குறும்படங்கள், திரைப் படங்கள் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தியைச் சொல்லும்படியாக இருக்க வேண்டும். சமுதாயத்தைப் புரட்டிப் போடும்படியாக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பெரியார் திரை விருது வழங்கும் விழா நேற்று (24.2.2011) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திறந்தவெளி அரங்கில் மகிழ்ச்சிக்குரிய விழாவாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் கூறியதாவது:
இனிய-எளிய விழா
மிகுந்த மகிழ்ச்சியோடும் மிகுந்த உற்சாகத் தோடும் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான பெரியார் திரை விருது வழங்கும் விழா இங்கே எளிய முறையிலே இனிய விழாவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் எந்தக்கொள்கைக்காகப் பாடுபட்டாரோ அந்தக் கொள்கையைச் சார்ந்த வர்கள் ஊடகத்துறையிலே இருக்கிறார்கள். திராவிடர் இயக்கக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
வெற்றிமாறன்
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக் கரசு அறிமுகப்படுத்தும்பொழுது கடலூர் இளம் வழுதி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதை எனக்குச்சொல்லி அறிமுகப்படுத்தினார். நான் அதிகமாக திரைப்படத்தைப் பார்க்காதவன். இருத்தாலும் திரைப்படத்தைப்பற்றிச் சில தோழர்கள் என்னிடம் சொல்லுவார்கள்.
கவி.பெரியதம்பி
அதேபோல முத்துக்கு முத்தாக, அய்வர் இசை அமைப்பாளரான கவி பெரியதம்பி, நம்முன் புதைந்திருக்கின்ற ஆற்றல்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்று அவருக்கே உரிய முறையில் திறம்பட அழகாகச் சொன்னார். நல்ல பகுத்தறி வாளர் அவர்.
ஒளிப்பதிவாளர்-சத்யா
அதேபோல கடும் உழைப்பாளியாக, சிறந்த ஒளிப்பதிவாளராகத் (யுத்தம் செய்) திகழ்கின்ற நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தவர் சத்யா என்பதில் எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஒரு காலத்திலே தமிழர்கள் தங்களை மேடையிலே அடையாளம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் பாராட்ட அழைத்த பொழுது பெரியார் திடலுக்கு வர பயப்பட்ட வர்கள் எல்லாம் உண்டு.
ஒரு நடிகர் பேசவே இல்லை
புரட்சிக் கவிஞர் விழாவில் ஒரு நகைச்சுவை நடிகரைப் பாராட்டி இதே பெரியார் திடலில் அவருக்கு விருதுகொடுக்க அழைத்திருந்தோம். நம்முடைய குடும்பத் தலைவர், திராவிடர் இயக்கத் தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் புரட்சிக் கவிஞர் விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.
அந்த நகைச்சுவை நடிகருக்கு பெரியார் விருது கொடுக்கப்பட்டது. அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். அவர் கடைசியில் விருது பெற்றுக்கொண்டு இன்றைக்கு நான் மவுன விரதம் என்று பேசாமலே சென்றுவிட்டார். எனவே இப்படிப்பட்ட நிலைகள் எல்லாம் உண்டு.
கலை என்பது மக்களுக்காக!
இங்கே காட்டப்பட்ட குறும்படங்கள் முற் போக்கு சிந்தனையுள்ள குறும்படங்கள். நல்ல சிந்தனையுள்ள குறும்படங்கள். திரைப்படங்களோ அல்லது குறும்படங்களோ சமுதாயத்தைப் புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு, நல்ல சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இருக்க வேண்டும்.
திரைப்படத்தை இயக்குகிறவர்களுக்கு நல்ல தெளிவு இருக்க வேண்டும். கலை என்பது கலைக்காக அல்ல; கலை என்பது சமுதாயத்தை உயர்த்துவதற்காக இருக்க வேண்டும்.
எந்தப் படத்திலும் ஒரு செய்தி இருக்கவேண்டும்
எந்த ஒரு படத்திலும் ஒரு செய்தி (Message) கட்டாயம் இருக்க வேண்டும். அது மக்களுக்குப் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்.
திரைப்படங்கள் பொழுதுபோகுக்காக இருக்க லாம். ஆனால் அது பயனுள்ள வகையில் பொழு தைப் போக்குவதாக இருக்க வேண்டும். ஊடகத்துறையினர் நினைத்தால் எதையும் மாற்றிக்காட்ட முடியும். பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற பாராட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையுடன் இணைந்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உறுதுணையாக இருக்கும். இதை பொது மக்களுடைய விழாவாக ஆக்க வேண்டும்.
