கதையை சுருக்கமாகச் சொல்லுகின்றேன்.

கதைப்படி, நிலப்பிரபு அய்யர் சொல்லுகிறார். நீ இவ்வளவு நெற்பயிரை வளர வைத்து விட்டுத்தான் போக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றார். அய்யர் நிலத்தில் இறங்கியதே கிடையாது. அவருக்கும் ஏர்பிடிப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால் நிலப்பிரபு சொல்லிவிட்டார். நந்தனுக்கு வேறு வழியில்லை. உடனே இவர் கடவுளை வேண்டுகிறார்.


கனவில் கடவுள்...!

கடவுள் கனவில் வந்து சொல்லுகின்றார். கதையை எப்படிக் கொண்டு போகிறார்கள் பாருங்கள். நந்தன் இரவு படுத்துத் தூங்கிவிட்டு, பொழுது விடிந்து பார்த்தால் கதிர் ஓர் களம். கட்டு முக்களம்.

இந்த மாதிரி இந்தியாவில் வேண்டிக் கொண்டால் எல்லா மாநிலத்திலேயும் எல்லாம் விளைந்து அது பாட்டுக்குத் தானாகக் கிடைக்கும்.

வெங்காய விலை எப்பொழுதுமே ஒரே மாதிரி இருக்கும். முதலில் எல்லாமே கிடைக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

உடனே நந்தன் நான்தான் எல்லா நிலத்தையும் விளைவித்துவிட்டேனே! நடராசரைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னார். முதலாளியும் சரி போ என்று சொல்லிவிட்டார். நந்தனார் அவசர அவசரமாக மகிழ்ச்சியோடு போகின்றார். ஆஜானபாகுக்கு உதாரணம் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள். சாதாரணமான பார்ப்பனர் அல்லர். நேரில் போய் பார்த்தால்தான் தெரியும்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவன். பல பார்ப்பனர்களைப் பார்த்தவன். மற்ற பார்ப்பனர்களுக்கும், அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். உருவத்திலேயே ரொம்ப வித்தியாசமுண்டு. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவன் ஆள் மோட்டாவாக இருப்பான். (கைதட்டல்). நெய், பருப்பு எல்லாம் சாப்பிட்டு, சமஸ்கிருதத்தில் ஆஜானபாகு என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். இந்த ஆஜான பாகுக்கு என்ன உதாரணம் என்றால் அவாள்தன் உதாரணம்.


சிதம்பரம் தீட்சிதர் குடுமியோ...!

மற்ற பார்ப்பனர்கள் எல்லாம் குடுமியைப் பின்னாலே கட்டுவார்கள். சிதம்பரம் தீட்சிதர்கள் மட்டும் சைடிலே கட்டுவார்கள். ரொம்ப பெரிய குடுமியை சைடிலே போட்டுக் கட்டியிருப்பார்கள் (சிரிப்பு-கைதட்டல்).

நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதே வைத்த பெயர் சைடு பல்பு என்று கூப்பிடுவார்கள்(கைதட்டல்).

பராந்தக சோழன், அந்த சோழன், ராஜேந்திர சோழன், ராஜராஜசோழன், நமது சோழ பரம்பரை எல்லாம் கட்டிக்கொடுத்தது இல்லாமல் தங்க ஓடு போட்டு, உள்ளே எல்லாம் பண்ணி, எல்லாம் செய்து முடித்து வைத்துவிட்டான். சிதம்பரம் தீட்சிதர்கள் சொல்லிவிட்டார்கள். இது எங்களுக்குச் சொந்தமானது யாரும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லுகிறார்கள்.


கோயிலுக்குள்ளே முதலாளி

மற்ற கோயில்களை எல்லாம் அறநிலையப் பாதுகாப்புத்துறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சிதம்பரம் கோவிலுக்கு மட்டும் நீங்கள் கிட்டவே வர முடியாது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது. கொள்வினை-கொடுப்பினை எல்லாமே எங்களுக்குள் பண்ணிக்கொள்வோம். இது பூராவும் எங்களுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு நாங்கள்தான் முதலாளி. கோயிலுக்கே முதலாளி வருகிறார். நிலத்துக்கு முதலாளி அவன்தான் அங்கே. கடவுளுக்கும் முதலாளி இவன்தான்.

நந்தன் சிதம்பரம் கோயிலுக்கு வந்து நடராஜரை வழிபட வேண்டும் என்று கேட்டான். அங்கு இருக்கிற தீட்சிதர்கள் நந்தனிடம் ஜாதிப் பெயரைக் கேட்டு, பறையனாக இருக்கிறவன் எப்படி நீ நடராஜரை தரிசிக்க முடியும்? என்று கேட்டார்கள்.

புராணக்கதைப்படி ....

மன்னிக்க வேண்டும். புராணத்தில் இருப்பதைச் சொல்லுகிறேன். எங்களை மாதிரி ஆனால்தானே நீ கடவுளைப் பார்க்க முடியும்? அந்த உரிமை எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. நீ எப்படி பண்ண முடியும்? என்று கேட்டான்.

நந்தனார் அக்னியில் குதித்தார்

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நந்தன் கேட்டான். ஒன்றும் செய்ய வேண்டாம். நான்சொல்லுவதை செய். நீ உடனே பிராமணர் ஆகிவிடலாம். வேறு ஒன்றும் இல்லை, இதோ நெருப்புக்குழி இருக்கிறது; அக்னி வளர்த்திருப்பார்கள். இந்த அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டால் நீ பிராமணன் ஆகிவிடலாம் என்று சொன்னான்.

அதே மாதிரி நந்தனார் போனார். அக்னியில் குதித்தார். பிறகு வெளியே வந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். தண்ணீரில் குளித்து வந்தாலே நமக்கு அழுக்குப் போகுமா? என்பது சந்தேகம் (கைதட்டல்). நந்தன் அக்னியில் குளித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.


நடராஜருக்கு மனம் இளகுகிறது

நந்தனார் என்ன ஆனார்? நந்தனார் அய்யர் ஆகிவிட்டார்-தீட்சிதர் ஆகிவிட்டார்-சமமாகி விட்டார். வித்தியாசமே இல்லை. அப்படி இருந்தும் நந்தன் சிதம்பரம் கோயிலில் நடராஜரை தரிசிக்க ஆவலாய் உள்ளே போகிறார். உன்னுடைய எல்லை இதுதான். ஆகவே இங்கே நின்று நடராஜரைப் பார் நந்தா என்று தீட்சிதர்கள் சொல்லுகிறார்கள்.

நந்தன் நடராஜனைப் பார்க்கிறார். நந்தி குறுக்கே மறைத்துக்கொண்டிருக்கிறது. நந்தி என்றால் மாடு. அப்பொழுதும் மாட்டைத்தான் நந்தனுக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

நந்தி குறுக்கே நிற்கிறது என்று நந்தன் நடராஜரை வேண்டுகிறார். நடராஜப் பெருமானே, உன்னுடைய பக்தன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன்.

நீ எவ்வளவோ சோதித்திருக்கிறாய். நான் நெருப்பில் குதித்து வந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் நீ என்னை உள்ளே விடவில்லையே என்று சொன்னவுடனே கடவுள் நடராஜருக்கு மனம் இளகுகிறது.

கடவுள் பட்சாதாபப்பட்டு உதவி பண்ணுகிறார். ஒரு சலுகை காட்டுகிறார். கடவுள் சொல்கிறார், அந்த நந்தன் என்னைப் பார்க்கட்டும். நந்தியே, சற்று விலகியிரு! என்று சொல்லுகின்றார்.

நந்தன் அப்பொழுதுதான் நடராஜரை தரிசித்தார்; அதன் பிறகுதான் மோட்சத்திற்குப் போனார் என்று கதை.


நந்தியே சற்று விலகியிரு!

நந்தன் எப்பொழுது நெருப்பில் விழுந்தாரோ அப்பொழுதே மோட்சத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியே கிடையாது. ஆனாலும் நந்தியே சற்று விலகியிரு என்றுதான் கடவுள் நடராஜர் சொன்னார். இது கதை. இது நடந்ததா-இல்லையா என்பதுபற்றிக் கவலை இல்லை.

