கோயம்புத்தூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கே.ஜி. அறச்சாலை தற்போது கீழ்க் கண்ட நிறுவனங்களை நடத்தி வருகிறது.
கோவையில் நான்கு பள்ளிகள்
அய்ந்து கல்லூரிகள்
கே.ஜி. மருத்துவ மனை
கே.ஜி. இலவசக் கண் மருத்துவ மனை
கே.ஜி. மருத்துவ அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனம்
கே.ஜி. சுகாதார அறிவியல் கல்லூரி
கே.ஜி. பிசியோதெரபி கல்லூரி
கே.ஜி. செய்தி மற்றும் தகவல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,
கே.ஜி. செய்தி மற்றும் தகவல் நிருவாகக் கல்வி நிறுவனம்.
கே.ஜி. தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
முன்னேற்றம் என்பது தானாக ஏற்பட்டுவிடுவதல்ல; அதற்குப், பொறுமையும், கட்டுக்கடங்கா ஆர்வமும், எதிர்கால நோக்கும், அர்ப் பணிப்பு உணர்வும் தேவை என்ற தத்துவத்தைக் கடைப் பிடித்து செயல்பட்டுவரும் இந்த அறச்சாலை, தேசிய அளவி லான புகழ்பெற்ற சிறப்பான மருத்துவம் மற்றும் கல்வி மய்யத்தை உருவாக்குவதைத் தன் நோக்கமாகக் கொண்டு அதற்கேற்ற செயல்திட்டங்களை வடிவமைத்து முழுமை யாகச் செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கே.ஜி.மருத்துவமனை கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி மக்களுக்குப் பெரும் அளவில் சேவை செய்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக விளங்குகிறது.
புதிய நடைமுறைகளைக் கண்டுபிடித்துச் செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த அறச்சாலையின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக அமைந்துள்ளது. இந்த வகையில் தகவல் தொழில்நுட்பம், பல்வேறுபட்ட மருத்துவத் துறைக் கல்வி நிறுவனங்களை இந்த அறச்சாலை தொடங்கி வெற்றிகரமாகவும், பயன் நிறைந்த வகையிலும் நடத்தி வருகிறது.
மிகச்சிறந்த மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் புகழ்பெற்று விளங்கும் பெருமக்கள் ஆகி யோரை அடையாளங்கண்டு பாராட்டும் முகத்தான், சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, கடந்த பல ஆண்டுகளாக ஒரு விருதினை அவ்வப்போது கே.ஜி. அறச்சாலை வழங்கி வருகிறது.
இந்த வரிசையில் வரும் 25.2.2011 அன்று கோவையில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் கீழ்க் குறிப்பிட்ட இரண்டு பெருமக்களுக்கு இந்த ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க இந்தியர் விருது வழங்கப்படவுள்ளது.
1. டாக்டர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், மற்றும் வேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
2. உயர்திரு வெங்கட் சங்கவல்லி, நிறுவனத் தலைவர், நெருக்கடி நிலை நிருவாகம் மற்றும் ஆய்வு நிறுவனம்.
இதற்கு முன்பு இவ்வாறு விருது அளிக்கப்பட்ட பெருமக்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வருமாறு:
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக முன்பு இருந்தவர்)
டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்டு (உலகின் முதல் மாற்று இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்)
டாக்டர் ஜி.மாதவன் நாயர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் தலைவர்)
திரு. நந்தன் எம். நிலகனி (இன் ஃபோசிஸ் நிறுவனத்தின் மேனாள் இணைத் தலைவர்)
டாக்டர் என். ராம். முதன்மை ஆசிரியர், இந்து பதிப்பகக் குழுமம்.
டாக்டர் எல். சுப்பிரமணியம், வயலின் மேதை
பேராசிரியர் டாக்டர் யோகோ காடோ, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ஃப்யூஜிதா சுகாதாரப் பல்கலைக் கழகம், ஜப்பான்.
டாக்டர் லலிகம் என். சேகர், அமெரிக்காவின் புகழ் பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்.
டாக்டர் வி. ஜீவானந்தம், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், மார்பு மற்றும் இதய அறுவை சிகிச்சைத் துறை, சிகாகோ பல்கலைக் கழகம்.
டாக்டர் ராமகிருஷ்ண பாண்டா, உதவித் தலைவர் மற்றும் மார்பக, இதய ரத்தநாள அறுவை சிகிச்சை மருத்துவர், ஆசிய இதய மருத்துவ நிறுவனம், மும்பை.

0 comments:
Post a Comment