கல்வி என்பது மனிதனின் உள்ளே இருக்கின்ற ஆற்றலை வெளியே கொண்டுவருவதாகும். அப்படிப்பட்ட ஆற்றல்-நல்ல புரட்சிகர சிந்தனை கொண்டதாக இருக்க வேண்டும்.
இங்கே கோயிலைப் பற்றி ஒரு குறும்படத்தில் காட்டினார்கள். அவர்கள் பொதுவுடைமை எண்ணம் கொண்ட தோழர்களாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். ஒரு காலி இடத்தில் (சிறுநீர் கழிக்கின்ற இடத்தில்) கோயிலை ஏற்படுத்துகிறார்கள். பிறகு தானே உண்டியல் வருகிறது. கோயில்கள் தோன்றியது ஏன்? எதற்காக? என்று நானே ஒரு நூலை எழுதியிருக்கின்றேன். அரசாங்கத்திற்கு வருமானத்தை உருவாக்க உண்டியலை வைத்து, அதன் மூலம் பணம் பெற செய்யப்பட்ட ஏற்பாடுதான் என்பதை கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.
மக்களை மிரட்டி, பூதம், பேய், பிசாசு என்று சொல்லி கோவிலுக்கு வரவழைத்து உண்டியலில் பணம் போட ஏற்பாடு செய்யப்பட்டதுதான் கோவில். காட்டப்பட்ட கோயில் குறும்படத்தில் அர்ச்சகர் ஆதிக்கம் எப்படியிருக்கிறது என்பதை யும், நமக்கு உரிமை மறுக்கப்பட்டிருப்பதையும் காட்டியி ருக்கலாம்.
தியாகராயர் நகர் பேருந்து நிலையம்
1971ஆம் ஆண்டு தியாகராயர் நகரில் ஒரு திடீர் பிள்ளையாரை ஏற்படுத்தினார்கள். நாம்தான் அதைக் கடுமையாகக் கண்டித்து எதிர்த்தோம். அன்றைக்கு அந்தப் பிள்ளையாரை எடுக்க வில்லையென்றால் தியாகராயர் நகர் பேருந்து நிலையமே பிள்ளையார் கோவிலாக மாறியிருந் திருக்கும்.
சாலையில், நடைபாதையில் கோயில்களைக் கட்டக்கூடாது- இருக்கக் கூடாது என்று அதை இடித்துத் தள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது; உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பே இருக்கிறது.
கோ.சாமிதுரை சொன்னார்...
இங்கே நமது கழகப் பொருளாளர் சாமிதுரை அவர்கள் பேசும்பொழுது கூட சொன்னார். கருத்துள்ள முற்போக்கு சிந்தனையுள்ள குறும் படங்கள் மக்கள் மத்தியில் போக வேண்டும் என்று சொன்னார். நமது பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை ஒரு தனி டீம்மாதிரி பிரச்சாரத்தை இனி நடத்து வார்கள். நமது பொதுக்கூட்டங்கள் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பு இதுபோன்ற நல்ல குறும்படங் களை நாம் காட்டவேண்டும்.
பிரச்சார யுக்தியில் மாறுதல்
ஆகவே, நமது பிரச்சார முறைகளில்-பிரச்சார யுத்திகளில் மாறுதல் இருக்க வேண்டும். சமு தாயத்தை மாற்றி அமைக்கக்கூடிய அளவுக்கு உங்களுடைய அறிவு, ஆற்றல் இருக்க வேண்டும். அரங்கத்திற்குள் இதுபோன்ற படங்களைப் போடாமல் திறந்தவெளியில் மக்கள் பார்க்கும் படியாக-கூத்துப்பட்டறை மாதிரி இருக்க வேண்டும். எளிய முறையில் இருக்கவேண்டும்.
கிராமப் பிரச்சாரத்தில்...
நமது கிராமப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுத்த வேண்டும். பெரியார் ஊடகத் துறைக்கு இன்னும் வேறு வசதிகள் என்னவோ அதையும் நாங்கள் செய்து தருவோம்.
எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப் படுத்துங்கள். எது நம்மை இணைக்கிறதோ அதை அகலப்படுத்துங்கள். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி தமது உரையில் குறிப்பிட்டார்.
வெற்றிபெற்ற படங்களுக்கு தமிழர் தலைவர் பரிசு, பாராட்டு
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, பகுத்தறிவாளர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பெரியார் திரை விருது வழங்கும் விழா நேற்று (24.2.2011) சென்னை-பெரியார் திடலில் நடைபெற்றது. கீழ்க்கண்டோர்க்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பொன்னாடை அணிவித்து பரிசு நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார். அதன் விவரம் வருமாறு.