ஆனால் அன்றிலிருந்து இன்றைய வரையில் சிதம்பரம் கோவில் எங்களுக்கு ரொம்ப காலமாக சொந்தம் என்று சொன்னார்கள். நீதிக்கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து முயற்சி செய்து, மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும் அவரே முயற்சி செய்து இந்தக் கோயிலை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு- அரசாங்கத்தினுடைய துறைக்குக் கொண்டு வரமுடியவில்லை.


வரலாறு படைத்தார் கலைஞர்!

ஆனால், வரலாறு படைத்தார் முதல்வர் கலைஞர் அவர்கள். அவருடைய ஆட்சி காலத்திலே தைரியமாக என்ன செய்தார் என்றால், தீட்சிதர்கள் வசம் இருக்கின்ற கோயிலை எடு என்று அதிகார பூர்வமாக உத்தரவு போட்டார். உடனே தீட்சிதர்கள் நீதிமன்றத்திற்கு ஓடினார்கள். நீதிமன்றம்தானே இப்பொழுது பார்ப்பனர்களுக்கு அபயம் கொடுக்கின்ற இடம்.

நமது உழைப்பினாலே நல்ல நீதிபதிகளும் பல நேரங்களில் இருக்கிறார்கள். தீர்ப்பு வந்தாகி விட்டது. சுப்பிரமணிய சாமிகள் ஆகா! அதைப் பண்ணுவேன், இதைப் பண்ணுவேன் என்றெல்லாம் போனார்கள். ஆனால் அங்கு ஒன்றும் நடக்க வில்லை.

மணி 3, 4 ஆகியது. தீர்ப்புக்காக மாலை நேரத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பு அங்கே சொல்கிறார்கள். தீர்ப்பின் நகல் அவசரமாக வாங்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள்ளாக அது ஃபேக்ஸ் செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட பெண் பொறுப்பேற்றுக்கொண்டார்

அந்த ஃபேக்ஸ் அறநிலையத்துறை முக்கிய அதிகாரிகள் கையில் கிடைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் அதிகாரியை விட்டு நீங்கள் உள்ளே போய்ப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார் (கைதட்டல்).

உடனே தீட்சிதர்கள் எல்லாம் ஆகா, ஊகா என்று சொன்னார்கள். பேசாதே, இது உயர்நீதிமன்ற உத்தரவு என்று சொன்னார்கள். நடராஜர் ஒரு காலைத்தூக்கி ஆடிக் கொண்டேயிருக்கிறார் என்று பார்த்துக் கொண்டே, கேட்டுக்கொண்டே யிருக்க வேண்டியதுதான்.

நடராஜர் ஒரு காலைத் தூக்கினார். கலைஞர் அரசாங்கம் இரண்டு கால்களையும் தூக்கி விட்டது. ஆக, இன்றைய வரையில் முயற்சி பண்ணுகிறார்கள். சிதம்பரம் கோயிலைக் கைப்பற்ற வேண்டுமென்று. இவ்வளவு நாள்கள் உண்டியல் பணம் பூராவும், அவர்களைச் சேர்ந்தது.

இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் அரசாங்க அதிகாரிகள் கையில் வந்துவிட்டது. பதின்மூன்றாயிரத்து நான்காயிரம் வரவு; செலவு இவ்வளவு; ரூ.23 மிச்சம் என்று கணக்கு எழுதி வைத்தான்.

நடராஜர் கோயில் உண்டியல் வருமானம்

ஆனால், இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் வருமானம் மாதம் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் வருகிறது என்று அதிகாரிகள் மூலம் அவர் எடுத்துக்காட்டினார்.

எனவே, நந்தனை உள்ளே அழைக்க முடிய வில்லை, அந்தக் காலத்து கடவுள் நடராஜரால். ஆனால் இன்றைக்கு திராவிடர் இயக்க முதல்வர் கலைஞரால் நந்தனை கோயிலுக்கு உள்ளே அனுமதித்தார் (கைதட்டல்). இன்றைக்கு எல்லா நந்தர்களையும் உள்ளே விட்டுவிட்டார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர். ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். பார்ப்பனர்களும் படித்திருந்தால் அர்ச்சகராகலாம். யாரையும் நாங்கள் வித்தியாசப்படுத்தவில்லை என்று ஆக்கினார்.

சிதம்பரம் கோயில் யாருடையது? இன்று மக்கள் சொத்து என்று ஆக்கிவிட்டார் கலைஞர். இது தனியாருடைய உடைமை அல்ல என்று ஆக்கினார் பாருங்கள், இதுதானய்யா அவர் களுக்குக் கோபம். 60 வருடங்கள் தமிழ் வருடங்கள் என்று சொன்னான். விபவ, பிரபவ, சுக்கில, விரோதி, குரோதி என்று 60 வருடங்கள் சொல்லுகிறார்கள்.

எப்படிப் பிறந்தார்கள் என்று கேட்டான். நாரதருக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தார்கள். என்று சொன்னான். இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள் ஆயிற்றே என்று இவன் சொன்னான். பெரியார்தான் இது ஆபாசமான கதை என்று சொன்னார்.

தை முதல்நாளே தமிழர்திருநாள், அதுதான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்ற உத்தரவே கலைஞர் போட்டுவிட்டார்.

அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். அந்த அடித்தளத்தின்மீது கலைஞர் அவர்கள் உருவாக்கிய கட்டடம் இருக்கிறதே இதுதான். இதைப் பார்த்தவுடனே அவனால் தாங்க முடியவில்லை.


கலைஞர் ஆட்சியில் பசி-பிணி இல்லை

அய்யோ, இந்த ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் அல்லவா இப்படி நடக்கிறது? ஆகவே இந்த ஆட்சியை எப்படியாவது வரவிடாமல் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த ஆட்சி யினாலே பயன் பெறுகிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் பசியும் இல்லை; பிணியும் இல்லை. சென்ற ஆட்சியில் பசி இருந்தது. சென்ற ஆட்சி தமிழ்நாட்டில் எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொன்ன ஆட்சி. ஆனால் இன்றைக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

இந்தியாவிலேயே கலைஞர் ஆட்சிதான்...

முதலில் 1 கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். கடைசி வரையில் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்கள்.

இப்பொழுது ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்குக் கொடுத்து இந்தியாவிலேயே ஆட்சி நடத்துகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; ஒரே ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்; ஒரே முதல்வர் கலைஞர்தான்!

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேசன் கடையில் நேரடியாகவே கொடுக்கப்படுகிறது. மக்கள் நேரடியாகவே பார்க்கிறார்கள். அதுபோல எங்கேயாவது பிணியா? யாராவது மயக்கம் போட்டு விழுந்தாலே மக்களுக்குத் தெரிந்துபோய் விட்டது. காய்கறி விற்கிற முனியம்மாவுக்கும் தெரிகிறது. கடையில் வேலை பார்க்கிற சாதாரண முத்தம்மாவுக்கும் தெரிகிறது.

108-க்கு ஃபோன் பண்ணுகிறான்

சாதாரண வேலை செய்கிறார் பாருங்கள் நம்மாள்-அவருக்கும் தெரிகிறது. ஒருவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும்பொழுதே இன்னொருத்தர் பையிலே இருக்கின்ற தொலைபேசியைப் பயன்படுத்தி உடனே 108-க்குப் ஃபோன் பண்ணு கின்றார். இதற்கு முன்னால் இந்த 108 என்பதை அர்ச்சனைக்குத்தானய்யா பயன்படுத்தினான் (கைதட்டல்).

இன்றைக்கு அந்த 108அய் மனிதன் உயிர் காக்க கொண்டு வந்த பெருமை முதல்வர் கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது (கைதட்டல்). திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைச் சார்ந்தது. தூங்கும்பொழுது 108 என்று சொன்னால் கூட ஆம்புலன்ஸ்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இதற்கு முன்னால் காலம் காலமாக 108 விளக்கு என்று சொல்லுவான்; 108 அபிஷேகம் என்று சொல்லுவான்.


அசுர குலத் தலைவர் ஆட்சியில்...

ஒன்றும் உருப்படாத மக்கள் அறிவை பாழ்படுத்தி, பார்ப்பானுக்கு வருமானத்தை உண்டாக்கக்கூடிய வழியைத்தான் பண்ணி னார்கள்.

அந்த 108அய் பகுத்தறிவுவாதி ஆட்சியான, அசுர குலத் தலைவனுடைய ஆட்சியான (பலத்த கைதட்டல்) கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும் வகையில் 108அய் இப்படி ஆக்கிவிட்டார். அது மட்டுமல்ல; சில பேர் மக்களிடம் பேசினார்கள்.

ஓட்டைக் குடிசையிலே ஒண்ணாரைச் சாண் பாய்தனிலே!

ஓட்டைக் குடிசையிலே, ஒண்ணரைச் சாண் பாய்தனிலே என்று பாட்டுப்பாடி, உங்களுடைய ஏழ்மையைப் போக்குவதற்காக எங்களை அனுப் புங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பில்லாமல் அந்தத் துருப்புச் சீட்டையும் எடுத்துவிட்டார் கலைஞர்.

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

காரணம் என்ன? தமிழ்நாட்டில் எத்தனை குடிசைகள் இருக்கின்றன? கணக்கெடு என்று சொன்னார். 21 லட்சம் குடிசைகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். அந்த 21 லட்சம் குடிசைகளுக்கும் முதலில் திட்டம் போட்டார்.

இந்த ஓராண்டுக்குள்ளாகவே கலைஞர் வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்து உடனே அதைச் செயல்படுத்தினார்.

இனிமேல் குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்று இந்தியாவிலே முதன்முறையாக உருவாக்கிய வர் (கைதட்டல்). அந்தக் காலத்திலேயே குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கியவர் கலைஞர். இன்றைக்கு இதையும் உண்டாக்கி விட்டார்.

எல்லோருக்கும் கான்கிரீட் வீடு கிடைக்குமா என்று கேட்டார்கள். அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இந்தாங்க பிடிங்க இது உத்தரவாத சீட்டு என்று அவரவர்களும் வாங்கிக் கொள்ளும்படி செய்தார்.


எங்களை வரவேற்றதே இந்தத் திட்டம்தான்!

எல்லா கிராமங்களிலும் இப்படி உருவாக்கியி ருக்கிறார். இன்றைக்கு காலையிலே நான் ஈசநத்தம் போனேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளே நுழையும்பொழுது எது நம்மை வரவேற்கிறது என்றால்- கலைஞர் வீட்டு வசதித்திட்டம்.

நான் சென்னையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கூட சொன்னேன். வேடிக்கையாக நம்முடைய நாட்டில் கிராமத்தில் சொல்லிக்கொண்டிருப்பார் கள். கொடுக்கிற தெய்வமாக இருந்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்லுவார்கள். தெய்வத்திற்குக்கூட ஏண்டா கூரையிருக்கிறது என்று புத்தி வரவில்லை. ஒருவன் ஏன் மாடியில் இருக்க வேண்டும்? இன்னொருவன் ஏன் குடிசையில் இருக்க வேண்டுமென்று கடவுள் எண்ணவில்லை.

எல்லோருமே நமது பிள்ளைகள்தானே! எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கான்கிரீட் வீட்டை கடவுள் கொடுக்கவில்லையே!


மோட்சத்திற்குப் போக

ஒருவரை ஓட்டைக் குடிசையில் வைத்தான். இன்னொருவனை ஒன்பது மாடிக்கு மேலே ஏற்றி வைத்தான். இதைக்கேட்டால் எல்லாம் அவாள் அவாள் தலையெழுத்து என்று சொல்லிக்கொண்டு போனான். இவனும் அதை நம்பிக்கொண்டே இருந்தான். இதை மாற்றுவதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டான். இதை மாற்று வதற்கு மோட்சத்திற்குப் போனால் போதும்; எங்களுக்கு தட்சணை கொடுத்தால் போதும் என்று, சொன்னதை நம்பிக்கொண்டிருந்தான்.

அதைத் தலைகீழாக மாற்றி, குடிசைகளே இல்லா மாநிலமாக ஆக்கியவர் கலைஞர். அவர் ஈரோட்டுக் குருகுலத்திலே பயின்ற காரணத்தினாலே இன்றைக்கு குடிசை இல்லா தமிழ்நாடு என்று ஆகக்கூடிய அளவிற்கு கான்கிரீட் வீடு திட்டத்தைக் கொடுத்து விட்டார்.
அதனால் தெய்வமே என்று இருந்தால் கற்பனைக்காக நான் ஒன்றைச் சொல்லுகின்றேன். கடவுள் என்ற ஒன்றை நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை.

கடவுள்கூட கொடுக்க முடியாது!

கடவுள்கூட இனிமேல் கூரையைப் பிய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் பிய்க்க முடியாத அளவுக்கு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொடுத்துவிட்டார் கலைஞர்.
இப்படி எல்லா துறைகளிலும் பாருங்கள். பசியில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்க படிப்பு இவ்வளவும் கொடுத்தி ருக்கிறார் கலைஞர்.

எங்கு பார்த்தாலும் தொலைபேசி

இவ்வளவும் கொடுத்த கலைஞர் ஆட்சி மீது குறை சொல்ல என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். எங்கு பார்த்தாலும் இப்பொழுது தொலைபேசி இருக்கிறது பாருங்கள். தி.மு.க.வைச் சார்ந்த ஆ.இராசா மத்திய அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.
வாஜ்பேயி ஆட்சி காலத்திலிருந்தே தொலைத் தொடர்புத் துறையை நவீன முறையில் பயன்படுத்த வேண்டுமென்பது திட்டம். இதை அய்ந்தாண்டுத் திட்டமாக கொண்டு வந்தார்கள்.

இராசா செய்த மகத்தான புரட்சி!

அவர்கள் உருவாக்கிய கொள்கையாக இருந்தாலும், அதை பெரிய அளவுக்கு விரிவாக்கிய காலகட்டம் யாருடையது என்றால், அமைச்சர் இராசா அவர்கள் செய்த மகத்தான புரட்சியினாலே ஏற்பட்ட மிகப்பெரிய விளைவுகள்.

அதனால்தான் இன்றைக்குப் பார்த்தீர்களே யானால் எல்லோர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறது. ஒன்று-இரண்டு அல்ல; இரண்டு மூன்று செல்ஃபோன் வைத்திருக்கிறவர்கள் கூட நம்பரை மாற்றாமலே பண்ணலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலைமை வந்தாகிவிட்டது. இன்றைக்கு இருபது காசு, 30 காசுக்கு பேசும் நிலைமை வந்துவிட்டது. குற்றம் சொல்லக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் சொல்லட்டும்.

எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சொல்லட்டும். இன்றைக்கு உலகத்திலேயே இங்கே கிடைக்கிற அளவுக்கு டெலிஃபோன் கட்டணம் இவ்வளவு மலிவாக, இவ்வளவு குறைவாக எந்த நாட்டிலாவது உண்டா? தயவு செய்து சொல்லட்டும்.

இன்று 79 கோடி தொலைப்பேசிகள்

அது மட்டுமல்ல; இராசா பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் 30 கோடி டெலிஃபோன்கள் இருந்தன என்றால் அவர் பதவியைவிட்டுப் போகிற பொழுது 79 கோடி டெலிஃபோன்கள் இந்த நாட்டிலே இருந்தன. கூநடந னுநளேவைல என்று சொல்லக்கூடிய அளவுக்கு முத்தன், முனியன், குப்பன், சுப்பன் என்று இன்று எல்லோர் கையிலேயும், டெலிஃபோன் இருக்கிறது. எல்லோரும் பேசுகிறார்கள்.


கார் டிரைவர் கையில் செல்ஃபோன்

சாதாரண வேலைக்காரம்மாகூட முதலாளி அம்மாவிடம் சொல்லுகிறது. நான் கொஞ்சம் இன்றைக்கு லேட்டா வருகிறேன் அம்மா என்று செல்ஃபோனில் சொல்லுகிறது. டிரைவரிடம் செல்ஃபோன் கொடுத்துவிட்டார்கள். நீ எங்கேயப்பா இருக்கிறாய் என்று சொல்லுகின்றார். இப்பொழுது டிரைவர் கையில் ஒரு செல்ஃபோன், முதலாளி கையில் ஒரு செல்ஃபோன். உடனே கார் முதலாளி கூப்பிடு கின்றார்.