முதல் பரிசு: தீதும் நன்றும் - இயக்குநர் சி.விஜயன் = பரிசுத் தொகை ரூ.10,000, விடுதலை சந்தா, சான்றிதழ் கேடயம் ஆகியவற்றோடு 2010ஆம் ஆண்டுக்கான பெரியார் திரை குறும்பட விருது வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு: அவள் - இயக்குநர் பிரசாந்த் கானத்தூர் = பரிசுத் தொகை ரூ.5000, உண்மை சந்தா, சான்றிதழ், கேடயம்
மூன்றாம் பரிசு: வர்ணம் - இயக்குநர் பகத்சிங் கண்ணன் = பரிசுத் தொகை ரூ.3000, உண்மை சந்தா, சான்றிதழ், கேடயம்
சிறப்புப் பரிசு: ஒரு ஊருல - இயக்குநர் க.பொன்ராஜ் = பரிசுத் தொகை ரூ.1000, பெரியார் பிஞ்சு சந்தா, சான்றிதழ், கேடயம்
ஆறு ஊக்கப் பரிசுகள்: பரிசுத் தொகை தலா ரூ. 500, பெரியார் பிஞ்சு சந்தா, சான்றிதழ் கேடயம்
1. நிஜம் - இயக்குநர் கி.தளபதிராஜ்
2. இப்படிக்குப் பேய் - இயக்குநர் அமுதா
3. என் விலை 230 ரூபாய் - இயக்குநர் ரவிஅரசு
4. தாயுமானவன் - இயக்குநர் ச.முத்தமிழ்
5. பிம்பம் - தி.இராஜேந்திரகுமார்
6. நேர்த்திக்கடன் - இரா.சுகந்தகுமார்
அனைவர்க்கும் தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் நூலும், கழக இதழ்கள் மற்றும் வெளியீடுகள் வழங்கப்பட்டன.
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் பெரியார் திரை விருது வழங்கும் விழா
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பெரியார் திரை விருது வழங்கும் விழா நேற்று (24.2.2011) மாலை 6.30 மணிக்கு சென்னை- பெரியார் திடலில் திறந்த வெளி மைதானத்தில் மகிழ்ச்சி நிறைந்த விழாவாக நடைபெற்றது.
முதலில் ஒரு ஊரிலே, வர்ணம், அவள், நிஜம், தாயுமானவன் ஆகிய குறும்படங்கள் காட்டப் பட்டன. அனைவரும் அதை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.
பின்னர் இரவு 7.15 மணிக்கு விழா தொடங்கியது. பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் அமைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னிலை
திராவிடர் கழக பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் தி.பெரியார் சாக்ரடீசு அறிமுகவுரையாற்றினார்.
கவிஞர் ராஜசேகர் இணைப்புரை வழங்கினார். அடுத்து யுத்தம் செய் திரைப்பட ஒளிப்பதிவாளர் சத்யா, முத்துக்கு முத்தாக, அய்வர், இசைய மைப்பாளர் கவி.பெரியதம்பி, பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய திரைப்படங்களின் பிரபல இயக்குநர் (இயக்குநர் பாலு மகேந்திராவின் 52 படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றிவர்) வெற்றிமாறன் ஆகியோர் உரையாற்றினர்.
பாராட்டு
நிழல் திருநாவுக்கரசு, தமிழ் ஸ்டுடியோ அருண், குணா, இனமான நடிகர் மு.அ.கிரிதரன், இரா.தமிழ்ச் செல்வன், பா.இராமு, கோவி.கோபால், பிரிட்ஜ் ரகுராமன், த.திருநாவுக்கரசு, இயக்குநர் அகரன், பாரி, பகுத்தறிவு,
சென்னை ஆதித்யா ஃபவுண்டேசன் ஆதித்யா சம்பத்ராஜ்
ஆகியோருக்கு விழாக் குழு சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வைகள் அணிவித்து பாராட்டிய பின் சிறப்புரையாற்றினார்.
மக்கள் விரும்பும் விழா
நிறைவாக உடுமலை வடிவேல் நன்றி கூறினார். இவ்விழா ஓர் எடுத்துக்காட்டான, மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விழாவாக இனத்திற்கு எழுச்சியை ஏற்படுத்தும் விழாவாக அமைந்திருந்தது என்பதில் அய்யமில்லை.
http://viduthalai.in/new/home/archive/4198.html

0 comments:
Post a Comment