ஆக, இப்படி எல்லா இடங்களுக்கும் வசதி வந்தாகிவிட்டது. திடீரென்று ஒரு பூதாகாரமாக ஆக்கினார்கள். 1,76,000 கோடி 2 ஜி அலைக்கற்றை மூலமாக இந்த அரசாங்கத்தில் ஊழல், ஊழலோ ஊழல் என்று ஆரம்பித்தார்கள்.

என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இதில் மனதுக்குத் தகுந்தமாதிரி ஒவ்வொருத்தன் சொல்லுகின்றான். தயவு செய்து இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மணிநேரம் விளக்க வேண்டிய செய்தி இது. உறைய வைக்கும் தகவல்கள் 2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் என்ற தலைப்பில் ஏராளமான தகவல்களைக் கொண்ட புத்தகத்தை நாங்கள் இங்கே விற்பனைக்காக கொண்டு வந்திருக்கின்றோம்.

நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். எங்க ளுடைய தோழர்கள் கொண்டு வருவார்கள். மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நாங்கள் இதைத் தெளிவாகப் படித்துவிட்டுச் சொல்லு கின்றோம்.

ஊழல், ஊழல் என்று சொல்லி அந்தப் புகை மூட்டத்திலேயே திமு.க ஆட்சியை அசைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அசைப்பதற்கு அதில் ஒன்றுமில்லை. முடியாது. தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடல்நிலை சரியில்லை

எதிர்க்கட்சித் தலைவருக்கு உடம்புக்கு முடியவில்லை. அதனால் சட்டமன்றத்திற்கு வர முடியவில்லை என்று அவர் அனுமதி வாங்கிய பிறகுதான் தீர்மானம் செய்தவர்களுக்கே புரிந்தது.

ஏனென்றால் அதைக்காட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா வாங்கலாம். சட்டமன்றத்திலேயே இப்படி தீர்மானம் நிறைவேற்றி அனுமதி கொடுத்து விட்டார்கள். ஆகவே எனக்கு வாய்தா கொடுங்கள் என்று கேட்கத் தயங்காதவர் அந்த அம்மையார். இருக்கட்டும். ஆனால், அவர்களுடைய தொலைக் காட்சியில் சொல்லும்பொழுது ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி என்று சொல்லு வதில்லை.

ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி என்று ரவுண்டாக சொல்லுகிறார்கள். அதில் ஏன் சொச்சம் வைப்பானேன் என்று அவர்கள் இப்படி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.


ஜெயலலிதா தொலைக்காட்சியில்...

ஜெயலலிதா தொலைக்காட்சியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று சொல்லு வார்கள். இன்னொருவர் சு.சாமி என்று இருக்கிறார். அவர் அவ்வளவு, இருக்காது என்று சொல்லுவார். இன்னொருவர் குருமூர்த்தி அய்யர் என்பவர் இண்டியன் எக்ஸ்பிரசில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், அவர் சொல்லுகிறார் 24 ஆயிரம் கோடிக்கு மேல் சொல்லக்கூடாதுங்க என்று சொல்லுகின்றார்.

பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரிக்கு சி.பி.அய் சம்மன் அனுப்பியிருக்கிறது. அவர் சென்னைக்கு வந்து ஒரு பேட்டியில் சொன்னார். 24 ஆயிரம் கோடி 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொல்லக்கூடாது. அதற்குள்ளேதான் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று சொல்லாதீர்கள் என்று அவர் சொன்னார்.

சி.பி.அய்யினுடைய எஃப்.அய்.ஆரில் போடப் பட்டது என்ன? 12 ஆயிரம் கோடி என்று போடப்பட்டது. இவற்றை எல்லாம்காட்டி ஏதாவது குறை சொல்லப் பார்க்கிறார்கள். தி.மு.க ஆட்சி ஒழிக்க முடியாத ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சியை ஊழலோ ஊழல் என்று சொல்லிப் பார்க்கிறார்கள்.


இவர்கள் என்ன பரிசுத்தமானவர்களா?

இவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல என்பது வேறு செய்தி. இதோ என்னுடைய கையில் இருப்பது சி.ஏ.ஜி ரிப்போர்ட். இது கணக்குத் தணிக்கையாளர் ரிப்போர்ட்.

எங்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன தொல்லை என்றால், நாங்கள் எதையும் ஒழுங் காகப் படித்துத் தொலைக்கிறவர்கள். அதுதான் சங்கடமே (கைதட்டல்).

நாங்கள் பெரியாரிடம் இருந்ததாலே எதையும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். படித்துச் சொல்ல வேண்டும். புரிந்து சொல்ல வேண்டும், தெளிவாகச் சொல்ல வேண்டும்; நியாயமாக இருப்பதைச் சொல்ல வேண்டும்.

நிறையப் புத்தகங்கள் இங்கே விற்கப்படு கின்றன. அவற்றை வாங்கிப் பாருங்கள். எல்லா செய்திகளையும் குறுகிய நேரத்தில் சொல்லிவிட முடியாது. சுருக்கமாக செய்தியைச் சொல்லு கின்றேன்.


முதல் குற்றவாளியே ஜெயலலிதாதான்!

ஆகா, இராசவைக் கைது செய்து விட் டார்களே, இன்றைக்கு அவர் திகார் சிறைச் சாலைக்குப் போய் விட்டாரே என்று சொல்லு கிறார்கள்.

பொது வாழ்க்கையில் இருக்கிறவர்கள் சிறைக்குப் போவதாலேயே குற்றவாளி என்று சொன்னால் முதல் குற்றவாளியாக இருக்க வேண்டியவர் எதிர்க்கட்சித் தலைவர்தான் (கைதட்டல்). அந்த அம்மையார் மீது சொத்து குவிப்பு வழக்கு என்று எத்தனையோ வழக்கு- சி.பி.அய் வழக்கு இருக்கிறது.

அன்றைக்கும் நாங்கள் இதைத்தான் சொன்னோம். இன்றைக்கும் நாங்கள் இதைத்தான் சொல்லு கின்றோம். எங்களுக்கு எங்கள் நிலையில் ஒன்றும் மாறுதல் இல்லை. குற்றவாளி என்று தீர்ப்பு வரவேண்டும். அதுவும் இறுதியாக வழங்கக்கூடிய தீர்ப்பு. அதிலேகூட பல நேரங்களில் தவறுகள் நடப்பது உண்டு.

ஆ.இராசா சொல்கிறார்...!

இன்றைக்கு ஆ.இராசா அவர்கள் எவ்வளவு தெம்போடு, துணிவோடு-ஒன்றும் பயப்பட வில்லை. மற்றவர்கள் மாதிரி இல்லை. திகார் ஜெயிலுக்குப் போகிறார் என்றால் என்ன அர்த்தம்?

ஆ. இராசா சொல்லுகிறார், என்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபித்துக் காட்டி வெளியே வருவேன் என்று. இப்படி துணிச்சலாக பத்திரிகையாளரிடம் சொல்லிவிட்டுத்தான் அவர் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆ.இராசா இருக்கின்ற திக்கு நோக்கி உண்மையான திராவிடர் இயக்கத் தோழர்கள் வாழ்த்துகிறார்கள், வரவேற்கிறார்கள். ஏனென்றால் அவர் தவறு செய்யவில்லை.


பிரதமர் சொல்லியிருக்கின்றார்

தவறு பண்ணவில்லை என்று நான் சொல்ல வில்லை. பிரதமர் சொல்லியிருக்கின்றார். பிரத மருடைய அந்தப் பேட்டியில் ரொம்பத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றார்.

தி.மு.க மீது அபவாதம், தி.மு.க மீது பழி இவற்றைதான் சொல்லுகிறார்கள். முதலில் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தணிக்கையாளர் அறிக்கை

தணிக்கையாளர் அறிக்கையில் முன்னுரையில் சொல்லுகிறார். இங்கே மேடையிலே வழக்குரை ஞர்கள் இருக்கிறார்கள். எதிரிலேயும் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

என்னுடைய உரையையும் கேட்டுக்கொண்டி ருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லுகின்றேன்- அரசியல் சட்ட விதிப்படி, 151ஆம் பிரிவின்படி. இவர் இந்தத் தணிக்கை அறிக்கையைத் யாருக்காக தயாரிக்கிறார்? குடியரசுத் தலைவருக்காகத் தயாரிக் கிறார். குடியரசுத் தலைவரிடம் இந்த அறிக்கையை ஒப்படைக்கின்றார்-கையெழுத்துப் போட்டு.


எப்படி வெளியானது?

குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது எப்படி வெளியே வந்தது? நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னாலே எப்படி வெளியே வந்தது என்பதை இதுவரை மத்திய அரசோ, சி.பி.அய்யோ ஏன் கண்டு பிடிக்கவில்லை? ஏன் அந்த முயற்சியிலே ஈடுபாடு காட்டவில்லை? அது இன்றைக்கும் நிற்கக் கூடிய கேள்வி, பதில் கிடைக்காத கேள்வி. அதுதான் ஏன் என்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க வேண்டுமா- இல்லையா?

எம்.ஜி.ஆர் காலத்தில் வழக்குப் போட்டாரே!

பால் கமிசன் அறிக்கையை வெளியே விட்டார் என்று எம்.ஜி.ஆர் காலத்தில் வழக்கு போட்டார்களா- இல்லையா? ஏற்கெனவே முன்னுதாரணம் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது சி.ஏ.ஜி ஆடிட் ரிப்போர்ட். 2 ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பற்றி இதில் ஊழல் என்றால் 2004இலிருந்து சொல்ல வேண்டுமா, இல்லையா? 2003,2004 ஆம் ஆண்டைப்பற்றிச் சொல்லவே இல்லையே! இராசா எந்தக் காலத்தில் இருந்தாரோ அதைப் பற்றி மட்டும் சொல்லுகிறார் என்று சொன்னால், இது உள்நோக்கத்தோடு செய்யப் பட்டதா, இல்லையா? தயவு செய்து நடுநிலையா ளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்க்க வேண்டும். அதற்கடுத்து பல செய்திகள் இருக்கின்றன. கடைசியாக இந்த அறிக்கையை முடிக்கும்பொழுது 1,76,000 கோடி நட்டம் என்று உறுதியாகச் சொல்லியிருக்கின்றாரா? தயவு செய்து ஆளுக்கு ஆள் சொல்ல வேண்டிய அவசியமென்ன?


நட்டம் ஏற்பட்டிருக்கலாம்!

பக்கம் 59இல் சொல்லுகிறார். 2ஜி அலைக் கற்றையில் நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த வாக்கியம்-என்றாலும், எவ்வளவு நட்டம் வந்தது என்பதை நாம் பேசி முடிவு பண்ணிக்கொள்ளலாம். இன்றைக்குப் பத்திரிகை யாளர்களும், மற்றவர்களும் என்ன சொல்லு கிறார்கள். மத்திய அமைச்சர் கபில்சிபல் சொன்னார்-ஒன்றும் இதில் நட்டமே கிடையாது. ஏனென்று கேட்டால் இது கற்பனையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏலம் விட்டிருந்தால்...

ஏலம் விட்டிருந்தால்... ஆனால் ஏலம் விடவில்லை. ஏன் ஏலம் விடவில்லை? காரணம் இருக்கிறது. அதற்கு உள்நோக்கம் எதையும் சொல்ல முடியாது. ஏலம் விட்டிருந்தால் முதலாளிகள் அதிகம் எடுத்திருப்பான்.

பல பேருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்க முடியாது. இப்படி போட்டி வந்திருக்க முடியாது. இதற்கு முன்பு செல்ஃபோன் கட்டணம் ஒரு ரூபாய் என்று இருந்தது. ஆ.இராசா காலத்திற்குப் பிறகுதான் 20 காசு, 30 காசு என்று வந்தது.

கொள்கை முடிவை எடுத்தது யார்?

அது மட்டுமல்ல; இந்தக் கொள்கை முடிவை யார் எடுத்தது? அமைச்சர் ஆ.இராசா எடுத்ததல்ல. இன்னும் கேட்டால் யு.பி.ஏ என்று சொல்லக்கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த முடிவல்ல. 2003ஆம் ஆண்டிலிருந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்பொழுது வாஜ்பேயி பிரதமர். அப்பொழுது தகவல் துறையிலே பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

பிரமோத் மகாஜனுக்கு அடுத்து அருண்ஷோரி அமைச்சராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் அமைச்சராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு இராசா அமைச்சராக வருகிறார்.

பி.ஜே.பி. ஆட்சியில் எடுத்த முடிவு!

ஆகவே, பி.ஜே.பி ஆட்சியில் 2003இல் என்ன முடிவு எடுத்தார்களோ அதுதான் தொடருகிறது. அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு ஒன்றுமே புரியாது என்று நினைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள்.

ஆகா! 1,76,000 கோடி ஏதோ மூட்டை கட்டி தூக்கிக்கொண்டு போன மாதிரி சொல்லுகிறார்கள். ஆகா ஒவ்வொரு ரூபாயாக நோட்டை அடுக்கினால் அது எவ்வளவு தூரம் வரும் என்று சொல்லுவது இருக்கிறது பாருங்கள். அது நடைமுறைக்குப் பயன்படுமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

விவாதம் பண்ணி முடிவெடுப்பதா?

ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஒரு கட்டம் கட்டி சொல்லுகிறார் என்றால், அதை நாம் விவாதம் பண்ணி முடிவுபண்ணிக் கொள்ளலாம் என்று வந்தால் இரண்டும், இரண்டும் நான்கு என்றால் நான்குதான்.

இரண்டும், இரண்டும் எட்டு என்று ஒருவர் சொல்லுகிறார். என்னங்க ஒருத்தர் நான்கு என்று சொல்லுகின்றார். இன்னொருத்தர் எட்டு என்று சொல்லுகின்றாரே என்று கேட்டால், விவாதம் பண்ணி எந்த விடை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

அது மாதிரியான, அவ்வளவு மோசடியான சூழல். இதை வைத்துக்கொண்டு ஒரு பழியைச் சுமத்துவதற்கு வாய்ப்பாக இன்றைக்கு அதைப் பயன்படுத்துகின்றார்கள்.


1 ஜி என்றால்...

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லுகின்றேன். நான், நமது சுப.வீ., மற்ற நண்பர்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தோம். அதில் அவர் சொன்னார்.

1 ஜி என்பது முதல் தலைமுறை- First Generation;

2 ஜி என்பது இரண்டாவது தலைமுறை- Second Generation.

3 ஜி மூன்றாவது தலைமுறை,

4 ஜி நான்காவது தலைமுறை. எதை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள் என்று சொன்னால், அலைக்கற்றை வேகம், அதன் தன்மையை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். டெலிஃபோன் துறையில் இருக்கக் கூடிய பொறியாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.

1 ஜி என்றால் என்ன விளக்கம்? போலீஸ்காரர்கள் கையில் வாக்கி டாக்கி வைத்திருக்கிறார்கள். மேல் அதிகாரி கேட்பார்- வீரமணி மேடைக்கு வந்து விட்டாரா? இங்கே வாக்கி டாக்கி வைத்திருப்பவர் நான் வந்துவிட்டதைப் பார்த்துவிட்டு இவர் ஓவர் என்று சொல்லுவார். இவர் ஓவர் என்று சொல்லி முடித்த பிற்பாடுதான் அவர் பேச முடியும். அவர் சொல்லி முடித்த பிற்பாடுதான் இவர் பேச முடியும். இதுதான் 1 ஜி இது முதற்கட்டம்.

இரண்டாவது தலைமுறை-2 ஜி

இரண்டு பேரும் இதில் டைரக்டாகப் பேச முடியாது. இந்த இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது. அதுதான் 2 ஜி-அதுதான் இந்த செல்ஃபோன் வேறொன்றுமே இல்லை. நாம் ஹலோ என்று சொன்னவுடனே அடுத்த முனையில் இருக்கிறவரும் ஹலோ என்று சொல்லுகின்றார்.

2ஜி யில் இரண்டு பேரும் டைரக்டாகப் பேசலாம். இதனுடைய வேகத் தன்மைவேறு. இதைவிட சக்தி வேண்டும். இதைவிட வேகம் வேண்டும். ஏனென்றால் வியாபாரம் வளருகிறது. ஒவ்வொரு நிமிடமும் ரொம்ப மிக முக்கியம். அறிவியல் வளர்ந்திருக்கிறது. இப்பொழுது அணுவையே துளைக்கிறான்- ஹவடிஅ என்பதை உடைத்துதான். இது நானோ டெக்னாலஜி. இப்படி உடைத்து, உடைத்து தொழில் நுட்பம் வளருகிறது.

3 ஜி என்பது முகம் பார்த்துப் பேசுவது

இது 4 மெகாஹெர்ட்ஸ் என்றால் 3 ஜிக்கும் மெகாஹெர்ட்ஸ் வரும். முதலில் ஓவர்-1 ஜி. இரண்டு பேரும் பேசினால் அது 2ஜி. மூன்றாவது ஜி இருக்கிறது பாருங்கள், ஏலம் விட்டார்களே, லாபம் வந்ததே-அது என்னவென்றால் முகத்தைப் பார்த்துப் பேசலாம். கலைஞர் சென்னையிலிருந்து கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னத்தைத் திறக்கிறார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக-காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார். பாளையங்கோட்டையில் நிகழ்ச்சி நடக்கிறது.

60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்

இந்தச் செய்தியை 60 ஆண்டுகளுக்கு முன்னாலே தீர்க்கதரிசனமாக பெரியார் அவர்கள் சொன்னார். இனிமேல் வருகிற காலத்தில் ஒவ்வொருவருடைய கையிலும் தொலைபேசி இருக்கும். அதுமட்டு மல்ல; ஆளுக்கு ஆள் உருவம் காட்டிப் பேசு வார்கள்.

ஒரு வகுப்பில் ஓர் ஆசிரியர் இருந்தால் போதும் எல்லா வகுப்பு மாணவர்களும் அதைக் கேட்கலாம். வீடியோ கான்ஃபரன்சிங்கில் நேரடி யாகப் பேசலாம். 3ஜி டெலிஃபோன் வாங்கினால் அதில் உங்க ளுடைய உருவம் வரும். முகத்தைப் பார்த்துப் பேசலாம். ஒரே ஒரு வசதி குறைவு. நம்மாள் ஃபோனை எடுத்து வைத்துக்கொண்டு சொல்லு வான்:

ஓ அவர்தானுங்களே! அவர் இல்லிங்களே! என்று அவரே சொல்லிவிடுவார். இப்பொழுதுதான் வெளியே போனாருங்க என்று இவரே சொல்லுவார்.

நீங்கள் யாருங்க என்றுகேட்டால், நான் வேலைக்காரன் என்று சொல்லுவார். இதுதான் 3ஜி என்று பெயர். உருவத்தை நேரடியாகப் பார்த்துப் பேசுவது.

அதைவிட இன்னும் வேகமாகப் போவது என்னவென்றால் இஸ்ரோவுக்கெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்களே, இதெல்லாம் நான் காவது ஜெனரேஷன். வளர்ச்சி என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கிறது.

இந்த 2 ஆவது ஜி.யில் எப்படிக் கொண்டு போவது? அமைச்சர் நினைத்தால் உடனே உத்தரவு போட முடியாது. டிபார்ட்மென்ட் ஆஃப் டெலி கம்யூனிகேசன் என்று இருக்கிறது-தொலைத் தொடர்புத் துறை என்று இருக்கிறது.


டிராய் அமைப்பு

இன்னொன்று டிராய் என்கிற அமைப்பு. தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அமைப்பு. கூநடநயீடிநே சுநபரடயவடிசல ஹரவாடிசவைல டிக னேயை கூசுஹஐ இதை எப்படி கொடுக்க வேண்டும்? எப்படி நடத்த வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இதில் எல்லா நிபுணர்களும் இருக்கிறார்கள். எல்லா அமைப்பைச் சார்ந்தவர்களும் இருக்கி றார்கள். அதுதான் முடிவெடுக்கக் கூடிய அமைப்பு. அதையும் மீறி அமைச்சர் முடிவெடுக்க முடியாது. இந்த அம்சங்களை மக்களுக்கு யாரும் விளக்கு வதில்லை.

பிரதமர்கூட அப்படிச் சொல்ல முடியாது

இது ஏதோ அவரே சுதந்திரமானவர் மாதிரியும் அவரே முடிவெடுக்கிற மாதிரியும் நினைக்கக் கூடாது. யார் முன்னாலே வருகிறார்களோ அவர்களுக்கும் முன்னுரிமை முதலில் கொடுக்கப் படும். இது எனக்குத் தெரியாது என்று பிரதமர் சொல்லியிருந்தால்கூட-அது இவருடைய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல.

அந்த முடிவு யாருடைய காலத்தில் எடுக்கப் பட்டது? வாஜ்பேயி காலத்திலேயே எடுக்கப்பட்ட கொள்கை முடிவு-குசைளவ உடிஅந குசைளவ ளுநசஎநன. ஏனென்றால் எல்லா இடத்திற்கும் பரவலாகப் போக வேண்டும். எல்லா கிராமங்களுக்கும் டெலிஃபோன் போக வேண்டும்.

எல்லோர் கையிலேயும்...

எல்லோருடைய கையிலேயும் வரவேண்டும். அது நிறைய பேருக்குக் கிடைக்கக் கிடைக்க, பயன்பாடு அதிகமாக வர, வர அதனுடைய செலவு குறையும். செலவு குறையக் குறைய போட்டிகள் வரும்.

போட்டிகள் வரும்பொழுது கட்டணத்தினு டைய விகிதம் குறைந்தால்தான் அவர்கள் அந்தத் தொழிலை நடத்த முடியும்.


3 ஜி என்பது என்ன?

3 ஜி என்பது வேகமான தொழில்நுட்பம். உருவத்தைப் பார்த்து பேசக்கூடியது. இதே டிராய் என்ன சொன்னார்கள்? இதே அமைச் சர்கள் என்ன சொன்னார்கள்?

இந்த 2 ஜியில் மாறுதல் பண்ண வேண்டாம். 3 ஜி கொண்டுவருகிறோம் பாருங்கள், அதை வேண்டுமானால் ஏலம் விடலாம் என்று சொன்ன வுடனே இராசா சொன்னார், சரி தாராளமாக செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். அவர் ஒன்றும் ஆட்சேபணை செய்யவில்லை. அவர் இதில் ஒன்றும் குறுக்கே வரவில்லை.

ரூ.75 ஆயிரம் கோடி லாபம்

அதே இராசா 75 ஆயிரம் கோடி லாபத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றார். அந்த 75ஆயிரம்கோடி லாபம் என்பது யூகக் கணக்கல்ல. ஊழல் என்று சொல்லுகிறார்களே, குற்றம் சுமத்துகிறார்களே இப்படி நடந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 ஜி மூலம் 75ஆயிரம் கோடி என்பது மத்திய அரசின் கருவூலத்திற்குக் கிடைத்த பணம். இவை இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கனவு கண்டு ஒருவன் காதலியைக் கட்டிப் பிடித்துக்கொள்கிறான் என்பதற்கும், நேரடியாக ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக் கொண்டான் என்பதற்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.

பலருக்கு இப்பொழுது ஓர் ஆசை

அது கனவில்கண்ட காதல். பலபேருக்கு இப்பொழுது ஓர் ஆசை. அடுத்து எப்படியாவது நாம் ஆட்சிக்கு வந்துவிடமாட்டோமா? எங்கே யாவது மந்திரத்தில் மாங்காய் விழாதா? என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக அது நடக்காது.

இங்கே கூட நாளைய முதல்வர் என்று ரொம்ப பேருக்கு எழுதி வைத்திருக்கின்றார்கள். இப்படி நிரந்தரமாக எழுதி வைக்க வேண்டும். ஏனென்றால். தேர்தலுக்குப் பிறகும் அந்த போர்டு தேவை. அப்பொழுதும் அவர்களுடைய நம்பிக் கையை குறைக்கக் கூடாது.

நாளைய முதல்வர் ....

நாளைய முதல்வர். நம்பிக்கைதானே வாழ்க்கை. இந்தத் தேர்தலில் இல்லை என்றாலும், நாளைக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். யாரும் அசைக்க முடியாது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டினுடைய குடிமகன், சாதாரண ஏழை, எளிய மகன், பசி தீர்த்த மகன் முடிவு செய்துவிட்டான்.

பொற்கால ஆட்சியின் தொடர்ச்சி

மீண்டும் ஆறாவது முறை ஆட்சிக்கு வருவது பொற்கால ஆட்சியின் தொடர்ச்சியாக முதல்வர் கலைஞர்தான் ஆட்சிக்கு வருவார். இதை யாராலும் அசைக்க முடியாது. அது மட்டுமல்ல. போதுமான பலத்தோடு வருவார். சும்மா அவர் மிரட்டலாம், இவர் மிரட்டலாம் என்பதற்கு இங்கே இடம் கிடையாது. (பலத்த கைதட்டல்).

பொதுமக்கள் பார்க்கிறார்கள். பொதுமக்கள் முடிவு பண்ணியிருக்கிறார்கள். பொதுமக்களை நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் உண்டென்றால் அது கறுப்புச்சட்டைக்காரரைத் தவிர வேறு யாரும் கிடையாது (கைதட்டல்). ஏனென்றால் மக்க ளோடவே நான் பழகிக்கொண்டிருப்பவன்.

சில ஆசைகள் ஏற்பட்டிருக்கிறது

எனவே இதனுடைய அடிப்படை என்ன? நேற்று இதைப் பற்றித்தான் கேள்வி. பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப அழகாக பதில் சொல்லியிருக்கின்றார். நம்முடைய மகேந்திரன் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார். பார்ப்பனர்களுக்கு இப்பொழுது ஒரு ஆசை. கலைஞர் ஆட்சியை இல்லாமல் செய்து மீண்டும் பார்ப்பன ஆட்சியை தமிழகத்தில் உண் டாக்க நினைக்கிறார்களோ அதுபோல மத்திய அரசிலே மீண்டும் பார்ப்பன ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்கு சில ஆசைகள் வந்திருக்கிறது.

அதுவும் கனவு காண்கிற ஆசைதான். வேறு ஒன்றும் அதில் சந்தேகமே இல்லை. அவரையே கேள்வி கேட்கிறான், நீங்கள் எப்பொழுது போகப் போகிறீர்கள் என்று.

நான் எப்பொழுதும் போகிற மாதிரி இல்லை. மக்கள் கொடுத்திருக்கிற காலப்படி கடைசி வரைக்கும் எனது பணியை செய்வேன் என்று பதில் சொல்லியிருக்கிறார், உறுதியாக. காரணம் என்ன? நாட்டில் பார்ப்பனரல்லாத ஒரு பிரதமர், நாட்டில் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைமை இந்த இரண்டையும் அவனால் சகிக்க முடியவில்லை.

கலைஞரால்தான்-காங்கிரஸ்

என்னதான் சிண்டு முடித்தனம் பண்ணினாலும் கலைஞரால்தான் காங்கிரஸ் நிலையாக இருக்க முடியும் என்று உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நிலை. எதார்த்த நிலையைத் தெரிந்து கொண்டிருக் கின்றார்கள். ஆகவே எத்தனை சங்கதி? மீனவர் பிரச்சினை, மற்றவர்கள் பிரச்சினை, ஈழத்துப் பிரச்சினை இவைகளில் திமுக உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த உரிமைகளுக்காகப் போராடத் தயாராக இருக்கிறோம்.

கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்ளாதீர்கள்!

ஆனால் அடித்தளத்தில் இதற்கு நேர் விரோத மானவர்கள் இருப்பார்கள், பாருங்கள். அவர்களைக் கொண்டு வந்துவைத்துவிட்டு, நீங்கள் கொள்ளிக்கட்டையை எடுத்து வைத்துக்கொண்டு தலையைச் சொறிந்துகொண்டிருக்க முடியாது. ஆகவே இதைப்பற்றியே நிறைய சொல்லாம். ஒரு செய்தியாளர் கேள்வி கேட்கின்றார்.

இராஜா பிரச்சினைப் பற்றி சொல்லுகிறார். என்ன இப்படி சொல்லுகிறார்களே என்று ராசாவைக் கேட்டேன். அன்றைக்கே இராசா கடிதம் எழுதினார். நான் நடப்பதில் திறந்த புத்தகமாகத்தான் நடந்து கொள்வேன். வெளிப்படையாகத்தான் எல்லாவற் றையும் செய்யலாம். இப்பொழுது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அப்படித்தான் செய்வேன் என்று பதில் எழுதியிருக்கிறார்.

பிரதமர் பேட்டி

பிரதமர் அளித்த பேட்டியை நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருக்கலாம். அந்தத் தொலைக் காட்சிப் பேட்டியை அப்படியே எடுத்து பத்திரிகையில் போட்டிருக்கின்றார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியிருக்கின்ற கேள்வி-பதிலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியைச் சொல்லுகின்றேன். மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச்சேருவதில்லை.

போர்க்களத்தில் முதல் களபலியாவது உண்மை தான் என்று ஒரு பழமொழி உண்டு. அது வெளிநாட்டில். நம்மூரிலும் போர்க்களம் நடை பெறுகிறது. அது ஆரிய-திராவிடர் போர்க்களம்.


ஏலம் விடவில்லை

இதை ஏலம் விடவில்லை. அதனால்தான் நட்டம் வந்திருக்கிறது. ஏலம் விடுவதற்கு டிராய் என்கிற அமைப்புதான் முடிவு செய்யக்கூடிய அமைப்பு. இந்த டிராய் அமைப்பில் நிதித்துறையைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அரசு வகுத்த கொள்கைப்படிதான் அமைச்சர் நடக்கமுடியுமே தவிர, அமைச்சர் அதைத் தாண்டி நடக்கக்கூடிய வாய்ப்பு கிடையாது. நடுநிலையிலே பொது நிலையிலே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய செய்தி இது. டிராய் என்கிற அமைப்பு ஏலம் கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதற்கு மேல் இருக்கின்ற டெலிகாம் கமிசனும் கூடாது என்று சொல்லியிருக்கிறது.

அமைச்சரவையின் கொள்கை முடிவு

குறைந்தபட்சம் 2 ஜி ஸ்பெக்ட்ரத்திற்காவது நிச்சயமாக இந்த ஏலமுறையைப் பின்பற்ற முடியாது என்று டிராய் சொல்லியிருக்கிறது. டெலிகாம் கமிசன் சொல்லியிருக்கிறது. அடுத்தது 3 ஜி வரட்டும். 3 ஜியில் ஏலம் விடலாம் என்று சொல்லியிருக்கின்றார். அதை விட ஒரு மனிதன் எவ்வளவு நியாயமாக நடந்துகொள்ள முடியும்?

நினைத்துப் பாருங்கள். 2003இல் அமைச்ச ரவை முடிவு. அந்த அமைச்சரவை முடிவுதான் கொள்கை முடிவு. இது ஒரு கொள்கை முடிவு. இதில் எனக்கென்ன தலையிட வேண்டியிருக் கிறது என்று ரொம்ப தெளிவாக சொல்லியிருக் கின்றார்.

உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி மாதிரி இருந்திருக்கிறார்களே தவிர, வேறு அல்ல. இப்பொழுது இருக்கிற பாப்பாத்தி பகிரங்கமாகவே உப்புகண்டம் சாப்பிடுவார் (சிரிப்பு-கைதட்டல்). 2 ஜியைப் பொறுத்த வரையிலே இந்த முறைதான் பொருத்தமானது.

3 ஜிக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம் எந்த நிதி அமைச்சகம் முதலில் மாறுபட்ட கருத்தைச் சொல்லிற்றோ அதே நிதியமைச்சகம் பின்னாலே ஒப்புக்கொண்டது. இவ்வளவு ஆதாரம் இருக் கிறது. ஆ.இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை

ஆ.இராசா தனியாக ஒரு கொள்கை முடிவை உருவாக்கவில்லை. இராசா ஏற்கெனவே அரசு எடுத்த கொள்கை முடிவைத்தான் தொடர்ந்தார். இன்றைக்குப் பல விசயங்கள் வருகிறது. ஒருவன் கேட்கிறான், 2ஜியில் ஒரு நட்டமும் வரவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் சொல்லி யிருக்கிறாரே என்று-கேட்டவுடனே அதற்கு நல்ல பதில் சொல்லியிருக்கின்றார்.

நட்டம் என்று சொல்வது முறையல்ல

இழப்பு, இழப்பு என்று சொல்லுகிறார்களே அதைப்பற்றி பிரதமர் சொல்லுகின்றார். அரசாங்கத்தினுடைய கொள்கை முடிவு என்னவென்றால் ஏலம்விடக் கூடாது என்று வந்ததினாலேதான் அங்கு ஏலம் விடப்படவில்லை. அதைப் போய் நீங்கள் நட்டம் என்று சொல்லுவது முறையல்ல என்று சொல்லிவிட்டு நல்ல உதாரணம் சொல்லுகின்றார்.

பிரதமர் சொல்லுகிறார்

பிரதமர் சொல்லுகிறார்-உணவுக்காக மானியம் தருவதில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படு கிறது. அதை பொதுமக்களுக்கு இழப்பு என்று சொல்லலாமா?

அது மாதிரி டெலிஃபோன் எல்லா மக்களாலும் பேசப்படவேண்டும். எல்லா இடங்களுக்கும் பரவவேண்டும் என்பதற்காக கை கொள்ளப்பட்ட கொள்கையே தவிர, இதற்குப் போய் இழப்பு என்று எப்படி நீங்கள் சொல்லாம்.

உணவுக்காக ரூ.80,000 கோடி மானியம்

உணவு மானியத்தில் 80 ஆயிரம் கோடி இழப்பீடுதான். நீங்கள் சந்தைக்கடையில் விற்க வேண்டும் என்று சில பேர் சொல்லலாம். இப்படி விற்றால் லாபம் என்று சொல்லலாம். ஆனால் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டுமே?

1 கிலோ அரிசியை 8 ரூபாய்க்கு வாங்குகிறது

ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கலைஞர் கொடுக்கிறார். இதை இவர்கள் உணவு கார்ப்பரே சனிலிருந்து எட்டு ரூபாய்க்கு வாங்குகிறார்கள். ஏழு ரூபாய் அரசாங்கத்திலிருந்து பணம் போடுகிறார்கள்.

எட்டு ரூபாய்க்கு இந்த அரிசியை விற்றால் எவ்வளவு லாபம் வரும்? அந்த லாபத்தை எல்லாம் கலைஞர் நட்டப்படுத்தினார். இவரைக் கொண்டு போய் சிறையில் வையுங்கள் என்று கேட்க முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களுக்கு இதை புரியாமல் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் எதிர்க் கட்சியினர் இந்த முயற்சியை எடுக்கிறார்கள்.

உரமானியம் ரூ.60,000 கோடி

அதே போல உரத்திற்கு மானியம் கொடுக்கிறோம். ஒவ்வொரு வருடமும் 60,000 கோடி மானியம் கொடுக்கிறார்கள். உரம் மக்களுக்குப் பயன்பட வேண்டுமே என்பதற்காக அதைப் போய் இழப்பு என்று சொல்ல முடியுமா?

ஏழை கிராம மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். ஏழை விவசாய மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும். அதற்காகத்தான் மானியம் வழங்கப்படுகிறது.

மண்ணெண்ணெய்

அதேபோல மண்ணெண்ணெய்யை கூடுதல் விலைக்கு வாங்கி, விலையைக் குறைத்துக் கொடுக்கின்றோம். அதை இழப்பு என்று சொல்ல முடியுமா? இப்படி எல்லாம் பிரதமர் தெளிவாகக் கேட்டிருக்கிறார்.

அப்படி இருந்தும் துங்குகிறவனை எழுப்பலாம். தூங்குகிறமாதிரி பாசாங்கு செய்கிறவனை எங்காவது எழுப்ப முடியுமா? நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்ற நினைக்காதீர்

ஆகவே மக்களை ஏமாற்றலாம் என்று நீங்கள் நினைத்தால், இந்த உண்மைதான் எல்லா இடங்களுக்கும் போய்ச்சேரும். வழக்கு என்றால் எல்லா இடங்களிலும் வழக்கு இருக்கும். வழக்கை சந்திப்பார்கள். வழக்கைப் பற்றி கவலை இல்லை. கலைஞருக்கு இருக்கிற பெருந்தன்மை இது!

இடையூரப்பா என்று ஒரு முதல்வர்

பக்கத்திலே கருநாடகத்திலே ஒரு முதலமைச்சர் இருக்கிறார். பா.ஜ.க முதலமைச்சர். இடையூரப்பா என்று பெயர். அவருக்கு ஆட்சியில், கட்சியில் ரொம்ப இடையூறப்பா அவருக்கு.

கட்சிக்காரர்களே இடையூறு அவர்களுக்கு. எடியூரப்பா என்று முதலில் தமிழ்ப் பத்திரிகையில் போட்டார்கள். பிறகு இடையூரப்பா என்று போட்டார்கள்.

அவர்மீது புகார்மீது புகார். அதற்கு மேல் கோயில் கோயிலாகச் சுற்றி பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்று ஒருவரிடம் இடையூரப்பா திடீரென்று போய் கேட்டார்.

நிர்வாணமாக...

நான் இதிலிருந்து தப்பிப்பதற்கு என்னங்க வழி என்று கேட்டார். நிர்வாணமாக படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அவர் அதையும் செய்துவிட்டார்.

நமது நாடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா? அறிவியல் துறையில் பார்த்தால் ஒரு பக்கம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் இன்னொரு பக்கம் நிர்வாணமாகப் படுத்து பதவியைக் காப்பாற்று கின்ற முதலமைச்சர். இவர்கள்இந்த நிலையில் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். ஊழலை வண்டி, வண்டியாக வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.

பைபிளில் ஒரு கதை

பைபிளில் ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து விபச்சாரி என்று சொல்லுகின்ற நேரத்திலே கல்லெடுத்து அடிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது நீங்கள் யார் யோக்கியமானவர்களோ அவர்கள் கல் லெடுத்துப் போடுங்கள் என ஏசுநாதர் சொன்னார் என்று சொல்லுவார்கள்.

இது நடந்ததா? இல்லையா? என்பது வேறு. இந்தத் தத்துவம் சரியான தத்துவம். முதலில் நீ யோக்கியமாக இருந்தால் முதல் கல்லை எடுத்துப் போடு. அதுமாதிரி இருக்கக் கூடிய தத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழ்ச்சிப் போராட்டம்

எனவேதான் நண்பர்களே! தி.மு.க ஆட்சிமீது குறை சொல்ல எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடனே மத்தியிலும் பார்ப்பனர் ஆட்சி வரவேண்டும். மாநிலத்திலும் பார்ப்பனர் ஆட்சி வரவேண்டும். மிகப்பெரிய ஒரு சூழ்ச்சிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு இந்த 2 ஜியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

அதற்கு ஆ.இராசா ஒரு பலிகடா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கிற மாதிரி அவர் பலிகடா ஆகிவிட மாட்டார். மீண்டு வருவார். மீண்டும் வருவார்.

தி.மு.க ஆட்சி மீண்டும் வரும்

தி.மு.க ஆட்சியே மீண்டும் வரும். ஆறாவது முறையாக கலைஞரே மீண்டும் முதல்வராக வருவார் என்று கூறி உரையாற்றினார்.

http://viduthalai.in/new/home/archive/4202.html
http://viduthalai.in/new/home/archive/4319.html
http://viduthalai.in/new/home/archive/4355.html
http://viduthalai.in/new/home/archive/4443.html
http://viduthalai.in/new/home/archive/4497.html
http://viduthalai.in/new/page-4/4554.html